Ad Widget

இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மறுப்பு

இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதனை தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார். கடந்த காலங்களின் இராணுவத்தின் செயற்பாட்டை தாம் ஏற்றுக்கொள்ள போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொவிட் 19 தடுப்பூசியை...

வீட்டுத் திட்டத்துக்கான முழுமையான நிதியை வழங்கக் கோரி ஆளுநர் செயலகம் முன் ஆர்ப்பாட்டம்!

வீட்டுத் திட்டத்துக்கான மீதி பணத்தினை பெற்றுத்தருமாறு கோரி சண்டிலிப்பாய் பெரியவிளான் மக்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலக முன்றலில் இன்று (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரிய விளான் 3 ஆம் வட்டாரம் ஜே 153 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள மக்களுக்கு ஏழு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பொறுமதியிலான வீட்டுத்திட்டம்...
Ad Widget

காரைநகரில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்கும் முயற்சி மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்

காரைநகர் இந்துகல்லூரிக்கு சொந்தமான 2 பரப்பு காணி மற்றும் பொதுமக்களுக்கு சொந்தமான 6 பரப்பு காணி என 8 பரப்பு காணியை கடற்படையின் எலாற கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது. நில அளவை திணைக்கள அதிகாரிகளால் கடற்படையின் தேவைக்காக குறித்த காணியை அளவீடு செய்வதற்கு இன்று காலை முயற்சிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,...

மின் உற்பத்தி திட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு சீனா பதில்!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளிலும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டமை முற்றிலும் ஒரு வணிக நடவடிக்கையாகும் எனவும், சர்வதேச ஏல நடைமுறைகளுக்கு அமையவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது. குறித்த மின் உற்பத்தி திட்டம் குறித்த இந்தியாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனா இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாக, சர்வதேச...

மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

கொரோனா வைரஸின் புதிய வகை ஒன்றை பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே கொரோனா வைரஸின் இன்னொரு புதிய வகையை பிரிட்டனில் ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. B.1.525 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோன வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய...

வடக்கில் தனியார் சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்க விவரம் கோரல்!!

வடக்கு மாகாணத்தில் கோவிட் -19 தடுப்பூசி மருந்தும் வழங்கும் நடவடிக்கையில் இரண்டாவது கட்டமாக தனியார் சுகாதாரத் துறையில் கடமையாற்றும் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள், பதிவு மருத்துவ அதிகாரிகள் (RMO) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது. இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;...

செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரை அடையாளம் காணுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணம் செம்மணி வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை அடையாளம் காணுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அறிவித்துள்ளது. நேற்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து செம்மணி வீதி ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார். முதியவர் உயிரிழந்த நிலையில் சடலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்....

வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா!

வட மாகாணத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று(செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் பூநகரியில் சேவையாற்றும் தனங்களப்பு பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 376 பேரின் மாதிரிகள்...

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளின் கனிஷ்ட பணிக்குழாமினர் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர். சில கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, ராகம, அநுராதபுரம் போதனா வைத்தியசாலைகள் என்பனவற்றின் கனிஷ்ட...