Ad Widget

வடமராட்சியில் காரில் வந்த கொள்ளை கும்பலொன்று மூவரிடம் வழிப்பறி

வடமராட்சி பகுதியில் காரில் வந்த கொள்ளை கும்பலொன்று, ஒரு மணி நேரத்தில் மூவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். வடமராட்சி- வல்லை மற்றும் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வல்லை பகுதியில் வெள்ளை நிற காரில் நின்ற வழிப்பறி கொள்ளையர்கள்,...

தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் ஆபத்தான நிலையில்! கணவன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்வாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனிஞ்சியன்குளம் கிராமத்தில் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒரு பிள்ளையின் இளம் தாயார் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாயின் கணவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த முதலாம் திகதி காலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 22 அகவையுடைய ஒரு பிள்ளையின் தாயே...
Ad Widget

20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்!!

கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு அலகுகளும் போடப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் கொடுக்க முடிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் ஊடகப் பேச்சாளர் சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார்.

எரிவாயு, பால் மா, கோதுமை மா, சீமெந்தின் கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

எரிவாயு, பால் மா, கோதுமை மா மற்றும் சீமெந்து என்பனவற்றுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேட அமைச்சரவை கூட்டத்தில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆளுநராக ஜீவன் தியாகராஜா புதனன்று கடமைகளைப் பொறுப்பேற்பார்!!

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ள ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார். அவர் வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது. இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும்...

நாட்டில் முதன் முறையாக பெண்கள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்வு!

நாட்டில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர். உடன் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோர் பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், பெறுபேறு மீளாய்வுக்காக ஒன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களை பார்வையிட பின்வரும் இணையத்தளத்திற்குள் பிரவேசிக்கவும்.. https://www.youtube.com/watch?v=faFrhvyeVqM

அனுராதபுரத்திலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுங்கள் – சாணக்கியன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து...

சமையல் எரிவாயு விலையை மீள அதிகரிக்க வேண்டிவரும்!!

எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். உலகச் சந்தையில் எரிவாயு விலை வேகமாக அதிகரிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே லசந்த...

3 முதல் 12 வயதுடையவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கலாமா? – ஆராய்கிறது சுகாதார அமைச்சு

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அலகு வழங்கப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், மருத்துவ வல்லுநர் ஷியாமன் ராஜீந்திரன் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தடுப்பூசி போடப்பட்ட எந்த சிறுவரும் தடுப்பூசியால் கடுமையான...

சந்தேக நபர்கள் தப்பிக்க சுன்னாகம் பொலிஸார் உதவி; மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

ஏழாலை பிரதேசத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் வேண்டும்மென்றெ தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம் ஆரம்பித்துள்ளது. இந்த தகவலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார். சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ்...

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 776 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 22 ஆயிரத்து 778ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 326 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு...

காரைக்காலில் இருந்து இலங்கைக்குக் கப்பல் சேவை: தமிழிசை

காரைக்கால் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்தாா். புதுவையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது தொடா்பாக இலங்கையில் இருந்து அமைச்சா்களும் தூதுவா்களும் ஏற்கெனவே புதுவைக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா்...

யாழில் பல்வேறு நீர்வழங்கல் திட்டங்கள் பிரதமரினால் ஆரம்பித்துவைப்பு!

ஜனாதிபதியின் “சுபீட்சத்திற்கான நோக்கு” எண்ணக்கருக்கமைய நயினாதீவில் முழுமைப்படுத்தப்பட்டுள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம்,தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஆரம்ப பணிகள்,கிளிநொச்சி – யாழ்ப்பாணம் நகர நீர் வழங்கல் திட்டம் என்பன பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால், மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக, அலரிமாளிகையில் வைத்து இன்று (புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டன. நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக...

கீரிமலை கடலில் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்பு

கீரிமலை கடலில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டரை மணிநேர தேடலின் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. அந்தியெட்டிக் கிரியைக்காக கீரிமலைக்கு சென்ற இளைஞன் உறவினர்களுடன் கடலில் குளித்த வேளை இச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கலட்டியைச் சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சீவன் (வயது-18) என்பவரே மரணமடைந்துள்ளார். https://www.jaffnajournal.com/archives/%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b3.html

கீரிமலை கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். தட்டாதெருவை சேர்ந்த சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது 19) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார். தனது நண்பர்கள் இருவருடன் கீரிமலை கடலில் இன்று (புதன்கிழமை) நீராடிக்கொண்டு இருந்த வேளை காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கும் , கடற்படையினருக்கும் தகவல்...

வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடன் தீர்வு வழங்கக் கோரியும் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியும் உலக ஆசிரியர் தினமான இன்று நாடுமுழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றன. ஆசிரியர் மற்றும் அதிபர் இணைந்த தொழிற்சங்கங்களினால் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இன்று முற்பகல் 10 மணியளவில் வடமாகாண கல்வியமைச்சுக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய...

காத்தான்குடியைச் சேர்ந்தவர் அச்சுவேலியில் சடலமாக மீட்பு!!

அச்சுவேலி நகரில் உள்ள சிகரம் பிளாச கட்டடத் தொகுதியில் அறை ஒன்றில் வாடகைக்கு தங்கியிருந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அச்சுவேலி உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காத்தான்குடி அமானுல்லா வீதியைச் சேர்ந்த ஆதாம்பாவா முகம்மது றவுஸ் (வயது- 46) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை அவர் அறையிலிருந்து...

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவரை தப்ப விட்ட பொலிஸார்!

வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நபர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சுன்னாக பொலிஸாரிடம் ஒப்படைத்த போது , பொலிஸார் அவரை தப்ப விட்டுள்ளனர் என அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏழாலை சிவகுரு கடைக்கு அருகாமையில் வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , வீட்டில் இருந்த...

தொழிலுக்காக வௌிநாடு செல்வோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கை ஆரம்பம்!!

வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்ல எதிர்பார்த்துள்ளோருக்கு தடுப்பூசியேற்றும் நடவடிக்கைககள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கோரிக்கைக்கு அமைய, நாரஹென்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி ஏற்றுவதற்கு வழங்கப்பட்டுள்ள திகதி மற்றும் நேரத்தில் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருமாறு இராணுவத் தளபதி கோரிக்கை...
Loading posts...

All posts loaded

No more posts