. October 2020 – Jaffna Journal

வெளிமாவட்டங்களில் இருந்து வருவோர் 14 நாள்களுக்கு சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் – யாழ்.மாநகர முதல்வர் அறிவிப்பு

வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் மாநகரத்திற்கு வருகை தரும் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனல்ட் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பின்பற்றப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் யாழ்ப்பாணம் நகரப்... Read more »

கொரோனா தொற்று : இலங்கையில் 20 ஆவது மரணம் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றினால் பதிவான உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு 12 ஐச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த பெண் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டடுள்ளது.... Read more »

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பேருந்தில் பயணித்தவர்களுக்கு அறிவிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களை தமது பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்துடன் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகரில் உள்ள அழகு சாதனப்... Read more »

வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று: யாழில் ஆறு பேர்!

வடக்கில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி, யாழ். மாவட்டத்தில் ஆறு பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், யாழ்ப்பாணத்தில் வேலணை சுகாதார... Read more »

பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமனம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்து சமய விவகாரங்களுக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகர்களாக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் மற்றும், கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குறித்த இருவரும் நேற்று (வியாழக்கிழமை) அலரி... Read more »

மீண்டும் யாழ்.மருத்துவ பீடத்தில் பி.சி.ஆர்.பரிசோதனை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் கொரோனாத் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் மாத்திரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதனால் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. இதனைத் தவிர்க்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ... Read more »

கொரோனா அச்சுறுத்தல்: யாழ்.மக்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன

வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவோர் அந்தப் பகுதி கிராம அலுவலகர் ஊடாக தங்களது முழு விபரங்களை பதிய வேண்டும் என அம்மாவட்ட கொவிட் -19 உயர்மட்டக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கொவிட்-19 தொடர்பான விழிப்புணர்வு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும்... Read more »

20ஆவது திருத்தச் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது!!

ஜனாதிபதிக்கு அதிகாரங்களை வழங்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் இன்று தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது என்று நாடாளுமன்ற செயலாளர் நாயம் அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று கையொப்பமிட்ட நிலையில் இந்த அறிவிப்பு நாடாளுமன்ற ஊடகப் பிரிவால்... Read more »

மதுபானம் அருந்திய இளைஞர் உயிரிழப்பு!

மதுபானம் அருந்திய இளைஞர் இரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி , பூநகரி 4ஆம் கட்டையை சேர்ந்த ஜேசுராஜா திலகராஜா (வயது 30) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) மதுபானம் அருந்திய நிலையில் இரத்த... Read more »

தீவக பகுதியின் கட்டக்காலி பிரச்சனைக்கு உடன் தீர்வு – அங்கஜன் எம்.பி

வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் நடமாடி திரியும் கட்டாக்காலி மாடுகள் தொடர்பான பிரச்சனை தொடர்பில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கவனம் கொண்டு செல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று (28) காலை வேலணை பிரதேச செயலகத்தில்... Read more »

கரவெட்டி” ராஜகிராமம்” இன்று இரவு முடக்கப்படலாம்?

கரவெட்டி” ராஜ கிராமம் “இன்று இரவிலிருந்து முடக்கப்படக்கூடிய சாத்தியக் கூறு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது, கரவெட்டி ராஜ கிராம பகுதியில் 70 குடும்பத் திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப் படுத்தப் பட்டுள்ள நிலையில் இன்று அப்பகுதியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோருக்கு pcr பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை... Read more »

PCR பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களில் பழுது!! சீரமைக்க சீனா பொறியியலாளர் வரவேண்டும்!!

நாட்டின் பெரும்பாலான பிசிஆர் பரிசோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் செயல்படவில்லை என்று இராணுவத் தளபதி, லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 20 நாள்களுக்கு 24 மணி நேரமும் இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலற்றதாக இருந்திருக்கலாம். இயந்திரங்களைச் சீர்செய்ய தொழில்நுட்பவியலாளர்கள் பெரும் முயற்சி செய்தார்கள், ஆனால்... Read more »

ஆனையிறவு விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தாயும் மகனும் பரிதாபச் சாவு

எரிபொருள் பவுசரும் முச்சக்கர வண்டியும் மோதி ஏற்பட்ட விபத்தில் தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆனையிறவு பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில்... Read more »

மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் கவனயீர்ப்பு!!

“வலி. தெற்கு பிரதேச சபையே வியாபாரிகளான எமது வயிற்றில் அடிக்காதே” என பதாதைகளை தாங்கியவாறு மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்குற்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரிகள் இன்றையதினம் தமது வியாபார நடவடிக்கையில் ஈடுபடாது சந்தைக்கு முன்பாக... Read more »

யாழில் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று... Read more »

மத வழிபாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

மத வழிபாடுகளுக்காக மக்களை ஒன்றிணைக்கும் போது 50 பேருக்கு குறைந்த நபர்களை ஒன்றிணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசேடமாக எதிர்வரும் போயா தினத்தில் அதிகளவான கவனம் செலுத்துமாறு இதன்போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்... Read more »

கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் அபாயநிலை உள்ளமை உண்மையே- இராணுவத்தளபதி

கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாயநிலை உள்ளமை வெளிப்படையானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எனினும் இதுகுறித்து உறுதியாக எதனையும் கூற முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத்... Read more »

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்

மேல் மாகாணம் முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாளை நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரையில் இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டு... Read more »

மணிவண்ணனை யாழ்.மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க இடைக்காலத் தடை

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு 14 நாள்கள் இடைக்காலத் தடை விதித்து யாழ்ப்பாணம் மாவட்டம் நீதிமன்றம் கட்டளையிட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத்... Read more »

யாழ்ப்பாணத்தில் பயன்பாடின்றி உள்ள காணிகளை அபகரிக்கும் கும்பல்!!

யாழ்ப்பாணத்தில் உரிமையாளர்கள் இல்லாமல்- பயன்பாடின்றி காணப்படும் காணிகளை ஊடக நிறுவனம் ஒன்றின் பெயரில் உறுதிகள் தயாரிக்கப்பட்டு , அபகரிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், அவை தொடர்பில் பிரதேச செயலர்கள் கூடிய கவனம் செலுத்துமாறும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் க. மகேசன்... Read more »