. February 2021 – Jaffna Journal

யாழில் மாபெரும் போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு!

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை விடயங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள பலவீனமான முன்வரைவு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி வேண்டி யாழில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்... Read more »

20 ரூபா நாணய குற்றி புழக்கத்துக்கு வருகிறது!!

இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நாணயத்தை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கினார். இது இலங்கை... Read more »

மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை தொடர்வேன்- காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர் ரிஐடியிடம் தெரிவிப்பு

“எனது மகனை என்னிடம் ஒப்படைக்கும் வரை போராட்டத்தை நான் தொடர்வேன். எமது உறவுகளை எம்மிடம் ஒப்படையுங்கள் போராட்டத்தை கைவிடுகின்றோம்” இவ்வாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கச் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா. வடக்கு... Read more »

30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும்!!

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கப்படும் என்று தொற்றுநோயியல் மற்றும் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்படுத்தல் இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே தெரிவித்தார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைத் தெரிவித்தார். “முதல் கட்டமாக... Read more »

வயோதிபப் பெண்ணை தாக்கி கொள்ளை; சந்தேக நபர்கள் இருவர் வேலணையில் சிக்கினர்

ஊர்காவற்றுறை சரவணையில் பட்டப்பகலில் வீடு புகுந்து வயோதிப் பெண்ணைத் தாக்கி தங்க நகைகளை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி, மானிப்பாயைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளையிட்ட நகைகள் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைக்கப்பட்ட... Read more »

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 955 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது 955 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதய கொரோனா நிலைமைகள் குறித்து நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மாவட்டத்தில் இதுவரை 232 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.... Read more »

வடக்கில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று... Read more »

வடக்கின் தீவுகளை வெளிநாடுகளுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு!

வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல வினாக்கான நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான முதல்கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் (வியாழக்கிழமை) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பமாகுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்... Read more »

வீட்டுக்கு வரும் எந்தப்பிரிவினரையும் அடையாள அட்டைகளைப்பெற்று உறுதிப்படுத்துங்கள் – மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

பியகம பொலிஸ் பிரிவில் கொட்டுல்ல பிரதேசத்தில் விஷேட அதிரடிப்படையினரென தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட குழுவொன்று வீடொன்றில் நுழைந்து 50,000 இற்கும் அதிகமான பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார். சம்பவம்... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்று (24)காலை ஆரம்பமாகியது. இன்றும், நாளையும் 6 அமர்வுகளாக இடம்பெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது அமர்வில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமை தாங்கி பட்டங்களையும், தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.... Read more »

வடக்கில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியது; மாந்தையில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேருக்கு தொற்று

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 4 பேராக அதிகரித்துள்ளது. நேற்று மாந்தை மேற்கில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உள்பட 42 பேர் வடமாகாணத்தில் கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை... Read more »

யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் கையளிப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி ரெப்லிற்ஸ் அம்மையார் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பி. சி. ஆர் பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பி. சி. ஆர் இயந்திரம் ஒன்றைக் கையளித்துள்ளார். யு. எஸ். எயிட் இனால் அன்பளிப்புச் செய்யப்பட்ட இந்த பி.... Read more »

பலாலி விமான நிலையத்தை மீளத்திறத்தல் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடன் பேச்சு – சுரேஷ்

பலாலி விமான நிலையத்தை மீளத்திறத்தல் மற்றும் மன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை ஆரம்பிப்பது குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாடாளுமன்ற... Read more »

வாகன இறக்குமதிக்கான தடை ஆண்டு இறுதிவரை நீடிப்பு – அரசாங்கம்

வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்கும் முடிவு இந்த ஆண்டின் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரூபாய்க்கான பெறுமதியின் அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசாங்கம்... Read more »

காணாமற்போன நெடுந்தீவு மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் மீட்கப்பட்டுள்ளது என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடி இரண்டு நாள்களாக முன்னெடுக்கப்பட்ட பணியில் நயினாதீவு முனை கடலிலேயே ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவானிலிருந்து... Read more »

வைத்தியருக்கு கொரோனாத் தொற்று கண்டறிவைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிறப்புக்குழு!

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவ வல்லுநருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை தொடர்பாக யாரும் அச்சமடையத் தேவையில்லையென யாழ். போதனா வைத்தியசாலையின்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையில் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பிரிவின் பொறுப்பு தாதிய உத்தியோகத்தருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று காலை அன்டிஜன் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளி ஒருவருக்கும் இவ்வாறு அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவர் உள்பட சிலரின்... Read more »

பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய இளைஞன் கைது!!

விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார். வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநருக்கு கோரோனா தொற்று

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறப்பான சேவையாற்றி வரும் நரம்பியல்... Read more »