அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதியால் செல்ல அனுமதிக்கப்படுவர்

கடந்த ஆண்டு (2024) இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி இன்று (16) முதல் திறக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 20 ஆம் திகதி அலங்கார திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு செல்வதற்கான பாதை இராணுவத்தினரால் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்து ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள் செல்லும் வீதி மக்களின் காணியூடாக தற்காலிக பாதையூடாகவே செல்லும் நிலை ஏற்பட்டதுடன் நிரந்தர பாதை மூடப்பட்டே இருந்தது எனினும் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணியை சுற்றி வேலியை அமைத்ததால் மக்கள் ஆலயத்துக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஆலய நிர்வாகத்தினர் இராணுவத்தினரிடமும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனிடமும் கோரிக்கை வைத்தனர் இது குறித்து அண்மையில் இராணுவத்தினருடன் கலந்துரையாடியதையடுத்து நிரந்தர பாதை திறக்கப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்கள் அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் வீதியால் செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts