Ad Widget

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்- யாழ்.பல்கலைக்கழகத்திலும் அஞ்சலி!!

தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினாலும் அனுஷ்டிக்கப்பட்டது. பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது. 1987 செப்டெம்பர் 15 ஆம் திகதி, ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அவர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். எனினும், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், 1987ஆம் ஆண்டு...

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

வடக்கில் கடந்த 24 நாட்களில் 310 பேர் கொரோனோ வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அதாவது, செப்டெம்பர் மாதத்தின் நேற்று (வெள்ளிக்கிழமை) வரையான காலப்பகுதியில் வடக்கில் 8 ஆயிரத்து 401 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின்படி, நேற்றைய தினம் வவுனியா மாவட்டத்தில் 38 தொற்றாளர்களும்...
Ad Widget

ஒக்டோபர் முதலாம் திகதி கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்!

ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்படும் என நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் எதிர்வரும் முதலாம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளன. இந்நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நாடு திறக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இருப்பினும் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதி...

அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தார் சுமந்திரன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் உட்பட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன், அவர்கள் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது முன்னாள் வட...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் நால்வர் கைது!!

மருதனார்மடம் சந்தியில் பழக்கடை நடத்துபவர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொண்ட வன்முறைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், யாழில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை நாட்டிலிருந்து தப்பித்து இந்தியாவில் தங்கியுள்ள தேவா மற்றும் ஜெனி இயக்குவதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு...

பொலிஸாரின் விண்ணப்தை ஏற்று திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு!!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது. நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதிரை நடத்த ஏற்பாடாகியுள்ள 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸாரினால்...

பாடசாலை மாணவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி!!

12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையானது நாளை (24) ஆரம்பமாக உள்ளது. கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் தடுப்பூசி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மேலும் குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும்...

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட குடும்பப்பெண் திடீரென உயிரிழப்பு!

வடமராட்சியில் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்திருந்த குடும்ப பெண்ணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். வடமராட்சி நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் சில வாரங்களுக்கு முன்னர் கொரோனோ தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமாகி இருந்தார் எனவும் , அந்நிலையில் திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக...

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் இன்று(வியாழக்கிழமை) அஞ்சலி செலுத்த முற்பட்ட நிலையிலையே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் நபர்களை கைது செய்யும் நோக்குடன்...

நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள்!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் ஜெனரல் ஹேமந்த ஹேரத் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இவ்வாறு தெரிவித்தார். நாட்டை முழுமையாக ஒரே நேரத்தில் திறக்க பரிந்துரைக்கப்படவில்லை என்றும் நாடு முழுமையாகத்...

யாழ்.பல்கலை. பட்டமளிப்பு விழா ஒக்டோபர் 7இல் நிகழ்நிலையில் நடத்தப்படும்- மாணவர்களும் இணக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி அறிவிக்கப்பட்டபடி எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நிகழ்நிலை வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாக் குழுத் தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் இதனைத் தெரிவித்தார். பட்டமளிப்பு விழாத் தொடர்பில் தீர்மனங்களை இயற்றுவதற்காக இன்று புதன்கிழமை நண்பகல் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா...

கர்ப்பிணிதகர்ப்பிணித்தாய்மார்கள் தடுப்பூசி பெறுவதில் ஆர்வமில்லை!! இதனால் ஏற்ப்படும் ஆபத்துக் குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிக்கை!!

யாழ்ப்பாணத்தில் இன்னமும் கணிசமான கர்ப்பிணித்தாய்மார்கள் மத்தியில் கோவிட்-19 தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. தடுப்பூசியானது ஏனையவர்களைப் போலவே கர்ப்பவதிகளை கோவிட் – 19 தொற்றிலிருந்து பாதுகாப்பதுடன் தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்களையும் மிக கணிசமான அளவில் குறைக்கும். மாறாக இத்தடுப்பூசியானது அதனைப் பெற்றுக்கொள்ளும் கர்ப்பவதிக்கோ, அவரது சிசுவிற்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு...

உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்குமாறு கோரிக்கை!

உள்நாட்டு பால்மாவின் விலையையும் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, இந்த அதிகரிப்பை முன்னெடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் தயாரிப்பதற்காக பால்மாவை பயன்படுத்துவதைவிட பசும்பாலை பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்கு இலாபகரமானது என மில்கோ சங்கத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன்,...

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழப்பு – புதிதாக 878 பேருக்கு தொற்று!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான இருவரும் 60 வயதுக்கு குறைவான 19 பேரும் 60 வயதுக்கு மேற்பட்ட 71 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து,...

“வடக்கில் மின்தகன சாலைகள் அமைப்பது காலத்தின் தேவை; சம்பந்தப்பட்ட சகலரும் ஒன்றிணைவோம்” – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்

வடக்கு மாகாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை வெளி மாகாணங்களுக்கு மின் தகனத்துக்கு அனுப்பிவைக்கப்படுவது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; வடமாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி முதல் கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது. வடமாகாணத்தில் இதுவரை...

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சத்தில் உள்ளனர்- சுரேஸ் பிரேமச்சந்திரன்

யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மக்கள் அச்சம் கொள்ளக் கூடிய ஒரு சூழல் தொடர்வதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து...

இலங்கை மக்களுக்கு பைசரை மூன்றாவது தடுப்பூசியாக வழங்க நடவடிக்கை!

இலங்கை மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

30 க்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்துவதற்கு காலக்கெடு – அரசாங்கம்

30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது. குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 30 வயதுக்கு மேற்பட்ட பலர் தடுப்பூசி பெற்றிருந்தாலும், ஒருசிலர்...

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

வடக்கு மாகாணத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில், மன்னார் மாவட்டத்தில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் முதல் கட்டமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று ஆரம்பிக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் ஜனாதிபதி தெரிவிப்பு- உறவுகள் கண்டனம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படும் என ஐ.நா மன்றில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
Loading posts...

All posts loaded

No more posts