. September 2021 – Jaffna Journal

வடக்கில் 12-19 வயதுக்குட்பட்ட சிறப்பு தேவை, நாள்பட்ட நோயுடையோருக்கு பைசர் தடுப்பூசி வழங்கல் வெள்ளியன்று ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் சிறப்பு தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றும் நடவடிக்கை நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில்... Read more »

தேவாலயங்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகளால் பீதியடைய வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு

சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் இலங்கை தேவாலயங்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என்ற செய்தி அடிப்படைத் தகவலை அடிப்படையாகக் கொண்டது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு குறித்த தகவல் அந்தந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல். கமல்... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்வு!!

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்... Read more »

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டம்!!

தென் மாகாணத்தில் உள்ள, 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் தென் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண... Read more »

மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அனுமதி!

தடுப்பூசியின் மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை செலுத்துவதற்கு தடுப்பூசி தொடர்பான தொழிநுட்ப குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்டோர், சிறுநீரக கோளாறு, புற்று நோய் போன்ற பாரதூரமான நோய்களைக் கொண்டுள்ள... Read more »

மாற்றுத்திறனாளியின் தோட்டம் விசமிகளால் நாசம் : சட்ட நடவடிக்கை எடுப்பதாக யாழ். மாநகர முதல்வர் உறுதி

பளை பிரதேசத்தில், மாற்றுத்திறனாளி ஒருவருடைய, மிளகாய் செடிகளை மர்ம நபர்கள் பிடுங்கி எறிந்த நிலையில், இன்றைய தினம் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு ஒரு தொகை நிதியையும் வழங்கினார். அதேவேளை அவர்களுக்கு... Read more »

விடுவிக்கப்பட்ட மக்களின் காணிகளை இராணுவம் மீள கையகப்படுத்தும் நடவடிக்கை : நேரில் சென்று பார்வையிட்டார் சுமந்திரன்

கடந்த ஆட்சிக் காலத்தில் வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை இராணுவத்தினர் மீள கையகப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் அப்பகுதிகளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேரில் சென்று ஆராய்ந்தார். வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன்... Read more »

ஒக்டோபரில் நாட்டைத் திறப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எட்டப்படவில்லை !!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்குவதா அல்லது நீடிப்பதா என்பது குறித்த இறுதி முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »

இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த கலந்துரையாடலின் போது இந்திய திட்டங்கள் மற்றும் வட மாகாணத்தில்... Read more »

யாழ் இளைஞனின் விசித்திர செயல்! – பொலிஸார் விசாரணை!

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவன், விசித்திரமான முறையில் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் நேற்று (26) பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணையினை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பச்சை குத்துவதில் பிரபலமான... Read more »

நாடு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும்!!

நாடு முறையான முறையில் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். “கோரோனா வைரஸ் தொற்றாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனைகளில்... Read more »

வாளுடன் நின்று டிக் டொக்கில் வீடியோ செய்து வெளியிட்ட சங்கானை இளைஞன் கைது

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞன் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். சங்கானையைச் சேர்ந்த இளைஞன் சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து... Read more »

பிறக்கும் குழந்தைக்கு தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்குமாறு கோரிக்கை!!

பிறக்கும்போதே ஒவ்வொரு குழந்தைக்கும் தேசிய அடையாள அட்டை எண் வழங்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. சிறுவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு, தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகளுக்கு அடையாள அட்டை... Read more »

தமிழர்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் – இரா.சம்பந்தன்

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பல்வேறு அரசதலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் வரலாற்று ரீதியான வாழ்விடத்தைப்... Read more »

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய விதிமுறைகள்- கெஹெலிய ரம்புக்வெல

எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தடுப்பூசி பெற பலர் வருகிறார்கள். ஆனால் சிலர் அதை புறக்கணிப்பதாகவும் எதிர்காலத்தில் தடுப்பூசியை மறுபரிசீலனை செய்வதன் அவசியம் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பாய்வு... Read more »

நாட்டை மீள திறக்க சுகாதார பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். தற்போதைய தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு அக்டோபர் 1 ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு முடிவடையவுள்ள நிலையில் சுகாதார, போக்குவரத்து... Read more »

திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு கட்டுப்பாடுகள்!!இரவில் ஊரடங்கைத் தொடரவும் ஆராய்வு!! சுற்றறிக்கை 1ம் திகதி வெளியாகும்!!

திருமணங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான புதிய சுகாதார வழிகாட்டல் சுற்றறிக்கையை சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் அசேல... Read more »

கொரோனாவின் 5 ஆவது அலையை தவிர்க்க வேண்டும் : அரசாங்கத்திடம் பரிந்துரைகளை முன்வைக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டை தொடர்ந்தும் முடக்கி வைத்திருக்க முடியாது என்பதால், போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டவுடன் ஐந்தாவது அலை ஏற்படுவதை தவிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. எனவே வீடுகளிலேயே தொற்றை இனங்காண்பதற்கான எளிமையான பரிசோதனை முறைமையை அறிமுகப்படுத்தல் , எழுமாற்று பரிசோதனைகளின் அளவை அதிகரித்தல், வினைத்திறனான தடுப்பூசி வழங்கல்,... Read more »

உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தடையுத்தரவு- மயானத்தில் சென்று வழங்குமாறு பொலிஸாருக்கு மகன் தெரிவிப்பு

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு பொலிஸார் தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறி பொலிஸார், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்தினம் வழக்குப்... Read more »

சர்வதேச நாடுகளிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கிய கோரிக்கை!!

சர்வதேச நாடுகளிடம் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து இவ்வாறு 5 அம்ச கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். குறித்த 5... Read more »