கிளிநொச்சியில் பதற்றம்!- குடியிருப்பு கொட்டகைகளை அகற்ற முயற்சி

கிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. சாந்தப்புரம் பகுதியில்... Read more »

கிளிநொச்சி விபத்தில் ஐவர் படுகாயம்!

கிளிநொச்சி- கரடிப்போக்கு பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார். இதன்போது விபத்தில் படுகாயமடைந்த ஐவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்ற நிலையில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முறுகண்டியில்... Read more »

நெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் விபத்தில் பரிதாபச் சாவு!

நெடுந்தீவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பெண்கள் தொடருந்து விபத்தில் உயிரழந்தனர். வவுனியா ஓமந்தை பன்றிகெய்தகுளம் பகுதியில் நேற்று காலை 10.30 மணியளவில் தொடருந்துடன் கார் மோதுண்டமையால் இந்தப் பெரும் துயரம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடருந்துடன் சிறிய கார் ஒன்று,... Read more »

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடு கிளிநொச்சியில் வழங்கிவைப்பு!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நட்டஈடுகள் நேற்று (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுசபை மண்டபத்தில் இடம்பெற்றது. நாட்டில் நிலவிய யுத்தத்தினால் சேதமாக்கட்டப்பட்ட ஆலயங்கள் மற்றும் உறவுகளை இழந்தோர், அங்கங்களை இழந்தோர் மற்றும் சொத்துக்களை இழந்தோருக்கான நட்டஈட்டுக்கான காசோலைகளே நேற்று ஒரு தொகுதியினருக்கு வழங்கிவைக்கப்பட்டன.... Read more »

முல்லைத்தீவில் போசாக்கு குறைபாடுகளுடன் அதிக சிறுவர்கள்: கவனஞ்செலுத்துமாறு கோரிக்கை

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் அதிகளவான சிறுவர்கள் போசாக்கு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியாகக் காணப்படுகின்ற துணுக்காய் பிரதேசத்தின் மல்லாவி சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியிலேயே கூடுதலான... Read more »

அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த இராணுவச் சிப்பாய் நையப்புடைப்பு!

பூநகரி, கரியாலை நாகபடுவான் கணேஸ்குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவுசெய்த இராணுவச் சிப்பாய் ஒருவர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். இச்சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இடம்பெற்றதோடு குறித்த சிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பில் தெரியவருவதாவது, குறித்த குடியிருப்புப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றைய தினம்... Read more »

முல்லைத்தீவு வாள்வெட்டு: சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காயமடைந்த நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் மிகவும் ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் இரவு குறித்த பகுதியிலுள்ள... Read more »

சினிமா பாணியில் பொதுச் சந்தையை 45 நிமிடங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ரவுடிக் கும்பல்!!

கிளிநொச்சி பொதுச் சந்தையினை நேற்றையதினம் (12-09-2018) மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ரவுடிக்கும்பல் ஒன்று. சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல் சந்தைக்கு வந்தவர் போனவர் பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம்... Read more »

வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம்!!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – கைவேலிப்பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் நால்வர் காயம் அடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த செவ்வாய்கிழமை இரவு குறித்த பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட வாள்வெட்டு குழு ஒன்று... Read more »

கனகராயன்குளம் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!!! கனகராயன்குளம் வர்த்தகர்கள் கடையடைப்பு!

வவுனியா கனகராயன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக இன்று (11.09.2018) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது. கனகராயன்குளம் வர்த்தக சங்கம், பொது அமைப்புக்கள், கிராம மக்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவில் உடையில்... Read more »

பொலிஸ் அதிகாரியின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதல்!! சிறுமி உட்பட மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியா – கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உள்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும்... Read more »

முல்லைத்தீவில் பொலிஸாரால் சீருடைகள் வழங்கிவைப்பு!

முல்லைத்தீவு, திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்துக்கு ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் பொலிஸாரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்துக்கென சிறப்பாக நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசராஜாவின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைத்துணிகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நாட்டை ஆளப்போகும் எதிர்கால சந்ததிகள்... Read more »

முல்லைத்தீவில் புத்தர் சிலையுடன் சென்ற பிக்குகள் விரட்டியடிப்பு!!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் பௌத்த விகாரை அமைக்கும் நோக்கில் வந்த பௌத்த பிக்குகள் உட்பட 12 பேர் பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடகங்களுக்கு தகவல்... Read more »

ரூபா 450 மில்லியனில் கிளிநொச்சி நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நட்டார் பிரதம நீதியரசர்

கிளிநொச்சியில் மாகாண மேல் நீதிமன்றை உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடத் தொகுதி 450 மில்லியன் ரூபா செலவில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (3) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி நீதிமன்ற வளாகத்தில் இன்று (03-09-2018) காலை 09.00 மணிக்கு இந்த அடிக்கல் நடும் நிகழ்வு... Read more »

மாங்குளம் அருகே மிதிவெடி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு – ஒருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் மிதிவெடி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இன்று(திங்கட்கிழமை) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரவிப்பாஞ்சானைச் சேர்ந்த 24 வயதான பி.திலீபன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது மற்றுமொருவர்... Read more »

படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவின் உடல் நல்லடக்கம்!

கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட முறிகண்டி பகுதியை சேர்ந்த கருப்பையா நித்தியகலா என்ற யுவதியின் உடல் நேற்று (வெள்ளிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது. முறிகண்டி பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி வழிபாடு இடம்பெற்றதை அடுத்து அன்னாரின் பூத உடல் முறிகண்டி சேம காலைக்கு எடுத்து செல்லப்பட்டு... Read more »

கிளிநொச்சி யுவதி படுகொலை: சந்தேகநபர் கைது

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் இடம்பெற்ற படுகொலை சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கு அமைய குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தொலைபேசியிலிருந்து இறுதியாக குறித்த சந்தேகநபரின்... Read more »

படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம்

படுகொலை செய்யப்பட்ட நித்தியகலாவிற்கு நீதி கோரி கிளிநாச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. கிளிநாச்சி சேவை சந்தை முன்பாக இந்த ஆரப்பாட்டம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த குறித்த ஆர்ப்பாட்டத்தில், கிராம மட்ட... Read more »

கிளிநொச்சி யுவதி படுகொலை: உடற்கூற்று பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பான உடற்கூற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், குறித்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இடது புற கண்ணுக்கு மேற்பகுதியில் குத்தப்பட்ட உட்காயம் ஒன்று... Read more »

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டார்!

கிளிநொச்சியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு முறுகண்டி வசந்தநகரைச் சேர்ந்த 32 வயதான கறுப்பையா நித்தியகலா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு உத்தியோகதரின் இடுப்புப் பட்டி மற்றும் இரண்டு நீல மற்றும் சிவப்பு பேனாக்கள் காணப்பட்டுள்ளமயினால் இவர் பாதுகாப்பு... Read more »