- Friday
- September 4th, 2026
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 254 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் (மே 6 மற்றும் 7) மீட்கப்பட்ட ஐந்து மனித...
2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு விதித்த மரண தண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று (06) உறுதி செய்தது. தலைமை நீதிபதி...
செம்மணி சித்துப் பாத்தி இந்துமயானத்தில் அமைந்துள்ள மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாவது நாள் அகழ்வு பணிகளானது நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இது குறித்து சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா கருத்து தெரிவிக்கையில், இன்றைய அகழ்வப் பணியின் போது ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடு இலக்கங்களான 217 மற்றும் 220 ஆகிய இலக்கங்களை கொண்ட எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து...
வடமராட்சிப் கிழக்கு நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள நாச்சிமார் ஆலயத்தில் தங்கியிருந்த இராணுவத்தின் திடீரென அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நாச்சிமார் ஆலயப் பகுதியைக் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த நிலையில் நேற்றையதினம் அங்கிருந்து வெளியெறியுள்ளனர். இராணுவத்தினர் வெளியேறியதைத் தொடர்ந்து ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடவும் ஆரம்பித்துள்ளனர். ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவம் அங்கிருந்த அனைத்து கட்டிடங்களையும் இடித்து...
நெடுந்தீவு மக்கள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிறுத்திய 'கவனயீர்ப்பு போராட்டத்துக்கு’ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெடுந்தீவு கவனயீர்ப்பு போராட்ட ஏற்பாட்டுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது எமது அழகிய தீவு. நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளில் சிக்கி, நாளாந்தம் மக்கள் அவதிப்படும் சூழல் உருவாகியுள்ளது என்பது எமது மக்கள்...
வடக்கு பாதை புனரமைப்புமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வியாழக்கிழமை (09) முதல் வடக்கு புகையிரத சேவையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் கடுகதி புகையிரதம் மற்றும் யாழ் இரவு தபால் புகையிரதம் எதிர்வரும் வியாழக்கிழமை முதலும், யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) முதலும் தினசரி சேவையில் ஈடுபடுத்தப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத திணைக்களம்...
மின்சார கட்டண உயர்வு தொடர்பான புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL), 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சார கட்டண உயர்வுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த புதிய திருத்தத்தின் கீழ், மின்சார பயன்பாட்டு அலகுகளின் அடிப்படையில் கட்டண உயர்வு 10 வீதமாக அதிகரிக்கப்பட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. அதன்படி,...
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, கேவில்பகுதியில் யானைகள் திட்டமிட்டு கொண்டுவரப்பட்டு விடப்பட்டதாக அப்பகுதியில் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் கவலை தெரிவித்துள்ளார். உரிய முறையில் அறிவித்தும் யானைகள் ஏற்படுத்திய சேதத்தை அதிகாரிகள் இன்னும் பார்வையிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு சில தினங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - கேவில்...
தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். அரசாங்க ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சவால்களுக்கு மத்தியில்...
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அதேவேளை தாக்குதலுக்கு இலக்கான வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த , பேருந்து , இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இரண்டு கார்கள் , பட்டா...
கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான அ.அருள்பாயஸ் என்ற சிறுவனின் கொலைக்கு நீதி வேண்டியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்று, ஒரு மாத காலம் கடந்துள்ள நிலையிலும், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, பொலிஸார் மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது....
09ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை திருத்தியமைக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை ரூ. 22 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது, அதன் புதிய விலை ரூ. 303 ஆகும். சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையை ரூ. 24 ஆல் அதிகரிக்க...
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை உறுதிப்படுத்தினார். நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானவர்களில் 7 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் இருவர் உயிரிழந்தனர், மேலும் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர்...
வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற் தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் சக...
யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களில் சுமார் ஏழரை இலட்சம் லீட்டர் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் பெட்ரோலை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்து பெட்ரோலை பெற்று சென்றனர். எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்ட வரிசைகளில் காத்திருந்து பெட்ரோல் பெற்று கொள்ளும் இந்நிலைமை...
தமிழ் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக சிதறிக்கிடக்கும் தமிழ் கட்சிகளின் பலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலமான முறையில் முன்னிறுத்துவதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலுக்கு முன்பாக நிறுத்தி...
யுத்தக் களத்தில் காயப்பட்டு, ஒரு கால் முழுவதும் பாதிக்கப்பட்டு, இன்று வாழ்வாதாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும் முன்னாள் பெண் போராளி ஒருவர் , கந்துவட்டி கொடுமையால் தனது சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் மன்னாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மன்னார், மூர் வீதி பகுதியில் வசிக்கும் இப் பெண்மணி, தனது குடும்ப வறுமையைப் போக்கவும், சிறு தொழில்...
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார்....
அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் சடலத்துடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த சிறுவனின் இறுதிக் கிரியைகள் நேற்றையதினம் (12) வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து...
Loading posts...
All posts loaded
No more posts
