Ad Widget

அரச திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்: சிவஞானசோதி

spe2அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற அனைத்து திட்டங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டமாகவே அமைந்துள்ளது என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச வர்தக கண்காட்சியை முன்னிட்டு யாழ். பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய நடுத்தர கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத் தொடர்பாக கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை அவர் தெரிவித்தார்.

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பல திட்டங்களை அரசாங்கம் முன்வைத்து வருகின்றது. இதற்கு சிறந்த ஒரு எடுத்துக்காட்டாக திவிநெகும என்கின்ற வாழ்வின் எழுச்சித் திட்டம் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீன்பிடி, விவசாயம், குடிசைக் கைத்தொழில், கால்நடை போன்ற துறைகளில் மக்களின் வாழ்கைத்தரம் மேம்படுத்தப்படும்.

அத்துடன் இத்திட்டத்தின் மூலம் குடிசை கைத்தொழில்களை விருத்தி செய்வதற்கு 24 மாவட்டங்களில் கண்காட்சி வழங்கப்பட்டு மக்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சிகள் மட்டுமல்லாது அவர்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை சந்தப்படுத்தக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை குடிசைக் கைத்தொழிலில் பற்றி 12 ஆயிரம் பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் 10 ஆயிரம் பேர் தற்போது பயிற்சி பெற்று வருகின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts