Ad Widget

வீதி விபத்தில் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் சாவு

கோப்பாயில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் என்பவரே உயரிழந்தார். கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து இரவு மோட்டார் சைக்கிளில் கல்வியியல் கல்லூரியில் நடைபெறவிருந்த நிகழ்வு...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பழிவாங்கலை நாடவில்லை – சம்பந்தன்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பழிவாங்கலை நாடவில்லை மாறாக பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மீள்நிகழாமை மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை உறுதி செய்யுமாறே வேண்டுகின்றனர். அதேபோல் அவர்கள் உண்மை நிலைநாட்டப்படவேண்டும் என கோருகின்றனர். எனவே உண்மை உறுதி செய்யப்படாமல் நீதி நிலைநாட்டப்பட முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கையின் தண்டனையின்மை...
Ad Widget

முழுமையாக முடங்கும் ஆபத்தில் தனியார் பேருந்து போக்குவரத்து?

டீசல் இல்லையேல் இன்று 90 வீதமான பேருந்துகள் போக்குவரத்திலிருந்து விலகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அங்ஞன பிரியஞ்சித் இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். நாட்டில் தற்போதுவரை எரிபொருள் முறையாக கிடைக்காதமையினால் 70 வீதமான தனியார் பேருந்துகள் போக்குவரத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பேருந்துகளுக்கு எரிபொருள் முறையாக கிடைக்காத...

ஜனாதிபதியினால் அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், தற்போதுள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கமைய, கீழ்வரும் அமைச்சுப் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சராக காமினி லொக்குகே பொறுப்பேற்றுள்ளதுடன், மின்சக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பொறுப்பேற்றுள்ளார்.ஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில்...

மின் தடைக்கு எதிராக யாழில் மெழுகுதிரி ஏந்தி போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றைய தினம்(வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் நல்லூர் செம்மணி வளைவுப் பகுதியில் இரவு 8.30 மணியளவில் ஒன்றுகூடியவர்களால் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின்...

மறைந்த ஊடக மாணவிக்கு ஏகாந்த நிலையில் பட்டம்!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மாணவி ஒருவருக்கு ஏகாந்த நிலையில் பட்டமும், நினைவுத் தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஊடகத் துறையில் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்ற செல்வி தில்காந்தி நவரட்ணம் பட்டமளிப்பு விழாவின் போது உயிருடன் இல்லாத நிலையில் அவருக்கான சிறப்புப் பட்டம் அவரது தயாரிடம் வழங்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறையில் சிறப்புத்...

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!!

இன்று (03) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் வழமை போன்று இடம்பெறும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனவே, அச்சமடைந்து எரிபொருள் சேகரிப்பதைத் தவிர்க்குமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இன்றைய தினத்தின் பின்னர்...

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா!

யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று(வியாழக்கிழமை) பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. யாழ்.பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, இன்றைய தினம் ஆரம்பமாகி நாளை மற்றும் சனிக்கிழமை ஆகிய தினங்களில் பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறுகின்றது. இன்றும்...

நாட்டில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதிக்கான நாணய கடிதங்களை திறப்பதற்கு வங்கிகள் அனுமதி வழங்காமையால் இவ்வாறு எரிவாயு விநியோக நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும், வெங்காயம் மற்றும் சிறு தானிய செய்கையாளர்கள் விதைத்தல் மற்றும் அறுவடை செயற்பாடுகளை தவிர்த்து கொள்வது சிறந்தது எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான...

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம்

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில் அவருக்கு எதிராக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பல முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்குகிடைக்கப் பெற்றதையடுத்து யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமர் மகிந்த...

பெரசிட்டமோல் வில்லையொன்றின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்!

500 மில்லிகிராம் பெரசிட்டமோல் வில்லையொன்றின் அதிகபட்ச சில்லறை விலையை 2 ரூபாய் 30 சதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது. 2022 பெப்ரவரி 28 முதல் அமுலுக்கு வரும் வகையில் சுகாதார அமைச்சினால் குறித்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்றும்(வியாழக்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மாலை 06 மணியிலிருந்து இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்...

எரிபொருள் தட்டுப்பாடு ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை காட்டுகின்றது – சிறிதரன்

நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு என்பது ஜனாதிபதியின் தோற்றுப்போன மனநிலையை உலகிற்கு காட்டி நிற்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், இந்த அரசாங்கம் தோல்வியடைந்துவிட்டது என்றும் தெரிவித்தார். விவசாயத்தை தமது ஜீவனோபாயமாக கொண்டு வாழ்ந்துவரும் மக்கள், இயற்கை...

இலங்கை தொடர்பில் ஐ.நா தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது – சுமந்திரன்!

இலங்கை தொடர்பில் ஐ.நா தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுகின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று(செவ்வாய்கிழமை) யாழ்ப்பாணம் – உடுப்பிட்டியில் இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்...

சிறுவர்கள் மத்தியில் வேகமாக பரவும் கொரோனா தொற்று!!

சிறுவர்கள் மத்தியில் கொரோனா தொற்றின் பரவலானது மிக வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிச்வே வைத்தியசாலையின், வைத்தியர் ஹசித்த லியனாராச்சி குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நாளொன்றிற்கு...

மின் நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள வாக்குறுதி!!

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்கு வசதி செய்து தருமாறு திறைசேரி மற்றும்...

இன்று 7 1/2 மணிநேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதியின‍ை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதன்படி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை சுழற்சி முறையில் 5 மணிநேர மின்வெட்டும், மாலை 6.00 மணி முதல்...

விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை எதிர்கொண்டுள்ளோம் – உதய கம்மன்பில

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்பட்ட தாக்கங்களை காட்டிலும் தற்போது பாரதூரமான சவால்களை தாம் எதிர்கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் அச்சம் கொண்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ஆகவே பொருளாதார நெருக்கடியை சீர்செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது அவசியம் என சுட்டிக்காட்டினார். மேலும், டொலர்...