Ad Widget

கோவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை ஏன் எடுக்க வேண்டும்?

ஒமிக்ரோன் வைரஸ் மாறுபாடு நாட்டில் பரவினால், அதன் விளைவுகளை குறைக்க கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது அலகை எடுத்துக்கொள்வது அவசியமாகும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

மூன்றாவது அலகை எடுத்துக்கொள்வதன் மூலம், கோவிட்-19 நோய்த்தொற்றின் இறப்பு மற்றும் சிக்கல்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆற்றல் உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மருத்துவர் ஹேமந்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்

ஒமிக்ரோன் மாறுபாடு நாட்டில் பரவாமல் தடுக்கப்படும் என்பதற்கு 100 சதவீத உத்தரவாதம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts