மணலாற்றில் புதிய சிங்கள கிராமம்

sinhala-kudiyeddam-mullaiththeevuமுல்லைத்தீவு மாவட்டத்தில், மணலாறு பிரதேசத்தில் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்பட்டு, புதிய சிங்களக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை, ரணவிரு பியச சம்பத்நுவர என்ற மாதிரிக் கிராமத்தை சிறிலங்காப் படையினருக்கு உருவாக்குவதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் 80 பேர்ச் காணித் துண்டுகளுக்கான உறுதிப்பத்திரங்கள் 52 சிறிலங்காப் படையினரின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் வழிகாட்டுதலில், வன்னிப் படைகளின் தலைமையகத்தினால், இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் சிறிலங்காப் படையினரின் குடும்பங்கள் குடியேற்றப்படவுள்ள இந்தக் கிராமத்தில், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்கவும் கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor