முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை!

அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. கடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினர் மூடியதாலேயே இருதரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.... Read more »

65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்கீழ் ஒவ்வொன்றும் 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான 28 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த வீடுகளை இந்திய மற்றும் இலங்கை கட்டுமான நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளவிருப்பதாக... Read more »

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும், திருகோணமலையில் 3 ஏக்கர் காணியும் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான யோசனையை மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்... Read more »

இராணுவத்திற்கு சுகபோகம் – நாங்களோ நடுத்தெருவில்: கேப்பாப்புலவு மக்கள் விசனம்!

இராணுவம் எமது காணிகள் மூலம் வருமானத்தினை பெற்று சுகபோக வாழ்க்கை வாழ்ந்துவரும் நிலையில், நாங்கள் நடுத்தெருவில் நிர்க்கதியாகியுள்ளோம் என முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி... Read more »

ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயம் விடுவிப்பு

வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து ஜனாதிபதியால் விடுவிக்குமாறு உத்தரவிட்ட மயிலிட்டி- கலைமகள் வித்தியாலயமும் அதனைச் சூழவுள்ள 3 ஏக்கர் காணியும் அத்துடன் குரும்பசிட்டியில் கிராம அபிவிருத்திச் சங்கம், தெல்லிப்பழை பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அதனை சூழவுள்ள... Read more »

வடக்கில் வீடுகளை அமைக்கும் அதிகாரம் பிரதமருக்கே உள்ளது – சுவாமிநாதன்

வடக்கில் சுமார் 30 ஆயிரம் மீட்டர் வரை கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளதாக மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய கலாசார அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய வாய் மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.... Read more »

மீள்குடியேற்றம் ஸ்தம்பித்துள்ளமை தொடர்பில் மாவை கவலை!

மீள்குடியேற்றத்திற்கு போதுமான நிதி இல்லாமையினால் யாழ்.மாவட்டத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ள நிலையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக வரவு செலவு திட்டத்தில் விசேட நிதி ஒதுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக நடாளுமன்ற நிதிக்குழு நேற்று (திங்கட்கிழமை)... Read more »

பிரதேச சபைக்கு சொந்தமான காணிகளை விடுவிக்கவும்: சுகிர்தன்

வலி.வடக்குப் பிரதேச சபைக்கு சொந்தமான 7 கட்டடங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அச்சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்குப் பகுதியில் பல பகுதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் மேலும்... Read more »

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு!

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி நேற்றையதினம் (வெள்ளிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு வலிகாமம் பகுதியில் இருந்து இந்த மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், குறித்த காணி இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. தமது காணிகளை... Read more »

வீட்டுத்திட்டங்களை கொண்டுவரும்போது பல்வேறு தடைகள் வருகின்றது: சுவாமிநாதன்

வடக்கு – கிழக்கில் வீட்டுத்திட்டங்களை கொண்டுவரும்போது பல்வேறு எதிர்ப்புக்களும் தடைகளும் வருவதாக மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சரான டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேநேரம், வடக்கு – கிழக்கில் வீட்டுத்திட்டம்... Read more »

தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிப்பு!

தெல்லிப்பளையில் 4.7 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி குறித்த காணி விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. 51வது படைப்பிரிவினால் பயன்படுத்தப்பட்ட காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது... Read more »

வடக்கு, கிழக்கில் மேலும் 400 ஏக்கர் காணி விரைவில் விடுவிப்பு!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் மேலும் 400 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இதுதொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள அரச மற்றும்... Read more »

நிலமீட்பு போராட்டத்தில் யாரையும் நம்பப்போவதில்லை: கேப்பாப்பிலவு மக்கள்!

தமது சொந்த நிலத்தினை மீட்பதற்கு இனிமேல் யாரையும் நம்பப்போவதில்லை என கேப்பாப்பிலவு மக்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு மக்களின் நிலமீட்புப் போராட்டம் 533 நாட்களைக் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக... Read more »

தமிழரின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி முறியடிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக் கேணிக்கு அப்பால் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிவந்தா முறிப்புக்குளம் பகுதி மற்றும் அதனை அண்மித்த வயல் நிலங்களையே பெரும்பான்மையினர் கையகப்படுத்த முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக கொக்குத்தொடுவாய் விவசாய அமைப்பினர்,... Read more »

வடக்கு, கிழக்கில் 902 ஏக்கர் காணிகளை விடுக்க நடவடிக்கை!

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மேலும் 902 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் 312 ஏக்கர் அரச நிலமும், 112... Read more »

அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கு வீடு பறிபோனதா? : சத்தியலிங்கம்

வவுனியா மாவட்டச் செயலக அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் தமிழர்களுக்கான வீடுகள் பறிபோனதா என வட.மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (திங்கட்கிழமை) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணைத்தலைவருமான சிவசக்தி ஆனந்தன் தலைமையில் பிரதேச... Read more »

மீள்குடியமர்ந்தோரிற்கான பதிவு நடவடிக்கைகளின் காலஎல்லை நீடிப்பு!

வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தமக்கான வீட்டுத்திட்டம் போன்ற உதவித் திட்டங்களைப் பெறுவதற்கு பதிவு செய்யப்பட வேண்டிய காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபையின் தலைவர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள் உள்பட வேறுவேறு இடங்களில் தங்கியிருப்போர் மற்றும் மீள்குடியமர்ந்தோர்... Read more »

வலி. வடக்கில் மேலும் சில காணிகள் இராணுவத்தால் விடுவிப்பு!

வலி. வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்த பொது மக்களது காணிகள் சில நேற்று (திங்கட்கிழமை) விடுவிக்கப்பட்டன. வலி. வடக்கு பிரதேச செயலர் பிரிவில் பளைவீமன்காமம் வடக்கில் உள்ள ஜே.236 கிராம சேவகர் பிரிவிலுள்ள 33 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டன. கடந்த 27... Read more »

கேப்பாபுலவுக் காணி உரிமையாளர்களுடன் விசேட கூட்டம்!

கேப்பாபுலவில் காணி விடுவிப்பிற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றும் படையினர் வசம் உள்ள காணி உரிமையாளர்களின் விருப்பம் அறியும் கூட்டம் ஒன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலக மண்டபத்தில் உதவி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் குறித்த... Read more »

அச்சுவேலியில் படையினரால் காணி விடுவிப்பு

அச்சுவேலி பகுதியில் மிக நீண்ட காலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பொது மக்களது காணியில் ஒரு பகுதி காணி நேற்று விடுவிக்கப்பட்டது. அச்சுவேலி இராச வீதியில் இராணுவத்தினால் சுவீகரிக்கப்பட்டிருந்த காணியில் 1.5 ஏக்கர் காணியே நேற்றைய தினம் கோப்பாய் பிரதேச செயலரிடம் இராணுவத்தினரால் உத்தியோகபூர்வமாக... Read more »