- Tuesday
- May 13th, 2025

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்தில் இருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரதங்கள் இயங்கும். இந்த நாட்களில் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக...

ஈழத்தில் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் பிரதான பக்கபாட்டு நகைச்சுவை மற்றும் நகைச்சுவை நாடக கலைஞர் , அச்சுவேலி தபால் அலுவலக ஓய்வுநிலை உத்தியோகத்தர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் இறைபதமடைந்துள்ளாா். அச்சுவேலியில் உள்ள அவருடைய வீட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இறைபதமடைந்த விஜயநாதனின் இறுதிச் சடங்குகள் அன்னாருடைய இல்லத்தில் இன்றைய தினமே இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது....

ஆலயங்களில் ஏற்படும் பிரச்சனைகளை இந்துக்கள் ஆகிய நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம் கந்தசுவாமி ஆலய ஆதீன குரு ரத்தினசபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாவலர் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். வரலாற்று பிரசித்தி பெற்ற காரைநகர் சிவன் ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்வதா? திருவம்பாவை உற்சவத்தினை நடத்துவதா?...

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இன்று(செவ்வாய்கிழமை) முதல் அமலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு துறை அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் என்பன இதில் அடங்குவதாக...

யாழ்.மருதங்கேணி கடற்பரப்பில் தத்தளித்து இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்ட 104 பேரும் யாழ். சிறைச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) காங்கேசன்துறை கடற்படை முகாமில் இருந்து 104 பேரும் இரண்டு பேருந்துகளில் யாழ். சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோதே நடுக்கடலில் படகு பழுதடைந்து நடுக்கடலில் தத்தளித்தனர்....

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் வைத்து கைது செய்துள்ளனர். குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர்...

நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும். மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்....

யாழ்.மாவட்டத்திலும் பாண் விலை 10 ரூபாவால் இன்று திங்கட்கிழமை(19.12.2022) நள்ளிரவு முதல் குறைவடைந்து 190 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென யாழ். மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் மற்றும் யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகிய இரண்டும் இணைந்து முடிவெடுத்துள்ளன. சனிக்கிழமை (17) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலை பத்து...

இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்துள்ளார். இந்த இன்ஃப்ளூவன்ஸா வைரஸ் பரவுவதால், கடுமையான தொண்டை புண் மற்றும் காய்ச்சல் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே எப்போதும் முகமூடிகளை...

கனடாவுக்குச் சட்டவிரோதமாக படகில் சென்று வியட்நாமில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முற்பட்டு படகு பழுதடைந்த நிலையில் நடுக் கடலில் தத்தளித்த சுமார் 303 அகதிகளும் கடந்த மாதம் 08 ஆம் திகதி விநயட்நாம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இந் நிலையில் தங்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப...

யாழ்பாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கு தயாராக இருந்த கஞ்சா கலந்த (மாவா) போதைப்பொருள் யாழ்.மாவட்ட பொலிஸ் புலன்னாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாடசாலை மாணவர்களுக்கு விற்பதற்கென தயாராக இருந்த 3 கிலோ 500 கிராம் எடை உடைய கஞ்சா கலந்த மாவா பொருள்...

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். அதன்படி விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை நாளை மறுதினம் ஆரம்பிப்போம் என்றும் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்டார். இதேநேரம் உயர்தரப் பரீட்சையை ஜனவரி 23ஆம் திகதி நடத்துவதற்கான ஆயத்தங்களைச் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், மே...

போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை ஆரம்பிக்கும் நோக்கில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இன்று (திங்கட்கிழமை) கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்பது தொடர்பில் இங்கு விவாதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை முதற்கட்டமாக கொழும்பு மாவட்டத்தில் 200 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அண்மையில்,...

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கங்கா (46) மற்றும் சொர்ணகலா (22) என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு பெண்களும் சென்னை முகவரியுடன் கூடிய இந்திய கடவுச்சீட்டையும் இலங்கைக்கான சுற்றுலா விசாவையும்...

22 ஆவது உலக கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் ஆர்ஜன்டீனா அணி மூன்றாவது முறையாகவும் சாம்பியன் பட்டத்தை வெற்றுள்ளது. 32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி கட்டாரில் கோலாகலமாக ஆரம்பமாகியது. லீக் சுற்றுகள், நாக் அவுட் சுற்றுகளின் முடிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸும், முன்னாள் சாம்பியன் ஆர்ஜன்டீனாவும்...

கிழக்கு, ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்படவுள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பேரில் இடம்பெறும் இந்த பரீட்சையை அடுத்து 26000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு முன்னர் இவர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தவிர...

காரைக்கால்-காங்கோன்துறை கப்பல் சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ்.வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார். யாழ்.வணிகர் கழகத்தில் நேற்று(18.12.2022) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்க்கிறோம். இரண்டு நிறுவனங்கள் இதை ஆரம்பிப்பதற்கான கலந்துரையாடலை...

உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன்போது உக்ரைன் மீது ஒரே நாளில் ரஷ்யா 60க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது. இதனால் கீவ் நகரத்தின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால், அங்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன்,மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய...

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த போராட்டம், அங்கிருந்து வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக...

All posts loaded
No more posts