Ad Widget

நாளை முதல் மாற்றத்திற்கு உட்படும் சுகாதார நடைமுறைகள்!

புதிய சுகாதார நடைமுறைகளுக்கு அமைய சில கட்டுப்பாடுகளுடன் திருமண நிகழ்வுகளை நாளை (15) முதல் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண்டபவங்களின் அளவில் 25 சதவீதம் பூர்த்தியடைய கூடிய விதத்தில் அதிகபட்சமாக 50 பேர் கலந்து கொள்ளும் அளவில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வௌிப்புற திருமணங்கள் வரவேற்கப்படுவதாகவும் அவற்றில் மது பாவனைக்கு அனுமதி இல்லை...

எந்தவொரு தொலைபேசி எண்ணையும் வேறொரு வலையமைப்புக்கு மாற்ற சட்ட அனுமதி

அனைத்து அலைபேசி இணைப்பு சந்தாதாரர்களும் தங்கள் அலைபேசி எண்ணை மற்றொரு சேவை வழங்குநரின் இணைப்புக்கு (Number Portability) மாற்றும் சேவைக்கு சட்டப்பூர்வ ஒப்புதல் பெற்றுள்ளனர். இந்தத் தகவலை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷாத சேனாநாயக்க தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். அனைத்து...
Ad Widget

வடமாகாணத்தில் வாள்வெட்டு மற்றும் வன்முறை குழுக்களுக்கு முடிவுரை எழுதப்படும்! – வடக்கு ஆளுநர்

வாள்வெட்டு சம்பவங்கள், வன்முறைச் சம்பவங்களுக்கு முடிவு கட்டுவேன். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், என்னுடைய பதவிக்காலத்தில் வடமாகாணத்தில் வாள்வெட்டு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு இடமளிக்கப்போவதில்லை. வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கை...

எரிவாயுவின் விலை மீண்டு அதிகரிக்க நேரிடும்- லிற்ரோ நிறுவன தலைவர்

நாட்டின் முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான லிற்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் சமீபத்தில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ .1270 ஆல் உயர்த்தியது. விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த லிற்ரோ நிறுவனத்தின் தலைவர் டெஷாரா ஜெயசிங்க, இந்த உயர்வு உடனடியாக குறைக்கப்படும் என்று பொதுமக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளிக்க தேவையில்லை என்று கூறினார்....

நான்கு மாத சிசு உள்ளிட்ட 27 பேருக்கு வடக்கில் கொரோனா!

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 147 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 27 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். இதன்படி யாழ்.மாவட்டத்தில் 5 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்து 4 மாதங்களேயான சிசுவுக்கும்,...

வடக்கில் வன்முறைகள், போதைப்பொருள் பாவனை அதிகரிப்புக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் – யாழ்.ஆயரிடம் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு

வடக்கு மாகாண இளையோருக்கு வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்களும் போதைப்பொருள் பாவனையும் அதிகரித்து காணப்படுகின்றன என்று பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தன்னிடம் தெரிவித்தார் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், அதிவண, கலாநிதி ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரை நேற்று மாலை...

வடக்கு மீனவர்களை வன்முறைக்கு தூண்டும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளசை கண்டிக்கின்றோம் – சுமந்திரன் எம்.பி

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களை தடுக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில் அதனை நடைமுறைப்படுத்தாது மீனவர்களை வன்முறைக்கு தூண்டும் மீன்பிடித்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவின் செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன், கடந்த ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மீன்பிடி சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்துகின்றார். யாழ்ப்பணத்தில் நேற்று இடம்பெற்ற...

சுப்பிரமணியம் சுவாமி அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு!!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்....

அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது – மக்களுக்கு எச்சரிக்கை!

அத்தியாவசியமற்ற எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைவாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், பிற்போடப்பட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கான...

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் – ஜி.எல்.பீரிஸ்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் உள்ளது. இந்தநிலையில், பயணத்தடையை மேலும் நீட்டிப்பது குறித்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தீர்மானிக்கும். எனினும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம்,...