Ad Widget

வடக்கில் தனியார் சுகாதாரத் துறையினருக்கு கோவிட் -19 தடுப்பூசி வழங்க விவரம் கோரல்!!

வடக்கு மாகாணத்தில் கோவிட் -19 தடுப்பூசி மருந்தும் வழங்கும் நடவடிக்கையில் இரண்டாவது கட்டமாக தனியார் சுகாதாரத் துறையில் கடமையாற்றும் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள், பதிவு மருத்துவ அதிகாரிகள் (RMO) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஜனவரி மாதம் இறுதி வாரம் முதல் அரச சுகாதாரத்துறையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி மருந்து முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இரண்டாவது கட்டமாக தனியார் சுகாதாரத் துறையில் கடமையாற்றும் மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள், பல் மருத்துவர்கள், பதிவு மருத்துவ அதிகாரிகள் (RMO) ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கும் இத்தடுப்பூசியானது வழங்கப்படவுள்ளது.

எனவே வடமாகாணத்தில் இயங்கும் தனியார் வைத்தியசாலைகளின் நிர்வாகம் தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர்களுக்கு தமது வைத்தியசாலை அமைந்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுடன் தொடர்புகொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் – என்றுள்ளது.

Related Posts