Ad Widget

3 முதல் 12 வயதுடையவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கலாமா? – ஆராய்கிறது சுகாதார அமைச்சு

நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 12 முதல் 19 வயதுக்குட்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தடுப்பூசியின் முதல் அலகு வழங்கப்பட்டுள்ளதாக குழந்தை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர், மருத்துவ வல்லுநர் ஷியாமன் ராஜீந்திரன் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தடுப்பூசி போடப்பட்ட எந்த சிறுவரும் தடுப்பூசியால் கடுமையான பக்க விளைவுகளை சந்திக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

03 தொடக்கம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி பொருத்தமானதா என்பதை அறிய ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது என்று மருத்துவ வல்லுநர் ஷியாமன் ராஜீந்திரன் குறிப்பிட்டார்.

நாட்டில் மற்றொரு கோவிட்-19 அலையை அனுமதிக்க வேண்டாம் என்று தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்பட ஒட்டுமொத்த மக்களிடமும் வேண்டுகோள் விடுப்பதாக சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

Related Posts