Ad Widget

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நேரடி ஒளிபரப்பு

பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் இன்று(08)வியா­ழக்­கி­ழமை முதல் தேசிய ரூப­வா­ஹி­னி­யூ­டாக நேரடி ஒளி­ப­ரப்புச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

பிற்­பகல் 1.00 மணி­முதல் இரவு 7.30 மணி­வ­ரை­யான செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை­யான அமர்­வுகளின்போது முதல் இரண்டு மணி­நே­ரத்­துக்கே இவ்­வாறு நேரடி ஒளி­ப­ரப்பு செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று புதன்­கி­ழமை சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடிய பாரா­ளு­மன்ற விவ­கார தெரி­வுக்­குழு கூட்­டத்­தி­லேயே மேற்­படி தீர்­மானம் எட்­டப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

பாரா­ளு­மன்ற அமர்­வுகள் பியோ ரீ.வி.யூடாக நேரடி ஒளி­ப­ரப்பு செய்­யப்­பட்டு வந்­த­போ­திலும், பின்னர் அது இடை­நி­றுத்­தப்­பட்­டது. இடை­நி­றுத்­தப்­பட்ட மேற்­படி நேரடி ஒளி­ப­ரப்­பினை மீண்­டும நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு முன்­னைய பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வு­களின் போது உறுப்­பி­னர்கள் கோரிக்கை விடுத்து வந்­தனர்.

இந்­நி­லை­யி­லேயே நேற்று சபா­நா­யகர் தலை­மையில் கூடிய பாரா­ளு­மன்ற விவ­கார தெரி­வுக்­கூட்­டத்தின் போது பாரா­ளு­மன்ற அமர்­வு­களின் முதல் இரண்டு மணி நேரத்துக்கான அமர்வுகளை தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினியூடாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts