Ad Widget

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பட்டமளிப்பு வியாழன்று நிகழ்நிலையில்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு எதிர்வரும் நாளை வியாழக்கிழமை நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்று யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை பட்டமளிப்பு விழாவை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், நாட்டில் நிலவும் கோரோனாப் பெருந்தொற்று...

நாவற்குழியில் தாயையும் மகனையும் சித்திரவதை செய்து கொள்ளையிட்ட இருவர் சிக்கினர்

நாவற்குழியில் தாயையும் மகனையும் சித்திரவதைக்கு உள்ளாக்கி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 2020ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் வீடொன்றில் 32 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டு தேடப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த கைது நடவடிக்கைநேற்று முன்னேடுக்கப்பட்டது. நாவற்குழியில் கடந்த சனிக்கிழமை வீடு ஒன்றில் புகுந்த கொள்ளையர்கள்...
Ad Widget

பல்கலைக்கழக மாணவர்களுக்கு திங்கள் முதல் தடுப்பூசி!

20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அருகிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்த வாரம் திங்கள் முதல் வெள்ளி வரை மாணவர்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளலாம் என்று இலங்கை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

கொரோனா உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் – ஆலோசனைப் பெற விசேட இலக்கம்

கொரோனா தொற்று உறுதியானவர்களில் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படக்கூடும் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சந்தோசமின்மை, அதிகரித்த கோபம், உணவின் மீதான நாட்டமின்மை, நித்திரையின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என அந்தச் சங்கத்தின் மனநல விசேட வைத்தியர் சஜிவன அமரசிங்க தெரிவித்துள்ளார். மேலும் இந்த அறிகுறிகளானது, நாளடைவில் மன அழுத்தமாக மாறக்கூடும் என...

யாழ். இராசாவின் தோட்ட வீதி மூடப்படுகிறது!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணம் இராசாவின் வீதி – ஸ்ரான்லி வீதி சந்திக்கு அருகில் , இராசாவின் வீதியின் குறுக்காக வடிகால் கட்டமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் , குறித்த...

21 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவை திறப்பதற்கு தீர்மானம்!!

கற்பித்தல் செயற்பாடுகளுக்காக 200க்கும் குறைவான மாணவர்களை கொண்டுள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க மாகாண ஆளுநர்கள் தீர்மானித்துள்ளனர். நான்கு கட்டங்களாக பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக தரம் 1 முதல் 5...

நாவற்குழி பலபரிமாண 100 நகரத் திட்டத்தின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பம்!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பெருநகர அபிவிருத்தி அமைச்சு மேற்கொள்ளும் நாட்டின் 100 நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள நாவற்குழி நகரத்தின் அபிவிருத்தி பணிகள், உத்தியோகபூர்வமாக திட்டத்தின் பெயர்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதனின் முன்மொழிவுக்கமைய இன்று...

நீதிபதியை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட மூவர் கைது!!

பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பயணித்த காருக்கு கைகளைக் காண்பித்து வார்த்தைப் பிரயோகம் செய்ததன்மூலம் நீதிபதியை அவமதித்தனர் என்ற குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.20 மணியளவில் வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். இணுவில், வவுனியா மற்றும் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 31,33 36...

இயல்பு நிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் –யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

தற்போதுள்ள இயல்புநிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுங்கள் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாண மாவட்டமானது பொது முடக்கத்தின் பின்னர் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது தற்போது...

ஐப்பசி 6ஆம் திகதியை தேசிய கறுப்பு தினம் – ஆசிரியர்களின் சங்கம் அறிவிப்பு!

இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும் ஐப்பசி மாதம் ஆறாம் திகதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்றைய தினத்தை நாம் தேசிய கறுப்பு எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தி இருக்கின்றோம். என இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் ஜீவராசா ருபேஷன் தெரிவித்தார். இலங்கை அரச ஆசிரியர்களின் சங்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண செயலாளர்...

யாழ். பல்கலை இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐவருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கொரோனா தெற்று!

யாழ். பல்கலைக்கழக இசைத்துறை விரிவுரையாளர்கள் ஐந்து பேருக்கும் மாணவர்கள் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஊடாக அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 5 விரிவுரையாளர்களுக்குக் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவுரையாளர்களுடன் மாணவர்கள் மூவரும் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர்...

யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தின் கட்டடப் பராமரிப்பு செலவை 5 ஆண்டுகள் இந்தியா பொறுபேற்கும்

யாழ்ப்பாணம் மத்திய கலாசார மண்டபத்தின் கட்டடப் பராமரிப்புச் செலவை இந்திய மத்திய அரசு பொறுப்பேற்றுக கொள்ளும் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர், மத்திய கலாசார மண்டபத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார். தமிழ் மக்களின் கலாசார பண்பாடுகளுக்காக இந்திய...

பொலிஸாரின் கடமைக்கு பிரதேச சபை உறுப்பினர் இடையூறு; பொலிஸார் துப்பாக்கிச் சூடு!!

வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினர் கடமைக்கு இடையூறு விளைவித்ததால் பொலிஸார் வானத்தை நோக்கி சூடு நடத்தி எச்சரித்தனர். இந்தச் சம்பவம் ஊரெழு பகுயில் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றது. “ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். மோட்டடார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக்கவசமின்றி ஆபத்தான முறையில் பயணித்தனர் அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை...

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடம் வழங்கப்படாது – யாழ். மாநகர முதல்வர்

ஆரிய குள அபிவிருத்தியில் எந்தவொரு மதச் சார்பு அடையாளங்களையும் உட்புகுத்தவில்லை. உட்புகுத்தப் போவதுமில்லை என யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரிய குளத்தின் மத்தியில் மத நல்லிணக்க மண்டபம் அமைப்பது தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக விளக்கமளிக்கும் முகமாக சனிக்கிழமை ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....

ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் – புதிய ஆய்வில் அடையாளம்

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட 90-180 நாட்களுக்குப் பின்னர் ஒன்பது முக்கிய நீண்ட கொரோனா அறிகுறிகள் ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திமா ஜீவந்தரா கூறினார். இந்தப் புதிய ஆய்வு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். தீவிரமான...

விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓடியவருக்கு 125,500 ரூபாய் தண்டம்!

மதுபோதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர் இன்று நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் முற்படுத்தப்பட்டார். அவர் மீது 7 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து குற்றப்பத்திரத்தை பொலிஸார் தாக்கல் செய்தனர். மதுபோதையில் வாகனம்...

சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம் பெற்றது. இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இன்று...

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,...

யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டம் யாழ்.போதனா வைத்தியசாலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட நீண்ட கால நோய் உடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வைத்தியர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில் குறித்த தடுப்பூசியினை...

காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக் காலத்தை நீடிப்பு!!

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்து அதிசிறப்பு அரசிதழ் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டார். அதன்படி, ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ஆம் திகதிவரை காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் திகதியிலிருந்து 12 மாதங்கள் நீட்டிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று ஒக்டோபர் முதலாம் திகதி காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின்...
Loading posts...

All posts loaded

No more posts