Ad Widget

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது!

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , பொலிஸ் உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் நேற்று (27) மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து...
Ad Widget

நவக்கரி இளைஞர் இனந்தெரியாதோரால் கடத்தல்!

புத்தூர் மேற்கு, நவக்கரியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார் என்று உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு, நவகரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த...

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயமல்ல: கஜேந்திரகுமார்

புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை என்பது, இலங்கை அரசாங்கத்தினுடைய தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம் அல்ல என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்...

முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் குறித்த பட்டியல் விரைவில்!

முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் நாட்களில் குறித்த பட்டியல் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரையில் 14.4 மில்லியன் மக்கள் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். எனினும் அவர்களில் 7.7 மில்லியன் மக்களே பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுள்ளதாக தொற்று நோய்...

ஜனாதிபதியை சந்தித்து பேசியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை நீடித்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சேனாதிராசா, நாடாமன்ற உறுப்பினர்களான...

ருமேனிய எல்லையில் 16 இலங்கையர்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது!

ருமேனியாவில் இருந்து பாரவூர்தி ஒன்றில் ஐரோப்பிய நாடொன்றுக்கு தப்பி செல்ல முற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 15 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ருமேனியாவின் நட்லாக் 2 எல்லை பகுதியில் பாரவூர்தி ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அதில் மறைந்திருந்த 16 இலங்கையர்கள் உள்ளடங்களாக 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்ட சில மணி...

நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு திருட்டு!

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு திருடப்பட்டுள்ளது. நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடையம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது இரண்டாவது தடவையும் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டதாகவும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதை தொடர்ந்து தாம் எரிவாயு சிலிண்டரை வீட்டின் வெளியே...

எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு?

நாட்டில் மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாகவே இந்த நிலை ஏற்படக்கூடும் என கூறப்படுகின்றது. இதற்கமைய தற்போது அமுல்படுத்தப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள்...

வீடுகளில் பெற்றோல் சேமித்து வைப்பது ஆபத்தானது!!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் கயான் முனசிங்க குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

முதல் இலங்கையர் என வரலாற்றில் இடம்பிடித்த சாணக்கியன்!!

சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேச்சாளராக பங்கேற்ற முதல் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பெற்றுள்ளார் இந்தோனோஷியாவின் பாலியில் சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் 144ஆவது அமர்வு இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் குறித்த அமர்வில் காலநிலை மாற்றம் தொடர்பில் மாநாடு ஒன்று நடைபெற்றிருந்தது....

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு மக்களிடையே எதிர்ப்பு இல்லை என்கிறது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் பொதுமக்கள் எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் மக்களின் எரிபொருள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலவி வரும்...

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக...

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்வு

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கான சுலோகங்கள் அடங்கிய ஸ்டிக்கர் வாகனங்களில் ஒட்டப்பட்டதுடன் துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது. இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஆரம்பமானது. "அனைவருக்கும் இனிமையான பயணம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் தேசிய பெண்கள் குழு,...

O/L பரீட்சையில் மாற்றமில்லை – திட்டமிட்டப்படி நடைபெறும் என அறிவிப்பு!

கடந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரபத்திர சாதாரண தர பரீட்சைகள் திட்டமிட்டபடி மே மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். 2022ஆம் கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்களில் 38 மில்லியனுக்கும் அதிகமானவை அச்சிடப்பட்டு பிரதான களஞ்சியசாலைகளில்வைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ்வாண்டுக்கான முதலாம் தவணை ஆரம்பமாகும்போது...

தமிழ் – சிங்கள புதுவருடத்துக்கு முன் நாட்டு மக்களுக்கு பூரண நிவாரணம்!!

நாட்டு மக்களின் நிலைமைகளை நன்றாக அறிந்துள்ள அரசாங்கமென்ற வகையில் எதிர்வரும் தமிழ் - சிங்கள புதுவருடத்துக்கு முன்பதாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்த அவர், வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கலந்துரையாடி மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்குவது...

போருக்கு காரணமான விடயங்களுக்கு இன்னும் தீர்வில்லை : அதிகாரப்பகிர்வு அவசியம் – சம்பந்தன்

30வருடகால யுத்தம் நாட்டில் காணப்பட்ட பிரதான பிரச்சினையாக காணப்பட்டது. யுத்தத்தை தோற்றுவித்த காரணிகள் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதிகார பகிர்வு அவசியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கையில்...

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சர்வகட்சி மாநாட்டில் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்துவேன் – ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வகட்சி மாநாட்டில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை ஜனாதிபதி செயலக பிரிவின் ஊடாகவும், அமைச்சுக்கள் ஊடாகவும் செயற்படுத்த முறையான செயலொழுங்கினை முன்னெடுப்பேன். சர்வகட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சி பிரமுகர்கள் தங்களின் யோசனைகளை எந்நேரத்திலும் என்னிடம் முன்வைக்கலாம். நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு அனைத்து தரப்பினருக்கும் உண்டு என ஜனாதிபதி கோட்டாபய...

ஆசியாவின் சொர்க்கமாக இலங்கை மாறும் : ஆலோசனை வழங்கய சித்தார்த்தன் !!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக எமது நாட்டை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாட்டில் நிலவும் இன நெருக்கடியை, அடுத்தடுத்துவந்த அரசாங்கங்களின் கொள்கை, அணுகுமுறை மற்றும் தவறான நிர்வாகமே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு உண்மையான காரணம் என்றும் சுட்டிக்காட்டினார். சுயாட்சி அதிகாரத்திற்கான...

VAT வரியை 18 சதவீதமாக அதிகரிக்க பொது நிதிக் குழு ஒப்புதல்!!

பெறுமதி சேர் வரி (Value Added Tax -VAT) சட்டத்தில் திருத்தங்கள் பொது நிதிக் குழுவால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நிதிச் சேவைகளை வழங்குவதற்கான பெறுமதி சேர் வரி 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்றுநோய்கள் மற்றும் பொது அவசர காலங்களில் செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் மருந்துகளின் நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு....
Loading posts...

All posts loaded

No more posts