Ad Widget

காணாமற்போன கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர் சடலமாக மீட்பு!!

கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில் இரண்டு நாள்களின் பின்னர் நேற்று நவாலியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது-51) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடக்கம் அவரைக் காணவில்லை என...

அடுத்த 2 வாரங்களில் கோவிட்-19 வைரஸ் பரவல் அடிப்படையில் கட்டுப்பாடுகள் இறுக்கப்படலாம்

அடுத்த இரண்டு வாரங்களில் கோவிட் -19 தொற்றுநோய் பரவல் அடிப்படையில் பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்தார். சுகாதார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்....
Ad Widget

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறினால் நிலைமை மேலும் மோசமாகும் – ஆ. கேதீஸ்வரன்

ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒன்றுகூடினால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், தடுப்பூசி பெற்றவர்களாக இருந்தாலும், சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் எனவும், அவர் கூறினார்....

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக அறிவிப்பு!!

ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கான தங்களது சேவையை மீள ஆரம்பிக்கவுள்ளது. எனினும் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்படாது என கூறப்படுகின்றது.

உற்சவங்கள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை- இரவு நேர ஊரடங்கு அமுல் : விசேட அறிவிப்பு வெளியானது!

நாடு, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்று முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது....