Ad Widget

கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய விதிமுறைகள்- கெஹெலிய ரம்புக்வெல

எதிர்காலத்தில் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்குவது தொடர்பாக புதிய விதிமுறைகளை உருவாக்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி பெற பலர் வருகிறார்கள். ஆனால் சிலர் அதை புறக்கணிப்பதாகவும் எதிர்காலத்தில் தடுப்பூசியை மறுபரிசீலனை செய்வதன் அவசியம் நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கெஹெலிய ரம்புக்வெல மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்காலத்தில் தடுப்பூசி தொடர்பான சட்ட கட்டமைப்பை உருவாக்குவது அவசியமானால், அது சுகாதாரத் துறையுடன் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும். மேலும் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்படும்.

இதேவேளை பாடசாலைகளை திறப்பதில் பெரும் பிரச்சினையாக இருந்த ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தற்போது 99 வீதம் என்ற இலக்கை தாண்டிவிட்டது.

அத்துடன் நாடு தொடர்ந்து மூடப்படுமா அல்லது மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. ஆனாலும் சிறிய பொருளாதாரம் கொண்ட இந்த நாட்டை மேலும் மூடாமல் மீண்டும் திறப்பது மிகவும் பொருத்தமானது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts