- Thursday
- July 3rd, 2025

வடமராட்சி- பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அல்வாய் பகுதியினைச் சேர்ந்த 2பிள்ளைகளின் தந்தையான மு.கௌசிகன் (வயது 31) என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் பின்னர் வாள்...

மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையினால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில், கடந்த அரசாங்கத்தில் மாகாணசபை தேர்தல் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டதில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தொடர்புபட்டிருந்தது என கூறினார். முன்னாள் அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்டு தவறாக அங்கீகரிக்கப்பட்ட சட்டமூலம் காரணமாக மாகாணசபை தேர்தலை நடத்த...

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் அரச கடமைக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பெயர்ப் பலகையினை அகற்றினார் எனக் குற்றச்சாட்டப்பட்ட ஏற்கனவேயுள்ள விசாரணையில் உள்ள வழக்கு என மத்திய அரசின் திணைக்களங்களால் தாக்கல் செய்யப்பட்ட இருவேறு...

ஏப்ரல் 27 செவ்வாய்க்கிழமை நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுகாதார பரிந்துரைகளுக்கு இணங்க பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். “விடுதிகளை திறப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, பல்கலைக்கழகத்தின் தொடக்கத்தில் 4 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். முதல்...

உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்படாத சீன தடுப்பூசியை அரசு இலங்கை மக்களுக்கு வழங்க முயற்சிக்கிறதா? என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுகிறது. குறிப்பாக...

யாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அதன்படி யாழ். மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 6 பேருக்கு தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் என்றும் ஏனைய நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என்றும் வைத்தியர்...