Ad Widget

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!

திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு சந்தையில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) யாழ். மாவட்டத்தில் உள்ள சந்தை வியாபார நிலையங்களில் விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டிருந்தனர். இதேவேளை யாழ். நல்லூர் திருநெல்வேலி வியாபார சந்தைப்பகுதியிளும் விற்பனை மும்முரமாக இடம்பெற்றிருந்தது. இதன்படி வருகின்ற புதன்கிழமை வீடுகளில் திருக்கார்த்திகை திருநாள் இடம்பெற்ற...

இன்று இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடை !

திட்டமிடப்பட்டபடி இன்று திங்கட்கிழமை இரண்டு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்விநியோகம் தடைப்படவுள்ளது. இந்த மின்வெட்டு முறைமைக்கு நேற்று அங்கீகாரம் வழங்கியதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Ad Widget

தென்மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்!

கபே அமைப்பின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இதன் போது யாழ் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனையும் சந்தித்து கலந்துரையாடி இருந்தனர். இதற்கமைய யாழிற்கு விஜயம் செய்துள்ள இவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் பார்வையிட்டனர். இதேவேளை கபே அமைப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த விஐயம்...

மூன்றாம் தவணையின் முதற்கட்டம் ஆரம்பம்!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (05) ஆரம்பமாகின்றது. 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 2 ஆம் திகதி நிறைவடைந்தது. அதன்படி இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதற்கட்டம் நடைபெறவுள்ளதோடு, நத்தார் பண்டிகை காரணமாக எதிர்வரும்...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சொகுசு பேருந்து விபத்து! 22 பேர் வைத்தியசாலையில்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. விபத்தில் 22 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மூன்று மடங்காக அதிகரித்துள்ள பாடசாலை கட்டணம்!

அடுத்த வருடத்திற்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் அறவிடப்படும் கட்டணம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(04.12.2022) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் கொடுப்பனவு இதுவரை பெற்றுக்கொடுக்கப்படாமை காரணமாகவே பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால்...

ரஷ்ய சார்பு மதகுருக்கள் மீது பொருளாதார தடை – அதிரடி காட்டும் உக்ரைன் அரசு

உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு கிறிஸ்தவ மதகுருக்கள் மீது பொருளாதார தடை விதித்து உக்ரைன் அரசு உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை கடந்த 10 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் இந்த போரில் இருதரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதுடன், உக்ரைன் அரசு தொடர்ந்து...