- Tuesday
- May 13th, 2025

வடக்கு நெற்பயிர்களில் தற்பொழுது மிகவும் தீ விரமாக இலைமடிச்சுக்கட்டியின் தாக்கம் அவதானிக்கப்படுவதாக வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சனாதேவி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய காலநிலையானது இதன் பெருக்கத்திற்கு சாதகமாக காணப்படுகிறது. விவசாயிகள் சரியான கட்டுப்பாடுகளை உரிய நேரத்தில் விவசாய போதனாசிரியரின் ஆலோசனையுடன் சிபார்சு செய்யப்பட்ட இராசயன நாசினிகளை பயன்படுத்தி கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்....

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். பகுதி இரண்டின் வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் பகுதி ஒன்று வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டது. பகுதி ஒன்று வினாப்பத்திரம் என்பது நுண்ணறிவு வினாக்களை கொண்டதாகும். பகுதி...

வட்டுக்கோட்டை துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் நெருப்பால் சுட்டதாக, சிறுவனின் பெற்றோரால் சங்கானை பிரதேச செயலக சிறுவர் விவகார பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பிரதேச செயலகத்தினால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன்...

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்த்தியை பாதிக்கின்ற...

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் (17ஆம் திகதியில் இருந்து) மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும்...

நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்றை கடத்தல்காரர்களால் மிகவும் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ நேற்று ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார். இந்த இரகசிய வேலைத்திட்டத்தின் முதல் இலக்கு...

உக்ரைன் போர் தொடங்கி பத்து மாதங்களுக்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போரால் இரு தரப்பிலும் ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரை உடனே நிறுத்த வேண்டும் என போப் பிரான்சிஸ் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த கூட்டத்தில் போப்...

எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நிலக்கரியை தாங்கிய 5ஆவது கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அது நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில்...

பருத்தித்துறை - அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உயிர்காப்பு பணியாளர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் வாள்வெட்டு மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்த தகவல் வழங்கப்பட்ட நிலையில் 1990...

எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றது தமிழினத்திற்கு செய்த பச்சைத்துரோகம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கட்சியின் தலைமைச்செயலகத்தில் இடம்பெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களுடைய நினைவேந்தலில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கருத்தினைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ரணில் விக்கிரமசிங்க ஒரு இனவாத கூட்டத்திற்கு...

நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 225 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு மூட்டை சீமெந்தின் விலை சந்தையில் 2,975 ரூபாயாக காணப்பட்ட நிலையில் புதிய விலை 2,750 ரூபாயாக குறைந்துள்ளது.

இலங்கையில் கஞ்சாவை சட்ட ரீதியாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடக்கம் பல தரப்பினரும் பல்வேறு நுட்ப முறைகளை கையாண்டு வருகின்றனர் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிதாரி எ.சி.றகீம் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,நாட்டில் போதைப்பொருள் தொடர்பில் தற்போது...

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதியாக அதிகரித்துள்ளமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. போதைப்பொருள் பாவனை தற்போது வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் வெளியாகியுள்ள நிலையில்,போதைப்பொருளின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, மாணவர்கள் வீட்டில் பணம் கேட்டால் கவனமாக இருக்குமாறும், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் எந்த நேரமும்...

மெய்ஜி கோப்பை (MEIJI CUP – 2022) இலங்கை ஓபன் கராத்தே சுற்றுப் போட்டி – 2022 இல் தங்கப்பதக்கத்தை பெற்ற யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தருக்கு இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண சிறைச்சாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. வென்னப்புவ எஸ். பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறித்த கராத்தே சுற்று போட்டியில் பல்வேறு...

கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் டிசம்பர் 16ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக போராட்டமொன்று இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் போராட்டம் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நிறைவடையவுள்ளது....

பாஸ்மதி தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து நிதி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. கப்பல்கள் மூலம் இலங்கைக்கு தற்போது கொண்டு வரப்படும் அரிசி தொகை மற்றும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்கள் வௌியிடப்பட்ட ஓடர்களை விசேட அனுமதிப் பத்திரத்தின் ஊடாக துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியும்...

சுவாச நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் சன்ன டி சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இன்புளூவன்சா உள்ளிட்ட பல வைரஸ் நோய்களினால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நோய்வாய்ப்பட்ட பிள்ளைகளை பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என...

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ‘பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் அதிகரித்துள்ளன. பட்டப்படடிப்பை நிறைவுசெய்யாத 700 முதல் 800 வரையான மாணவர்கள் எல்லா பல்கலைக்கழகங்களிலும் இருக்கின்றனர். இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர். ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சிகளை சேர்ந்தவர்களே அவர்கள். இவர்கள்தான் குழப்பம் விளைவிக்கின்றனர்....

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும், ஆனால் என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தில் தாம் எடுத்துரைத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சித் தலைவர்களின் கூட்டம்...

வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு தூசி துகள்கள் இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா ஊடாக நாட்டிற்கு வரும் காற்றின் வேகம் ஓரளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் காற்றின் தர சுட்டெண்ணின் படி, கொழும்பில் உள்ள தூசி...

All posts loaded
No more posts