விடுதியில் பணம், நகை திருட்டு – உரிமையாளர் கைது!

யாழ்.நகரப்பகுதியில் உள்ள விடுதியில் 3 இலட்சம் ரூபா பணமும், 12 பவுண் நகையும் திருடப்பட்டுப்போனதையடுத்து விடுதி உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் விக்டோறியா வீதியில் அமைந்துள்ள வெளிமாவட்டத்தவர்களுக்கான விடுதியிலேயே நேற்று (வியாழக்கிழமை) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெளிமாவட்டத்தில் இருந்து சகோதர மொழி பேசும் குடும்பத்தினர் சுற்றுலாவின்... Read more »

மிகச்சிறந்த தலைவரை இந்தியா இழந்துள்ளது – த.தே.கூ. இரங்கல்

இந்தியா தனது மிகச்சிறந்த அரசியல் தலைவரை இழந்துள்ளது என முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் மறைவு குறித்த இரங்கல் செய்தியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த... Read more »

நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கினால் ஜனவரி மாதம் தேர்தல் நடத்தப்படும்: தேர்தல் ஆணைக்குழு

எல்லை நிர்ணய அறிக்கைக்கு இம்மாதத்திற்குள் நாடாளுமன்ற ஒப்புதல் வழங்கப்படின், மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என... Read more »

அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய கிளை யாழில்!- சுகாதார அமைச்சர் திறந்துவைப்பு

அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய விற்பனை கிளை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் புதிய விற்பனை கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்திற்கான நிர்மாணப்... Read more »

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் கொழும்பில் தற்கொலை!!

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயாரான பிரியதர்சினி புஷ்பராஜா (வயது -46) என்பவரே... Read more »

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

இராணுவ கனரக வாகனம் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) மாலை 4.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து இரணமடு நோக்கி மோட்டார் சைக்கிளில்... Read more »

கூட்டுறவுக்கு 3,000 அங்கத்தவர்கள் இணைப்பு!!

வடக்கு மாகாணத்தில் கூட்டுறவை விரிவாக்கும் வேலைத்திட்டம் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கூட்டுறவு அமைப்புகள் புதிதாக இணைத்துள்ளன. இந்த ஆண்டுக்கான கூட்டுறவின் நாற்பது வேலைத்திட்டங்களில் புதிதாக அங்கத்தவர்களைச் சங்கங்களில் இணைக்கும் பணிகள் பெரிதும் வெற்றியளித்துள்ளன என்று வடக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் பொ.வாகீசன்... Read more »

குடாநாட்டில் கடந்த நாட்களில் மட்டும் 50 பேர் கைது!

யாழ். குடாநாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களாக யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு மற்றும் போதைப்பொருட்கள் பாவனை, வீடுகள் மீதான தாக்குதல்கள் என பல குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், யாழில்... Read more »

நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் இன்று

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று இடம்பெற்றது. அதன் பின்னர் விசேட பூஜை வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், இன்று காலை... Read more »

மன்னார் மடு அன்னையின் ஆவணித் திருவிழாவில் பிரதமர் பங்கேற்பு!

மன்னார் மடுத் திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று (புதன்கிழமை) கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. இன, மத பேதங்களுக்கு அப்பால் இலட்சக் கணக்கான பக்தர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற திருவிழாவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துக்... Read more »

குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதம்!!

யாழ். குடாநாட்டில் வீசிய மினி சூறாவளி காரணமாக பல வீடுகள் சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை வழக்கத்திற்கு மாறாக திடீரென பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ததில் காரைநகரில் எட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. மாலை 6 மணியளவில் வழக்கத்திற்கு மாறாக காற்றின் வேகம்... Read more »

தாயும் மகனும் கிணறிலிருந்து சடலமாக மீட்பு!!

வவுனியா கூமாங்குளம் கிராம அலுவலரின் அலுவலகத்துக்கு அருகே இன்று காலை 10 மணியளவில் கிணறு ஒன்றிலிருந்து தாயும் மகனும் சடலமாக மீட்கப்பட்டனர். “பெண்ணையும் அவரது 5 வயதுடைய மகனையும் காணவில்லை என அயலவர்கள் தேடிய சமயத்தில் அவர்கள் கிணற்றில் சடலமாக காணப்பட்டனர். 33 வயதுடைய... Read more »

‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ இராணுவத்தின் அச்சுறுத்தலினால் திலீபனின் நினைவிட புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தம்!!

இராணுவத்தினரின் அச்சுறுத்தலை தொடர்ந்து யாழ். நல்லூரில் முன்னெடுக்கப்பட்டு வந்த தியாகி திலீபனின் நினைவிடத்தை புனரமைக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நினைவிடத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் அங்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சிவில் உடையில் வந்த இராணுவத்தினர், ‘வெளியில் சந்தோஷமாக வாழ ஆசையில்லையா?’ என... Read more »

த.தே.ம.முன்னணியினால் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு!

ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி... Read more »

மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று அதிகரிக்கும்!!

நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலையும் காற்றின் வேகமும் இன்று குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சாத்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டமாக காணப்படக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை... Read more »

நீதிமன்ற உத்தியோகத்தரிடம் சங்கிலி அறுக்க முயற்சி!

யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் (சிறுவர் நீதிமன்றம்) பணியாற்றும் பெண் உத்தியோகத்தரிடம் சங்கிலி பறிக்கும் முயற்சி அவரின் சாதூரியத்தால் தடுக்கப்பட்டது. சங்கிலி பறிப்பைத் தடுத்த அந்த பெண் உத்தியோகத்தர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் பழைய பூங்கா... Read more »

பாதாள உலகக் குழுக்களை போன்று ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல! – சட்டம் ஒழுங்கு அமைச்சர்

தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள குழுக்களை போன்று வடக்கில் இயங்குகின்ற ஆவா குழுவினர் பயங்கரமானவர்கள் அல்ல என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு... Read more »

யாழ் நீர்வேலி வாள்வெட்டு: இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்!

நீர்வேலி பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வைத்து கடந்த மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது.... Read more »

தமிழ் தலைவர்களின் அகந்தையே அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்: முதலமைச்சர்

தமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திக்க காரணம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு... Read more »

யாழில் சீன ஆய்வாளர்கள் அகழ்வுப் பணியில்!

யாழ்.அல்லைப்பிட்டி கடற்பகுதியில் சீன நாட்டுக் கப்பல் ஒன்று 500 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியதாக தெரிவித்து, சீன நாட்டுத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தொல்பொருள் திணைக்களத்துடன், இணைந்து இந்த அகழ்வாராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பின்... Read more »