முல்லைத்தீவில் மாணவியை துஷ்பிரயோகம் செய்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விளக்கமறியல்!!

உடையார் கட்டில் பாடசாலை மாணவியை கடத்தி சென்று விருப்பத்திற்கு மாறாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த கிளிநொச்சி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு உடையார்... Read more »

முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் கோரிக்கையை நிராகரித்தது கூட்டமைப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி... Read more »

போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் குடாக் கடலில் கொட்டப்படுவதை உறுதி செய்தார் பணிப்பாளர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படும் விவகாரம் யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் வெளிச்சத்துக்கு வந்தது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆராய்ந்தார். ஆபத்தான கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக குடாக்கடலுக்குள் கொட்டப்படுவதை... Read more »

வடக்கில் 88 சதவீதமான காணிகளை இராணுவம் விடுவித்துள்ளது – யாழில் ஜனாதிபதி

“வடக்கு மாகாணத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளில் 88 சதவீதமான காணிகள் தற்போது அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 12 சதவீதமும் வெகுவிரைவில் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டுமென்ற தெளிவான கொள்கையை அரசு கொண்டிருக்கின்றது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் மயிலிட்டி... Read more »

யாழில் ஆவா குழுவிற்கு சவால் விடும் புதிய குழு?

கொக்குவில், இணுவில் மற்றும் தாவடி ஆகிய பகுதிகளிலுள்ள மூன்று வீடுகள், தேனீர் கடை, வாகனத்தரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறி நுழைந்த 9 பேர் கொண்ட கும்பலொன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. ஆவா கும்பலுக்கு அச்சுறுத்தும் வகையில் துண்டறிக்கையை வழங்கிய கும்பல், தமது அட்டூழியங்களை வீடியோ... Read more »

இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருகின்றது: முதலமைச்சர்

வடக்கில் உள்ள இராணுவ சின்னங்களை பார்க்கும் போது தமிழ் மக்களுக்கு ஆத்திரம் வருவதன் காரணமாகவே அவற்றை அகற்றுமாறு கோரிக்கை விடுத்தாக முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை... Read more »

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை – முதலமைச்சர்

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என நினைத்தால் தீர்க்கலாம். ஆனால் அந்த எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரன் கூறியுள்ளார். அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்கு முன்னர் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண... Read more »

ஊரெழுவில் வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு கொள்ளை!!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு அம்மன் கோவிலடியில் வீடு புகுந்த கொள்ளைக் கும்பல், வயோதிபத் தம்பதியரை கடுமையாகத் தாக்கிவிட்டு நகை மற்றும் பெறுமதியான பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. கொள்ளைக் கும்பலின் தாக்குதலால் காயங்களுக்குள்ளான வயோதிபத் தம்பதியர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம்... Read more »

அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய கிளை யாழில்!- சுகாதார அமைச்சர் திறந்துவைப்பு

அரச மருந்தகக் கூட்டுதாபனத்தின் புதிய விற்பனை கிளை யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் புதிய விற்பனை கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புனர்வாழ்வு நிலையத்துக்கான புதிய கட்டடத்திற்கான நிர்மாணப்... Read more »

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

இராணுவ கனரக வாகனம் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று புதன்கிழமை (15) மாலை 4.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது. கிளிநொச்சியிலிருந்து இரணமடு நோக்கி மோட்டார் சைக்கிளில்... Read more »

தமிழ் தலைவர்களின் அகந்தையே அரசியல் பின்னடைவுகளுக்கு காரணம்: முதலமைச்சர்

தமிழ் தலைவர்களின் தூரநோக்கற்ற சிந்தனைகளும், இறுமாப்புத் தன்மையும், அகந்தையுமே தொடர்ச்சியாக அரசியல் பின்னடைவுகளை சந்திக்க காரணம் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு... Read more »

முல்லைத்தீவில் மீன் வாடிகள் எரிப்பு: படையினர் குவிப்பு

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் உள்ளூர் மீனவர்களுக்குச் சொந்தமான 8 வாடிகள் உட்பட மீன்பிடி உபகரணங்கள் யாவும் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பெருமளவு பொலிஸாரும் இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதால் பிரதேசத்தில் பதற்றம் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தென்னிலங்கை மீனவர்கள் சிலர் முல்லைத்தீவில் சட்டவிரோதமான... Read more »

எம்மை அடக்கி ஆளும் பெரும்பான்மை சமூகமும் போராட வேண்டிய நிலை ஏற்படும்: முதலமைச்சர்

எம்மை அடக்கி ஆள வேண்டும் என எண்ணுகின்ற பெரும்பான்மைச் சமூகத்தினரும் மிக விரைவில் எம்முடன் சேர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்படும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பால் பதனிடும் தொழிற்சாலையின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு... Read more »

வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபடத்தடை: ஆனந்தன் எம். பி எதிர்ப்பு!

தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பொதுமக்கள் சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபட தொல்பொருள் திணைக்களத்தால் விதிக்கப்பட்டுள்ள தடைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில்... Read more »

எரிபொருளின் விலை மீண்டும் அதிகரிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நேற்று தொடக்கம் இரண்டு வகை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் நிதி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்தார். அதன்படி, ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றரின்... Read more »

முகமாலையில் வெடிப்புச் சம்பவம்! : மாணவனின் கை துண்டிப்பு!!!

முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பகுதியில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் மாணவன் ஒருவன் கையை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பகுதிக்குள் வேலி அமைப்பதற்காக கட்டை தறிக்கச் சென்ற எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக... Read more »

யாழ் குருநகர் கொலை வழக்கில் இரண்டு இராணுவத்தினருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று, கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த தீர்ப்பு... Read more »

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம்!!! : பிரதமர்

எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.... Read more »

குள்ள மனிதர்களின் கொட்டத்தை அடக்க இரவு நேர ரோந்து!

யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய உதவி... Read more »

றெஜினா கொலை வழக்­கில் சாட்­சி­யங்­கள் பதிவு!!

யாழ்ப்பாணம் சுழி­பு­ரம், காட்­டுப்­பு­லத்­தில் படு­கொலை செய்­யப்­பட்ட சிறுமி றெஜி­னா­வின் வழக்குநேற்று மல்­லா­கம் நீதி­மன்­றில் விசா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது. சிறு­மி­யின் உற­வி­ன­ரான பெண் ஒரு­வ­ரும், றெஜி­னா­வு­டன் சம்­பவ தினத்­தன்று பாட­சா­லை­யில் இருந்து சேர்ந்து வந்த நண்­பி­யி­ட­மும் சாட்­சி­யங்­கள் பெறப்­பட்­டன. வழக்கு விசா­ர­ணை­கள் எதிர்­வ­ரும் 21ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.... Read more »