Ad Widget

யாழில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய்க்கு மாத்திரம் மண்ணெண்ணை!

ஊர்காவற்துறையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு குடும்ப பங்கீட்டு அட்டைக்கு 500 ரூபாய் எனும் அடிப்படையில் மண்ணெண்ணை வழங்கப்படுகின்றது. அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் இல்லை எனும் அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஒரே ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் மாத்திரமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டிணிக்கு பயந்து இந்திய நோக்கி அகதிகளாக படையெடுக்கும் இலங்கையர்கள்!!

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டிணி சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி வந்து சேர்ந்ததாக வவுனியாவிலிருந்து அகதிகளாய் வந்துள்ள இலங்கை தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு...
Ad Widget

பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க சகல இன மக்களையும் தெளிவுபடுத்துகின்றோம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு

பயங்கரவாத தடை சட்ட திருத்தம் என்ற தவறான ஒரு முயற்சியை ஆரம்பித்து அதுவே நல்ல நகர்வு எனவும் உலகத்தை ஏமாற்ற நினைக்கின்றீர்கள். இதில் மறுசீரமைப்பு என்ற சொல்லுக்கான அர்த்தத்தையே மாற்றியுள்ளீர்கள். ஆகவே இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக நாம் எதிர்க்கின்றோம் எனவும் சகல இன மக்களையும் சந்தித்து பயங்கரவாத தடை சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும்...

யாழில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் இடத்தில் குழப்பம்!!

யாழ்ப்பாணத்தில் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் இடத்தில் நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) குழப்ப நிலை ஏற்பட்டது. யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதி, கொட்டடி பகுதியில் அமைந்துள்ள எரிவாயு சிலிண்டர் களஞ்சியசாலைக்கு முன்பாக வெற்று எரிவாயு சிலிண்டர்களுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதன்போது, பொதுமக்கள் குடும்ப பங்கிட்டு அட்டையுடன் வெயிலையும் பொருட்படுத்தாது பல மணி நேரம் காத்திருந்த...

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

ஜனாதிபதியின் அழைப்பை நிராகரிக்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷால் இன்று செவ்வாய்க்கிழமை 22 ஆம் திகதி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் திட்டமிட்டுத் தீவிரமாகத் தொடர்ந்து கொண்டும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கும் சிந்தனை அறவேயின்றியும்...

இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியா நோக்கி அகதிகள்!

இலங்கையில் இருந்து ஆறு பேர் அகதிகளாக இந்தியாவில் அடைக்கலம் கோரியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் தமிகத்தின் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகே உள்ள மணல் திட்டில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் இவ்வாறு வந்து இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஒரு ஆணும் 2 பெண்களும் 3 குழந்தைகளுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களை இந்திய கடலோர காவல்...

16% க்கும் அதிகமான பல்கலை மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொள்கின்றனர்!!

அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வில் வெளிவந்துள்ளது. அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த செயற்பாடுகள் கவலையளிப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். 51% க்கும் அதிகமானோர் வாய்மொழி...

வடமாகாண கல்வி அமைச்சை முற்றுகையிட்டு தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்!

தமக்கான நிரந்தர நியமனத்தைகோரி வடமாகாண கல்வி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) தொண்டர் ஆசிரியர்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியில் உள்ள வடமாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக இன்றைய தினம் காலை ஒன்று திரண்ட தொண்டர் ஆசிரியர்கள் அலுவலக பிரதான வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

எரிபொருள் நிரப்பு நிலைய கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைளை தீவிரப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நிலைமையைக் கட்டுப்படுத்த இவ்வாறு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடுமையான நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. கடும் எரிபொருள் தட்டுப்பாடு...

மருந்து தட்டுப்பாட்டால் யாழ்.போதனாவில் கண் சத்திர சிகிச்சை இடைநிறுத்தம்!

மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கண் சத்திர சிகிச்சைக்கான மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. மேலும் சில மருந்துப் பொருட்கள்...

மின் கட்டணம் 500 வீதத்தால் அதிகரிக்கும் அறிகுறி?

மின்கட்டணம் பல மடங்களாக அதிகரிக்கக்கூடும் என தகவல் கிடைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “2 ஆயிரத்து 180 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை, 4 ஆயிரம் ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வை பார்க்கும்போது தலை சுற்றுகின்றது. இந்நிலையில் இன்னும் ஒரிரு நாட்களில் மின்சார...

எரிபொருள், எரிவாயு வரிசையில் காத்திருக்கும் மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராஜாங்க அமைச்சர்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் காத்திருந்து கஷ்டப்படும் மக்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாக இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன. தற்போது மக்கள் அரசாங்கத்தை...

முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் அதிகரிப்பு!

சந்தையில் முகக்கவசங்களுக்கான விலை இன்று முதல் 30சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் விதுர அல்கம தெரிவித்துள்ளார். டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் நாளாந்தம் அதிகரிக்கின்றது. சகல விதமான முகக்கவசங்களையும் தயாரிப்பதற்கான...

30 வருடகால இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம் – யாழில் பிரதமர்

வடக்கு மாகாணத்தில் காணப்பட்ட 30 வருடகால இருண்ட யுகத்தை இல்லாதொழித்து வடக்கு மக்களின் சுதந்திரத்தையும்,உரிமைகளையும் மீளப்பெற்றுக்கொடுத்துள்ளோம். வடக்கிற்கும்,தெற்கிற்கும் இடையிலான பாலமாக யாழ்தேவி புகையிரதத்தை கருதுகிறேன். எமது ஆட்சியில் இரு மாகாணங்களுக்குமிடையிலான நல்லுறவு அபிவிருத்தி ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 200 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட...

மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருந்த இரு முதியவர்கள் இதுவரை உயிரிழப்பு!!

மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் இந்த இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. கண்டி மற்றும் கடவத்தை பகுதியில் இந்த இரு சோக சம்பவங்களும் பதிவானதாக அவ்வந்த பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸார் உறுதி செய்தனர். கண்டி - யட்டி நுவர...

மூளாய் பகுதியில் விபத்து : ஒருவர் பலி!!, ஒருவர் காயம் !

யாழ்ப்பாணம் மூளாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள விற்பனை நிலையத்தில் கணக்காளராக பணியாற்றும் காரைநகர் கருங்காலியை சேர்ந்த சங்கரப்பிள்ளை நித்தியானந்தராசா (வயது49) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மாணவனான மூளாயைச் சேர்ந்த ஆனந்தகுமார் கஜீபன் என்ற இளைஞரே...

உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டுகின்றது அரசு – சுமந்திரன்

உணவு இல்லாத காலத்திலும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசாங்கம் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. யாழில் உள்ள பௌத்த விகாரைகளுக்கான பிரதமரின் விஜயம் குறித்த கேள்விக்கு பதில் வழங்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். கடந்த காலத்தைப்போன்று இன்றும் வடக்கில் புத்தர் சிலைகளை வைப்பது பௌத்த தூபிகளை நிர்மாணிப்பது...

யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சென்றார் பிரதமர் மஹிந்த!

யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை விஜயம் செய்தார். 1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது. 2021 பெப்ரவரி 08 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் எஞ்சிய கட்டிடங்களை...

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் திறக்கப்படும்!!

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விரைவில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை திறக்க உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக துறை அமைச்சர் பந்துல செனவரத்ன யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் மற்றும் வர்த்தகம் சம்பந்தமான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும்...

வடக்கில் இருந்து பனங்கள்ளினை ஏற்றுமதி செய்ய முயற்சி!!

பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை...
Loading posts...

All posts loaded

No more posts