- Sunday
- August 2nd, 2026
‘எல் நினோ’ (El Niño) காலநிலை நிகழ்வால் ஏற்படக்கூடிய கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள இலங்கை தயாராக இருக்க வேண்டுமென பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் புத்தி மரம்பே எச்சரித்துள்ளார். பசிபிக் பெருங்கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள எல் நினோ நிலைமை இன்னும் பலவீனமான கட்டத்தில் இருந்தாலும், எதிர்காலத்தில் அது மேலும் வலுப்பெறக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்....
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 41ஆவது நாளான நேற்று (23) , 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில்...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் இன்றைய தினம் செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட்டனர். செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது. அதனை அடுத்து இன்றைய தினம் புதைகுழியில் முன்னெடுக்கப்படும் அகழ்வு பணிகளை...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 39ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று (21) செவ்வாய்க்கிழமை நடைபெற்றபோது அருகருகே இரு சிறுவர்களின் என்புக்கூடு உட்பட 13 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அத்துடன் சில என்புக்கூடுகள் மண்டையோடுகள் இல்லாத நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளன. சில என்புக்கூடுகள் குவியலாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுள் மண்டையோடுகளும் காணப்படுவதனால், ஆய்வுகளின்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (20) நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 38 ஆவது நாளான நேற்று புதிதாக சிறுவர்கள் இருவருடைய என்புக்கூடுகள் உட்பட 08 என்பு கூடுகள் அடையாளம்...
செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் 3ஆம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று (19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன. நேற்றைய அகழ்வில் மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டன. இதன்மூலம், செம்மணி மனித புதைகுழி அகழ்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை 446 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு...
செம்மணி மனித புதைகுழியில் 420 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இலங்கையில் மிக பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி மாறியுள்ள நிலையில் 420 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 34 வது நாளான நேற்று (16) 6 மனித எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நேற்று (15) ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 32 நாட்கள் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், கடந்த 23 ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்க்கான சிகிச்சை பெறுபவர்களின் எண்னிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், இந்த மாதத்தின் கடந்த 07 நாட்களில் மாத்திரம் 65 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே...
வடமராட்சி கிழக்கு மருதங்கணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுபிகரிப்பு நடவடிக்கைகள் நாளை (09) இடம்பெறவுள்ளதாகவும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு அனைவரும் ஒன்று திரளுமாறும், காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார் . அவர் மேலும் தெரிவித்ததாவது, மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்பட...
மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார். நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது இவ்வாறு...
வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபனை பதவி நீக்கம் செய்து வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ஜூலை 15 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதல்வர் காண்டீபன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மனுதாரர் (முதல்வர்)...
2026 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த தீவுகளுக்காக சுற்றுலாத் தலங்களின் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச சுற்றுலா ஊடகமான 'பிக் 7 டிராவல்' (Big 7 Travel) நடத்திய அண்மைக்கால மதிப்பீட்டின்படி, இயற்கை அழகு, பல்லுயிர் பெருக்கம், கலாசார பாரம்பரியம், சுற்றுலா அனுபவங்கள் மற்றும் உலகளாவிய பிரபலம் உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இந்த...
அம்பாறை மாவட்டம், கஞ்சிக்குடிச்சாறு காட்டுப் பகுதியில் விடுதலைப் புலிகளால் கடந்த காலத்தில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் அதி நவீன ஸ்னைப்பர் (Sniper) ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் (STF) கடந்த திங்கட்கிழமை(29) மாலை மீட்கப்பட்டிருந்தது. திருக்கோவில், சாகாமம் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைவாக, கஞ்சிக்குடிச்சாறு பக்மிட்டிய காட்டுப் பகுதியில்...
இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள “Tell the IGP” திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இச்சேவையின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் சிங்களம், தமிழ்...
உயிர்க்கொல்லி டெங்கு நோயின் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை பதிவான மரணங்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளபடி, இதுவரை நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 49,000 ஆக பதிவாகியுள்ளது. தற்போது நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதாக சுகாதாரத் தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்....
யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றுமுன்தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகள் எரிந்ததால் ஏற்பட்ட நச்சுப் புகை மற்றும் கடுமையான துர்நாற்றம் காரணமாக, நாவாந்துறை...
வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர் ஆகியோர் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் மீதான விசாரணை ஒன்றின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள்...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக, இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சவைப் பன்னாட்டு விசாரணைக்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்த வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய அமர்வில் உரையாற்றிய அவர், இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக அடையாளம் காணப்பட்டுள்ள செம்மணியில், இதுவரை 412 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, 390...
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த ஆண்டு மே 15ஆம் திகதி ஆரம்பமாகி 09 நாட்கள் நடைபெற்ற முதலாம் கட்ட அகழ்வு பணிகளின் போது, 19 மனித என்புகூடுகள் மீட்கப்பட்டன....
Loading posts...
All posts loaded
No more posts
