Ad Widget

போருக்கு காரணமான விடயங்களுக்கு இன்னும் தீர்வில்லை : அதிகாரப்பகிர்வு அவசியம் – சம்பந்தன்

30வருடகால யுத்தம் நாட்டில் காணப்பட்ட பிரதான பிரச்சினையாக காணப்பட்டது. யுத்தத்தை தோற்றுவித்த காரணிகள் இன்றும் நடைமுறையில் உள்ளது. அதிகார பகிர்வு அவசியமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கையில் காணப்பட்ட பிரதான பிரச்சினையாக 30வருடகால யுத்தத்தை குறிப்பிட வேண்டும்.தமிழ் மக்களின் உரிமைகள் இன்றும் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளதை தெளிவாக அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்கள் காலம்காலமாக கோரும் உரிமை மற்றும் தனியுரிமை,சுதந்திரம் உள்ளிட்ட பல விடயங்களுக்கு இதுவரையில் எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை.

இதற்கு தீர்வு காணாமல் எவ்வாறு ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்த முடியும்.அதிகார பகிர்வினை எதிர்பார்க்கிறோம்.தமிழ் மக்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் – எம்.ஏ.சுமந்திரன்.

பொருளாதாரம் நிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.அரசமுறை கடன் மறுசீரமைப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்வதற்கும் அதனை செயற்படுத்துவதற்கும் விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் நடைமுறைக்கு பொருத்தமான வகையில் செயற்படுத்த வேண்டும்.

பொருளாதார முன்னேற்றம் குறித்து அரசாங்கத்திடம் ஏற்கெனவே யோசனைகளை முன்வைத்துள்ளோம்.புலம்பெயர் அமைப்பினரது ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு நடைமுறைக்கு சாத்தியமான சூழல் வகுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதியுடன் எதிவரும் நாட்களில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் அவ்விடயம் குறித்து விளக்கமாக உரையாற்றவுள்ளோம்.பொருளாதார நெருக்கடி காரணமாக வடக்கில் இருந்து இதுவரயில் சுமார் 10 பேர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்கள்.இது அரசாங்கததிற்கும்,நாட்டிற்கும் சாதகமாக அமையாது என்றார்.

Related Posts