. September 2021 – Page 3 – Jaffna Journal

சுமந்திரனிடம் தமிழர் தாயக சங்கம் முக்கிய கோரிக்கை!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான திறவுகோல் ரோம் சாசனத்தில்தான் உள்ளதே தவிர OMP இடத்தில் அல்ல என்று வவுனியாவில் கடந்த 1678 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினரால் வவுனியாவில் இன்று... Read more »

பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு!!

எதிர்வரும் நாட்களில் பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். விலை உயர்வை அனுமதித்தால் எந்தப் பற்றாக்குறையும் இல்லாமல் பொருட்களை வழங்க முடியுமா என்பது குறித்து சம்பந்தப்பட்ட... Read more »

யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடாத்துவதற்கு மாணவர் ஒன்றியம் எதிர்ப்பு !!

நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை முழுமையாக நிராகரிக்கின்றோம் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா பகுதி இரண்டானது... Read more »

பாசையூரில் வீடொன்றுக்குள் அடாவடியில் ஈடுபட்ட கும்பல் அரை மணிநேரத்தில் சிக்கியது

பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த கும்பல் ஒன்றைச் சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் இடம்பெற்று அரை மணிநேரத்தில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “பாசையூர் அந்தோனியார் கோயிலுக்கு... Read more »

பிறந்தநாள் கொண்டாட்டம்- யாழில் 35 பேருக்கு எதிராக நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் யாழ்.திருநெல்வேலி மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். திருநெல்வேலிப் பகுதியிலுள்ள பிரபல விடுதியில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும் ஓட்டுமடம் பகுதியிலுள்ள வீடொன்றில்... Read more »

யாழில் ஆவா குழுவை சேர்ந்த நால்வர் கைது!!

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த முத்து... Read more »

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – இருவர் மீது வாள்வெட்டு – சந்தேக நபர் ஒருவர் கைது!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடாத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “மாவடி பகுதியைச் சேர்ந்த வன்முறை கும்பல் ஒன்று, நேற்று இரவு 7 மணியளவில் முதலிய கோயில் பகுதிக்குள் உள்நுழைந்து... Read more »

கொரோனாவினால் உயிரிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி- கிளிநொச்சியில் பரபரப்பு

கிளிநொச்சியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவரை, அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி- உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர், கடந்த... Read more »

ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு?

இறக்குமதி பால் மாவின் விலையை ஒரு கிலோகிராமுக்கு 200 ரூபாவால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் லசந்த அழகியவன்ன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் வாழ்க்கைச் செலவுக் குழுவால்... Read more »

டெல்டா கட்டுப்பாட்டுக்குள் : மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக அமைந்துள்ளது : சுகாதாரப் பணியகம்

கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் வெற்றி மற்றும் நீண்டகால தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் சாதகமான பெறுபேறுகள் வெளிவர ஆரம்பித்துள்ளதாகவும், டெல்டா வைரஸ் பரவல் வெகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார். வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்ற நேரங்களில் மக்களின் செயற்பாடுகள் மிக மோசமாக... Read more »

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும் சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்... Read more »

யாழில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளைஞன் சுத்தியலினால் அடித்துக்கொலை?

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம் குடும்பத்தலைவர், அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. குறித்த குடும்பத்தலைவர், ஆயுதமொன்றினால் தலையில் தாக்கப்பட்டமையே உயிரிழப்புக் காரணம் என யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வல்லுநரினால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சம்பவ இடத்துக்கு... Read more »

வடக்கு மாகாணத்தில் 20- 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் 20 தொடக்கம் 30 வயதிற்கு உட்பட்ட அனைவருக்கும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்... Read more »

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை- கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நால்வருக்கு விளக்கமறியல்!

மன்னாரில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் 4 பேரை கைது செய்து, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர் இதன்போது, சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட நீதிபதி, குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில்... Read more »

யாழ்.பல்கலைக்கழக மாணவன் மரணம் குறித்து முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் மரணம் தொடர்பில் முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி... Read more »

கறுப்பு பூஞ்சைக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அவசியம்! அறிகுறிகள் இவை தான்!

கடந்த ஜூலை மாதம் முதல் இது வரையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 12 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்தார். கருப்பு பூஞ்சை நோய்க்கான பிரதான அறிகுறி முகத்தின் ஒரு பக்கத்தில் வலி ஏற்படுகின்றமையாகும். அத்தோடு... Read more »

யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்புக்கு அனுமதி மறுப்பு!

எதிர்வரும் நாட்களில் கொரோனா நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியக் கலாநிதி அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம்... Read more »

தடுப்பூசியை பெற்றுகொள்ள மாணவர்களை தயார் செய்யவும் – பெற்றோருக்கு அறிவுறுத்தல்

பாடசாலை செல்லும் மாணவர்களை தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயார்ப்படுத்துமாறு சுகாதார அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது. குறிப்பாக தடுப்பூசியை செலுத்துவதற்கான காலக்கெடு இறுதி செய்யப்படாத நிலையில் இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறையான உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடங்காது என வைத்திய... Read more »

ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை!! கொக்குவிலில் 5பேருக்கு கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி வீதியில் பயணிப்பவர்கள், அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டவர்கள் தவிர்ந்து வீதிகளில் நடமாடுபவர்களுக்கு அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் நல்லூர்... Read more »

யாழில் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளின் ஒரு கட்டமாக சுமார் 260 இலட்சம் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடற்றொழில் அமைச்சின் களப்பு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும்... Read more »