Ad Widget

மஹர சிறையில் மோதல் : உயிரிழப்பு அதிகரிப்பு, அதிகாரிகள் உட்பட பலர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகமவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளதுடன், மேலும் 43 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

எனினும் இந்த அனர்த்தத்தில் இரண்டு சிறை அதிகாரிகள் உட்பட 35 பேர் மாத்திரம் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் ஒரு குழப்பமான நிலையே உள்ளதாகவும், நிலைமைகயை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் கூறியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் மேலும் கைதியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் சிறப்பு பணிக்குழு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மகரா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஏற்பட்ட தீயை அணைக்க பல தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

இந் நிலையில் மகரா சிறைச்சாலை அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே குழுவொன்றை நியமித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் 183 கைதிகள் முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 1,091 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

Related Posts