Ad Widget

இன்று முதல் புதிய எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை – தரத்தைப் பார்த்து வாங்குமாறு அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் தரம் தொடர்பான தரவுகள் பொறிக்கப்பட்ட சிலிண்டர்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளார். இதற்கமைய, தரநிர்ணய நிறுவனத்தின் தரத்திற்கு அமைய ப்ரொப்பன் அளவு 30 சதவீதமாகவும் பியூட்டேனின் அளவு 70 சதவீதமாகவும் கொண்ட...

வலி.வடக்கில் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

வலி.வடக்கு பிரதேசப் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்று (17) காலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கீரிமலை ஜே/226, காங்கேசன்துறை மேற்கு, ஜே/223 பகுதிகளில் 21 பேருக்கு சொந்தமான 30 ஏக்கர் காணிகளை, படையினருக்கு சுவீகரிக்க நில அளவைத் திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த எதிர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது காணி...
Ad Widget

கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழப்பு!!

தனது பெண் நண்பியை மிரட்டுவதற்காக தவறான முடிவை எடுத்து கழுத்தில் கயிறு போட்டு நேரலை காணொளியில் காண்பித்த இளைஞன் கயிறு இறுகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் இடம்பெற்றது. புதுக்குடியிருப்பைச் சேர்ந்த வீரசிங்கம் ஸ்ரான்லின் ஜெயசிங்கம் (வயது -31) என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அச்சகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்....

மாணவனை 200 தடவைகள் தோப்புக்கரணம் செய்ய வைத்த ஆசிரியர்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மாணவர்கள் மீதான ஆசிரியர்களின் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. கடந்த ஒரு வாரத்துக்குள் இரண்டு துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்றும் அவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் தரம் 7இல் பயிலும் மாணவர் ஒருவர்...

புலிகள் அமைப்பை மீள் உருவாக்க முயற்சியா? : 15 இலங்கையர்கள் மீது இந்திய புலனாய்வு பிரிவு அதிரடி நடவடிக்கை

இந்தியாவிற்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது தேசிய புலனாய்வுப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாகவும், இலங்கைக்கு எதிராக போரில் ஈடுபட்டதாகவும் கூறியே இவர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில்...

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ் மக்களுக்கு உதவிகளை வழங்கும் – சீனத் தூதுவர்

சீன அரசாங்கம் தொடர்ந்தும் யாழ்ப்பாண மக்களுக்கு உதவிகளை வழங்குமென இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனம் சமாசத்தில் மீனவர்களுக்கு வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்...

அரசியல் கைதியொருவர்15 வருடங்களின் பின் நிரபராதி என விடுதலை!

கடந்த 15 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என அடையாளம் கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி, தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.’ கடந்த 2006ஆம் வருடம், ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை...

நாட்டில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!!

கொவிட்-19 மாறுபாடான ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு நோயாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட மீனவர்களுக்கு சீன தூதுவர் வலைகள் மற்றும் உலர் உணவு பொதிகளை வழங்கி வைத்தார்!

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சீனாவினால் சுமார் 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு சுமார் 13.75 மில்லியன் ரூபாய் பெறுமதியான...

நவாலியில் வாள் வெட்டுக்குழு அட்டகாசம்!

நவாலி தேத்தா மரத்தடி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டுக்குழு ரவுடிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. குறிந்த வாள்வெட்டு சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டின் கதவு, யன்னல்களை உடைத்தும், வாளால் வெட்டியும் அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொழுத்தியுள்ளது. இதனையடுத்து மானிப்பாய் பொலிஸாருக்கு தவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து...

நல்லூர் ஆலயத்தில் சீனத் தூதுவர் வழிபாடு!!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்து அவர்கள் ஆலயத்துக்கு வருகை தந்தனர். கோவிட்-19 சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் சீன அதிகாரிகள் வழிபாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

டிசம்பர் மாத இறுதி வரைக்கான சுகாதார வழிகாட்டி!!

கொவிட் தொற்றுக் காரணமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் சுகாதார வழிமுறைகள் மேலும் 15 தினங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளில் மாற்றம் மேற்கொள்ளாது, டிசம்பர் மாத இறுதி வரை தொடர்வதற்கு தீர்மானித்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நேற்று (15) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். தற்போது நடைமுறையில்...

கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை ஏன் எடுக்க வேண்டும்?

ஒமிக்ரோன் வைரஸ் மாறுபாடு நாட்டில் பரவினால், அதன் விளைவுகளை குறைக்க கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகை எடுத்துக்கொள்வது அவசியமாகும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார். மூன்றாவது அலகை எடுத்துக்கொள்வதன் மூலம், கோவிட்-19 நோய்த்தொற்றின் இறப்பு மற்றும் சிக்கல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்....

கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்

இலங்கைக்கு தெற்காக காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை...

யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோம் – கீ சென் ஹொங்

எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்திற்கும் சீனாவிற்கும் இடையில் தொடர்புகளை பேண விரும்புகின்றோமென யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்ட சீன நாட்டின் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். பொது நூலகத்தினை பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “”முதன்முதலாக யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளேன். இன்றைய...

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது- கஜேந்திரகுமார்

யாழ்.மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், யாழ்.மாநகர சபை பாதீடு தொடர்பான வாக்கெடுப்பு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய அமைப்பு இந்த பாதீட்டை எதிர்க்கும்...

பண்டிகைக் காலத்தில் பயணத்தடை அமுல்படுத்தப்படுமா? – முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதற்கமைய, பயணத் தடையை அமுல்படுத்தாமல் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வலுப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தின்போது பொதுமக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என...

நான்காவது தடுப்பூசியும் வழங்க வாய்ப்பு : தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை!

எதிர்காலத்தில் நான்காவது டோஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், கோவிட்-19 தடுப்பூசி அட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். “தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டை எடுத்துச் செல்வதற்கு ஏற்றதல்ல. ஒரு தரவுத்தளத்தில்...

யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் வசந்தபுரத்தைச் சேர்ந்த கண்ணன் பத்மலோஜினி (வயது-38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். “6 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவர் தனியார் கிளினிக்கில் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரைகளைப் பெற்றுள்ளார். அவர் நேற்று முன்தினம் மூச்சுத் திணறலுக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு சேர்க்கப்பட்டார். எனினும் குடும்பப்பெண்...

இலங்கைக்கு தெற்காக விருத்தியடைந்து வரும் வளிமண்டலத் தளம்பல் நிலை!

நாடு முழுவதும் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இலங்கைக்கு தெற்காக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக, இலங்கையின் தென் அரைப்பாகத்தில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை, ஹம்பாந்தோட்டை...
Loading posts...

All posts loaded

No more posts