Ad Widget

2021இல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை முற்றுமுழுதாக மாற்றமடைகிறது!!

சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் செயல்முறையின் கட்டமைப்பை முற்றுமுழுதாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2021ஆம் ஆண்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பிக்கும் செயல்முறையிலிருந்து இறுதி கட்டம் வரை, முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

ஐந்தாண்டு காலம் நிறைவடைந்த பின்னர், 2015ஆம் ஆண்டில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையை அவர்களுக்கு மாற்றுவதற்கான செயல்முறை கண்டியில் தொடங்கியது. அதில் கலந்துகொண்ட பின் ஊடகங்களிடம் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கலில் புதிய முறைமை தொடர்பில் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்து செயல்முறைகளை மதிப்பீடு செய்து வருகின்றோம். இது தொடர்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஒரு அறிக்கை பெறப்படும்.

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவத்தைப் பெறுவதற்கான செயல்முறையை எளிமைப்படுத்த போக்குவரத்து அமைச்சர் கேட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனையின் போது விண்ணப்பதாரிக்கு உயர் குருதி அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது கொழுப்பு இருப்பது அடையாளம் காணப்பட்டால், அவர்கள் சிகிச்சைக்கு உள்படுத்தப்படுவார்கள்.

எவ்வாறாயினும், இதுபோன்ற நிலமைகள் தினசரி மாறக்கூடும் என்பதால், குறித்த நோய்கள் காணப்படுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான தகுதியை வழங்குவார்கள். அத்தோடு சம்பந்தப்பட்ட நபரை உரிய சிகிச்சை பெறுவதற்கும் மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் சுமித் அழகக்கோன் தெரிவித்துள்ளார்.

Related Posts