. மாவீரர் நாள் – Jaffna Journal

மாவீரர்தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

யாழ்.வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை பொலிஸார் அழைத்து மிரட்டி எச்சரித்துள்ளனர். வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளார்.... Read more »

கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா என அறிவிக்கும் பெயர்ப் பலகை!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்காவாக அறிவிக்கும் பெயர்ப் பலகை கரைச்சிப் பிரதேச சபையினரால் நாட்டப்பட்டுள்ளது. இந்த வருடம் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் துயிலும் இல்லத்தை தாவரவியல் பூங்காவாக பாதுகாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. அத்துடன் துயிலும்... Read more »

யாழ். பல்கலையில் மாவீரர்தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

உலகெங்கும் மாவீரர்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாவீரர் தினம் பல்கலைக்கழக சமூகத்தினரால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.பல்கலைக்கழகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மேடையில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில், உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உயிர்நீத்த... Read more »

மாவீரர் தினத்தை தேர்தல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம்: முன்னாள் போராளி காக்கா அண்ணன்

”அரசியல் கட்சிகளினதும் அரசியல்வாதிகளினதும் தேர்தல் தேவைக்காக மாவீரர் தினத்தை பயன்படுத்தக் கூடாது. அதன் புனிதத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்” என முன்னாள் போராளியான காக்கா அண்ணன் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில்... Read more »

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

வடக்கு கிழக்கில் உள்ள மாவீர் துயிலுமில்லங்கள் மீள் எழுச்சி பெறுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக கடந்த வருடம் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அனுமதி வழங்கிய நிலையில் வடக்கில் பல துயிலுமில்லங்களில் விளக்கேற்றப்பட்டன. அதேபோல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்ட நாள்... Read more »

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு ஏற்பாட்டுக்குழு

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு, ஏற்பாட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதென, மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். இது குறித்து, அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “மாவட்டத்தில் உள்ள ஆட்காட்டிவெளி, பெரிய பண்டிவிரிச்சான் ஆகிய இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களில்... Read more »

2ஆம் லெப். மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நாள்!

விடுதலைப் போரில் விடுதலை புலிகள் சாா்பில் உயிர்நீத்த முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் மன்னார் ஆண்டாங்குளத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. ஆண்டாங்குளத்தில் உள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மாவட்ட இணைஞர் அணி... Read more »

மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்

யாழ். மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் வகையிலான தீர்மானமொன்று, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர்களான வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று... Read more »

யாழ். பல்கலையில் தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுநாள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி லெப்.கேணல்.திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் நேற்று(15) ஆரம்பித்து எதிர்வரும் 26ஆம் நாள் வரை பல்கலைக்கழக மாணவர்களால் நினைவுகூர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் நாளிலிருந்து 26ஆம் நாள் வரையிலான 12 நாட்களும் நீராகாரம் எதுவுமின்றி தன்னை... Read more »

கிளிநொச்சியில் துயிலுமில்லம் அமைக்க நீதிமன்றம் அனுமதி!

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது. குறித்த துயிலுமில்லமானது வடமாகாணசபைக்குட்பட்டதும் பிரதேச சபையின் அனுமதியுடனும் அமைக்கப்படவேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் துயிலுமில்லம் அமைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கிளிநொச்சி... Read more »

இராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம் புத்துணர்வு பெற்றது

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் குடும்பிமலை கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட தரவை மாவீரர் துயிலும் இல்லம் நேற்று (திங்கட்கிழமை) துப்பரவு செய்யப்பட்டது. ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பிமலையிலுள்ள சுமார் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இணைந்து இந்த சிரமதானப்... Read more »

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தவர்களுக்கு பிணை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு... Read more »

மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை அமைக்க முற்பட்ட முன்னாள் போராளிடம் விசாரணை

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகள் கிளிநொச்சி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பபட்டுள்ளனர். மாவீரர்களுக்கான பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே... Read more »

மாவீரா் துயிலுமில்லத்தில நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலிஸாரினால் இடைநிறுத்தம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி நேற்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் பிற்பகல்... Read more »

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உருப்பெறுகிறது பொதுக்கல்லறை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை, மாவீரர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யுத்த நிறைவிற்கு பின்னர் சிதைக்கப்பட்ட குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்... Read more »

மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு தீர்மானம்

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும்... Read more »

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் எதனையும் செய்ய முடியாது

மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் எதனையும் செய்ய முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் ஏதேனும் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் அது குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இராணுவத்தைச் சாராது எனவும் அது சட்டம்... Read more »

ஜெனீவாக் கூட்டத்தொடரை இலக்குவைத்தே மாவீரர் தினம் அனுட்டிக்க அரசு அனுமதி

2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை இலக்குவைத்தே தமிழர் தாயகப் பிரதேசமெங்கும் மாவீரர் தினத்தை அனுட்டிக்க சிறீலங்கா அரசாங்கம் அனுமதியளித்தாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், சமஷ்டி முறையிலான அரசியல் தீர்விலிருந்து தமிழ்... Read more »

தலைவர் பிரபாகரனை நினைவுகூரலாம்! யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளையும் நினைவுகூர்வது தார்மீகக் கடமை

சிறீலங்காவில் இரண்டுமுறை கிளர்ச்சியை ஏற்படுத்திய மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தலைவர் றோகண விஜயவீரவை நினைவுகூர முடியுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிர் நீத்த தினத்தையும் அனுட்டிக்கமுடியும் எனவும் அதில் எந்தவிதத் தவறுமில்லையெனவும் மகிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில்... Read more »

மாவீரர் தினம் அனுஷ்டிப்புக்கான அனுமதி வரவேற்கத்தக்கது

மாவீரர் தினம் அனுஷ்டிப்பு அனுமதிக்கப்பட்டிருப்பது, உளவியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வரவேற்கத்தக்கது என யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்தார். விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக இருந்து உயிரிழந்தவர்களை, அவர்களுடைய குடும்ப உறவினர்கள் மாவீரர் தினத்தில் பொது... Read more »