. September 2020 – Jaffna Journal

பாடசாலை மாணவர்களுக்கு சீருடை துணியை வழங்கத் திட்டம்!!

2021ஆம் ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாகச் சீருடை துணியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர்களை வழங்குவதற்கான திட்டம் இருந்தபோதிலும், சீருடை வழங்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். பாடசாலை... Read more »

யாழ்.மாநகரில் குற்றச்செயல்கள் நடந்தால் உடனே அறிவியுங்கள்!

வன்முறைக் கும்பல்களின் குற்றச்செயல்கள் இடம்பெற்றால் உடனடியாக தகவல் வழங்குமாறு யாழ்ப்பாணம் மாநகர வணிகர்களுக்கு காவற்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரில் நேற்றையதினம் திறந்திருந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்த பொறுப்பதிகாரி பிரதான காவற்துறை பரிசோதகர் ரொஷான் பெர்னாண்டோ, இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம்... Read more »

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் நோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் ஆளுகைக்கு ட்பட்ட தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையின் சிகிச்சை பிரிவில் கடமைபுரியும் எட்டு கதிரியக்க சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளுடன் அடாவடியில் ஈடுபட்டு வருதாக பாதிக்கப்பட்ட நோயாளர்கள் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சிறீ பவானந்தராஜாவை சந்தித்து முறையிட்டுள்ளனர்.... Read more »

2021இல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை முற்றுமுழுதாக மாற்றமடைகிறது!!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறையின் கட்டமைப்பை முற்றுமுழுதாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார். அதன்படி, 2021ஆம் ஆண்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையிலிருந்து இறுதி கட்டம் வரை, முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஐந்தாண்டு... Read more »

தனுரொக் மீது வாள்வெட்டு: நால்வர் கொலை முயற்சி சாட்டுதலில் விளக்கமறியலில்

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரையும் வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஓட்டுமடத்தைச் சேர்ந்த சுமன் என்று பொலிஸாரால் அடையாளம்... Read more »

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றி – மாவை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்றையதின் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும் என்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை சட்டபூர்வமாக அங்கீகரிக்க... Read more »

மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் – மக்களே அவதானம்

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள... Read more »

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் – பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு!

யாழ். பல்கலைகழகத்திற்கு முன்பாக பல்கலைகழக மாணவர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக நுழைவாயிலில் கூடியிருந்த மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்ளே செல்லுமாறு, பொலிஸார் அறிவுறுத்தயுள்ளனர். எனினும், மாணவர்கள் அதை மறுத்தபோது, பெருமளவு பொலிஸாரும், இராணுவத்தினரும்... Read more »

நாளைய உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் நீதிமன்றம் தடை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு நாளை (செப்.26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோரோனா சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த... Read more »

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள வேண்டுகோள்!

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக எமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தை தினமும் சென்று வழிபடுவதன் மூலம் தமிழரின் பாரம்பரியங்களும், அடையாளங்களும் காக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அவர்கள் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு... Read more »

உணவு தவிர்ப்புப் போராட்டத்து தடை உத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பம்!

திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றத் தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் நாளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு கோரி பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரால் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை... Read more »

வடக்கில் இன்று மழையுடனான காலநிலை!!

வடக்கு உள்பட நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதுதொடர்பில் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »

மிருசுவில் படுகொலையாளிக்கு மன்னிப்பு : மனுக்களை பரிசீலிப்பதிலிருந்து விலகிய நீதியரசர்!!

யாழ்ப்பாணம், மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்... Read more »

தொழிலைத் தேடி பட்டதாரிகள் வீதிக்கு இறங்காமல் அவர்களைத் தேடி தொழில் செல்லக் கூடிய கல்வி முறைமை – ஜனாதிபதி

பல்கலைக்கழக பிரவேசத்திற்கு தகுதிபெறும் அனைத்து மாணவர்களும் பட்டம் பெறும் வரை செல்வதற்கு அவசியமான நடவடிக்கையுடன் பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதிக்கு இறங்காத, தொழிற்சந்தை பட்டதாரிகளை தேடிச் செல்லக்கூடிய கல்வி முறைமையொன்றின் உடனடி அவசியம் பற்றி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார். பல்கலைக்கழகங்கள், பட்டங்களை வழங்கக்கூடிய... Read more »

தனியார் வகுப்புகளை நடத்தும் இறுதித் திகதி அறிவிப்பு!!

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தனியார் கல்வி வகுப்புகள் நடத்துவதற்கான இறுதி திகதி கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அனைத்து தனியார் கல்வி வகுப்புகளும் ஒக்டோபர் 6ஆம் திகதிக்குள் நிறுத்தப்பட... Read more »

யாழில் மீனவர்களின் படகுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை முன்னெடுப்பு!

யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதிவு செய்யப்படாத படகுகளை பதிவு செய்யும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைய, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நடவடிக்கை கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பருவகால மீனவர்களிடமிருந்தும் தென்னிலங்கை பிரதேசங்களில் இருந்தும்... Read more »

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து, தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தியாகி திலீபனின் நினைவுகூரலை தடைசெய்யக்கோரி பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில்,... Read more »

வெடுக்குநாரி ஆலயத்திற்குச் செல்வோரை பதிவுசெய்யும் பொலிஸார்!

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாரி மலை ஆதலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் விழா இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்களை பதிவுசெய்யும் நடவடிக்கையில் நெடுங்கேணி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை, குறித்த பதிவு நடவடிக்கை கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார்... Read more »

வடக்குக் கிழக்கு இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரி!

வடக்குக் கிழக்கில் உயர்தரத்தில் கல்விகற்று வேலை தேடும் இளைஞர், யுவதிகளுக்காக விமானப் போக்குவரத்துக் கல்லூரியினை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கல்லூரியின் நிறைவேற்று முகாமையாளர் ஆர்.பிரேமல் டி சில்வா தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக தொழில்வாய்ப்பு உத்திகளுக்கான விமானப் போக்குவரத்துக்... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கான தடையை நீடித்து நீதிமன்றம் கட்டளை

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் 14 நாள்கள் நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. பிரதிவாதிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்த நீதிமன்றம், வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தது. நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத் தூபியில் நினைவேந்தல்... Read more »