Ad Widget

உக்ரைனில் பாரிய சத்தத்துடன் முக்கிய நகரங்களில் வெடித்து சிதறும் ஏவுகணை குண்டுகள்!

உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தின் மத்திய பகுதிகளில் இன்று அதிகாலை ரஷ்ய படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

இதன்போது உக்ரைன் மீது ஒரே நாளில் ரஷ்யா 60க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

இதனால் கீவ் நகரத்தின் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால், அங்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதுடன்,மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன.

4 நகரங்களில் குண்டு வெடிப்பு சத்தமும், துப்பாக்கிச் சண்டை ஓசைகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடலில் இருந்து ரஷ்யா ஏவுகணைகளை ஏவியதாகவும் விமானம் மூலம் குண்டுகளை வீசியதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது நான்கு மாடிக் கட்டடம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Related Posts