விடுதலைப் புலிகளின் சொத்துக்களை கொடுப்பார்களா? சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை நாங்கள் எதற்காக கேட்கபோகிறோம்? கேட்டாலும் கொடுப்பார்களா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கை... Read more »

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகம் – இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தொடர்ச்சியாக அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றஞ்சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் அதுதொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினையும் அனுப்பியுள்ளது. இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கை வருமாறு, இலங்கை ஆசிரியர் சங்கம், ஊடக... Read more »

இன அழிப்பு நாளாக மே 18 பிரகடனம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18ஆம் திகதியை இன அழிப்பு நாளாகவும், தமிழ் தேசியத்தின் துக்க நாளாகவும் வடக்கு மாகாணசபை பிரகடனப்படுத்தியுள்ளது. வடக்கு மாகாண சபையின் 122வது அமர்வு நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்படி... Read more »

வடக்கு கல்வி அமைச்சின் செயலாளராக சத்தியசீலன் நியமனம்

வடக்கு கல்வி அமைச்சின் செயலாளராக எஸ்.சத்தியசீலனும் மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக தெய்வேந்திரனும் நியமிக்கப்பட்டனர்.வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயால் இன்று (5) இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டன. இதன்மூலம் வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனத்திலிருந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்தது. வடக்கு மாகாண விவசாய... Read more »

அரசாங்கத்திற்கு எடுத்து கூறுவது எங்களது கடமை – முதலமைச்சர்

அரசாங்கமும், படைத்தரப்பும் என்ன செய்ய வேண்டும் என்பதை அவற்றுக்கு எடுத்துக் கூறுவது தங்களது கடமை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் படைத்தரப்பினர் நிலைகொண்டுள்ளமை குறித்து, வாரத்துக்கு ஒரு கேள்விக்கு வழங்கியுள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

அறிவிப்புகளுடன் நிறைவடைந்தது வடக்கு மாகாண சபை அமர்வு

வடக்கு மாகாண சபையின் 121ஆவது அமர்வு, பிரதி அவைத்தலைவர் வல்லிபுரம் கமலேஷ்வரன் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வடக்கு மாகாண அவைத்தலைவரின் மனைவி காலமாகியதால், பிரதி அவைத்தலைவரின் தலைமையில் சபை கூடியது. எனினும், இன்றைய தினம் முக்கிய விடயங்கள் குறித்து பேசப்படவில்லை. இந்நிலையில், ஆளுநரின்... Read more »

வடக்கு அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க ஆளுநர் உத்தரவு

வடக்கு மாகாண அமைச்சரவை மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார். வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டை உள்ளூர்... Read more »

முல்லைத்தீவுக்கு சென்று கனவயீர்ப்பில் ஈடுபட வடமாகாண சபை தீர்மானம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாயபுர மற்றும் வெலிஓயா, கிதுள் ஓயா பகுதிகளில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை வடமாகாண சபையினர் முன்னெடுக்க வடமாகாண சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்த போராட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின்... Read more »

சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை: சிவாஜிலிங்கம்

சுதந்திர தமிழீழம் மலர்வதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம், எச்சரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண சபையில் நடைபெற்றது.... Read more »

தொண்டர் ஆசிரியர்களது முற்றுகை: மாகாணசபை உறுப்பினர்களை மீட்டெடுத்தார் டக்ளஸ்!

வட.மாகாண தொண்டர் ஆசிரியர்களது முற்றுகைக்குள் இருந்து வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நிரந்த நியமனத்தை வழங்குமாறும், நிரந்தரமாக்கலுக்கான நேர்முகத் தேர்வுத் திகதியை உறுதிப்படுத்தி தெரிவிக்குமாறும்... Read more »

முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தயாரா?: வட.மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வி!

வட.மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் எடுக்கவில்லை என வட.மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வட.மாகாணசபையின் 119ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா... Read more »

வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவுக்கு கையளிப்பு: சிவாஜிலிங்கம்

இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திற்கு வழங்கியுள்ள உறுதிமொழிகளை உடனடியாக நிறைவேற்ற, வலியுறுத்தி வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஐ.நாவுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்றயதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும்... Read more »

நடேஸ்வர கல்லூரி கிணற்றையும் , கட்டடத்தையும் காவல்துறையினர் ஆக்கிரமித்து உள்ளனர் – கஜதீபன்

எமக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் காவல்துறையினரிடம் முறையிட செல்வோம் இங்கே பொலிசாரே பிரச்சனை என்றால் யாரிடம் முறையிடுவது என தெரியாமல் உள்ளது என வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 118 ஆவது அமர்வு நேற்ற்ய தினம்... Read more »

வடக்கில் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகள் இனி மாகாண சபையிடம்!

இராணுவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைப்பதற்கான கோரிக்கையினை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் முன்வைப்பதற்கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 118வது அமர்வு நேற்று (13) வடமாகாண சபையின் பேரவை செயலக... Read more »

நீர்ப்பாசன திட்டம் தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்: சிவநேசன்

வவுனியாவில் மகாவலி திட்டத்துடன் தொடர்புடைய படிமுறை நீர்ப்பாசனத் திட்டம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதலில் இது தொடர்பாக வட.மாகாண சபையுடன் ஒப்பந்தம் அல்லது பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டுமென வட. மாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார். வட. மாகாண விவசாய, கமநலசேவைகள் மற்றும்... Read more »

வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது!!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று முற்பகல் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முல்லைத்தீவு, வட்டுவாகலில் கோத்தாபய கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிக்க முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் இன்று காலை முல்லைத்தீவு பொலிஸாரால் அழைக்கப்பட்டார். சம்பவம்... Read more »

சர்வதேசத்திடம் நீதி கோரி தீர்மானம் நிறைவேற்றியது வடமாகாணசபை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 117வது அமர்வு கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செலயகத்தில், அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம்... Read more »

வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர், உப தவிசாளர் தெரிவை கண்டிக்கிறோம்!: ஜி. ரி. லிங்கநாதன்

வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தெரிவு செய்யப்பட்டுள்ள தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும், அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் வட. மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், “வவுனியா வடக்கு... Read more »

வட. மாகாண முதலமைச்சர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள், முதலமைச்சர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வடக்கு மாகாண தொண்டராசிரியர்கள் சிலர், கொழும்பிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 182 தொண்டராசிரியர்களுக்கு நியமனம் வழங்க மத்திய அரசாங்கம் அனுமதித்துள்ளபோதும், வடக்கு மாகாண... Read more »

மேற்குலகுடன் மகிந்த கைகோர்த்தால் மைத்திரியும் றணிலும் தூக்கிவீசப்படுவார்கள்

முதலமைச்சர் அவர்கள் கேள்வி பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு விடுத்துள்ளார் அதில்… கேள்வி–நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை... Read more »