Ad Widget

கிளிநொச்சியில் 15 பேருக்கு கொரோனா: 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!!

கிளிநொச்சியில் இதுவரை 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கொரோனா நிலவரம் தொடர்பான அவசர கலந்துரையாடல் இன்றைய தினம் (திங்கட்கிழமை), கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலை...

காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!

காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது. கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கடந்த வெள்ளிக்கிழமை (நவ.27) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில்...
Ad Widget

யாழ்ப்பாணம் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை – தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தொற்று இருந்தால் காரைநகர் தனிமைப்படுத்தப்படும்

யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் முடக்கப்படும் என சில ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் அனைத்தும் தவறானவை என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். அத்துடன், காரைநகரில் 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு செய்யப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் பலருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே காரைநகர் பிரதேசம் மட்டும்...

தளபாடம் விற்க வந்தவர்கள் தனிமைப்படுத்தலில்!!

மொரட்டுவ பகுதியில் இருந்து சாவகச்சேரி பகுதிக்கு தளபாட விற்பனைக்காக வந்த 10 பேர் சாவகச்சேரி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மொரட்டுவ பகுதியில் இருந்து மூன்று வாகனங்களில் தளபாடங்களுடன் வந்த 10 பேர் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி நின்று , கிராமங்களுக்குள் கால் நடையாக சென்று தளபாட விற்பனைகளை மேற்கொள்ள தயாராக இருந்துள்ளனர்....

கடலில் குளித்த இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோஜன் (வயது -19), மாசிலாமணி...

திவிநெகும நிதி மோசடி; முன்னாள் அமைச்சர் பசில் விடுதலை

திவிநெகும நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, கொழும்பு மேல் நீதிமன்றினால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று இந்தத் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டது. திவிநெகும நிதியத்துக்குச் சொந்தமான 33 மில்லியன் ரூபாயை, 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கூரைத் தகடுகளை வழங்க பசில் ராஜபக்ச முறைகேடாகப்...

யாழ்.மாநகரில் மூடிய நிறுவனங்களை மீளத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதி!!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி, மருத்துவர் பாலமுரளி தெரிவித்தார். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 105 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தவிர்ந்த வேறு பணியாளர்களை கடமைக்கு அமர்த்தி மீளத்திறப்பதற்கு...

யாழில் உள்ள 14 வீதிகளை காப்பெற் வீதியாக தரமுயர்த்தும் செயற்திட்டத்திற்கு இன்று அங்குராட்பணம்

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செயற்திறன்மிக்க தலைமையின் கீழ் கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டலின் மூலம் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற விஷேட 1 லட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக கிராமிய வீதிகளை காப்பெற் வீதியாக மாற்றும் சிறப்பு வாய்ந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும்...

வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும் போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த வேண்டும்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும் போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்தும் நடவடிக்கை, மாகாண ஆளுநர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்படும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள்...

பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச தின செய்தி!!

பலஸ்தீன மக்களுடனான உறவை வலுப்படுத்துவது தொடர்பான சர்வதேச பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான தினத்தை முன்னிட்டு செய்தியொன்றை வெளியிட கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தேசத்தை உருவாக்கும்போது, நக்பா மற்றும் பலஸ்தீனர்கள் தங்களது இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டனர். அதன்போது இடம்பெற்ற நகரம் மற்றும் கிராமத்தை அழிக்கும் பேரழிவின் எதிரொலியாக 1978ஆம் ஆண்டு ஐக்கிய...

மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கௌரவ பிரதமருடன் சந்திப்பு

மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ அஹமட் டிடி அவர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று விஜேராமவிலுள்ள கௌரவ பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு இடையே கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பிலான நான்காவது தேசிய பாதுகாப்பு ஆலோசனை முத்தரப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக நாட்டிற்கு...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ பிரதமருடன் சந்திப்பு

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்களுக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வெள்ளிக்கிழமை விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் அவர்கள், கௌரவ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை கௌரவ...

கிராமத்துடன் கலந்துரையாடல்’ என்ற வேலைத்திட்டத்தினூடாக வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்வைத்த அபிவிருத்தி திட்டத்தை மேலும் திறம்பட கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கு ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டம் ஆரம்பம்

'வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு' அபிவிருத்தி செயல்திட்டத்தின் கீழ் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் மாகாண மட்டத்தில் நடத்தப்படும் கூட்டம் (2020.12.14) தென் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படும் என கடந்த 27ம் திகதி முற்பகல் பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் திரு.பசில் ராஜபக்ஷ அவர்கள் மற்றும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும்...

மஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகமவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளதுடன், மேலும் 43 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். எனினும் இந்த அனர்த்தத்தில்...

அல்லைப்பிட்டி வந்த இளைஞனுக்கு கொரோனா அறிகுறி

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.. அல்லைப்பிட்டி...

யாழ் பல்கலை கலைப்பீட மோதல் விவகாரம் : மாணவர்களைத் தண்டிப்பதுடன் நின்றுவிடாமல் நிர்வாகக் குறைபாடுகளையும் சீர்செய்யுமாறும் பரிந்துரை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் கடந்த மாதம் 8ம் திகதி நடைற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் அதேவேளை, இத்தகைய சம்பவங்கள் பல்கலைக்கழகத்துக்குள் நடைபெறுவதற்கு ஏதுவான பின்னணிக் காரணியாக இருக்கும் நிர்வாக ரீதியான குறைபாடுகளையும் சீர்செய்யுமாறு மாணவர் ஒழுக்காற்றுச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான தனிநபர் விசாரணையை நடாத்திய யாழ்...

வயோதிபத் தம்பதியர் மிரட்டப்பட்டனர்: விளக்கீட்டுக்காக ஏற்றப்பட்ட விளக்குகளும் உடைப்பு!

கார்த்திகை விளக்கீட்டுக்கு இராணுவம் இடையூறு ஏற்படுத்தியதுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் கார்த்திகை விளக்கீட்டுக்காக தீபம் ஏற்றிய வயோதிபத் தம்பதியர் இருவர் இராணுவத்தினரால் மிரட்டப்பட்டு விளக்குகளும் தூக்கி வீசப்பட்டதாக சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். வழமைபோல் கார்த்திகை விளக்கீட்டிற்காக விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. வீட்டு முற்றத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டிருந்த நிலையில் வீட்டு வளவின் உள்ளே...

கார்த்திகை விளக்கீடு- கைதான யாழ். பல்கலை மாணவன் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைதுசெய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு 7.45 மணியளவில் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், மாணவன் கோப்பாய் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட...

காங்கேசன்துறை கடலில் காணாமல்போயிருந்த இளைஞர்களில் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் கரையொதிங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மற்றையவர் தொடர்பாக தகவல் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு பேர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன்...

இரா.சம்பந்தனுக்கும் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்திய ஹவுஸில் இந்தச் சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் அரசியல் விவகாரங்கள் மற்றும் வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும்,...
Loading posts...

All posts loaded

No more posts