. Editor – Page 10 – Jaffna Journal

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுலகத்தின் மீது தாக்குதல்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சாவகச்சேரி மீசாலை மேற்கிலுள்ள குறித்த அலுவலகத்தின் மீது நேற்று (புதன்கிழமை) இரவு 11 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற... Read more »

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு?

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை இரண்டு வாரங்களுக்கு பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் விரைவில்….. Read more »

அதிகாலையில் வீடு புகுந்து ஐவர் மீது வாள்வெட்டு!! – பெற்றோல் குண்டுத் தாக்குதல்!!

தென்மராட்சி கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். “கைதடி ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த... Read more »

ஓவியர் புகழேந்தி நல்லூரில் திலீபனுக்கு வணக்கம் செலுத்தினார்.

தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட புகழேந்தி அவர்கள் மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார். இன்றய நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு... Read more »

சாவகச்சேரியில் கத்திமுனையில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூபா 18 லட்சம் கொள்ளை!!!

சாவகச்சேரி நகர் ஏ9 நெடுஞ்சாலையிலுள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றுக்குள் கத்தியுட்ட் புகுந்த கொள்ளையர் ஒருவர், பணியாளரை அச்சுறுத்தி சுமார் 18 லட்சத்து ரூபா பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. இன்று காலை வழமைபோல நிதி... Read more »

புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ். நீதிமன்றில் வழக்கு

புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய... Read more »

கிளிநொச்சியில் பதற்றம்!- குடியிருப்பு கொட்டகைகளை அகற்ற முயற்சி

கிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. சாந்தப்புரம் பகுதியில்... Read more »

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்த அந்தனர்கள் கைது!!

யாழில். கஞ்சா போதை பொருளை உடமையில் வைத்திருந்தார்கள் எனும் குற்றசாட்டில் அந்தணர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். கோப்பாய் பகுதியில் கடந்த திங்கட்கிழமை வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர் குறித்த இரு அந்தணர்களையும் மறித்து... Read more »

கடலட்டை பிடித்தோரை மடக்கிப் பிடித்த வடமராட்சி மீனவர்களை மிரட்டிய பொலிஸ் அத்­தி­யட்­ச­கர்!!

வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில் கட­லட்டை பிடித்த வெளி­மா­வட்ட மீன­வர்­கள் பிர­தேச மீன­வர்­க­ளால் திட்­ட­மிட்டு மடக்­கிப் பிடிக்­கப்­பட்­ட­னர். மடக்­கிப் பிடித்த மீன­வர்­களை வைத்து உரி­மை­யா­ளர்­களை இனங்­காண பிர­தேச மீன­வர்­கள் திட்­ட­மிட்­ட­போ­தும், பொலி­ஸார் அச்­சு­றுத்­தும் வகை­யில் செயற்­பட்டு பிடிக்­கப்­பட்ட மீன­வர்­களை மீட்­டுச் சென்­ற­னர். வட­ம­ராட்சி கிழக்­குக் கட­லில்... Read more »

நள்ளிரவு முதல் சீனி மற்றும் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

சமையல் எரிவாயுவின் விலைகள் மற்றும் சீனியின் விலைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்வடையவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அந்தவகையில் ஒரு கிலோ சீனியின் விலை 20 ரூபாயாலும், 12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் விலையை 190 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை... Read more »

சுழிபுரம் ரெஜினா கொலை – மூடிய அறையில் சாட்சிப் பதிவு

சுழிபுரரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ரெஜினாவின் கொலை வழக்கின் இரண்டாவது சாட்சியாளரிடமும் அவருடைய இரண்டு பிள்ளைகளிடமும் மூடிய அறையில் சாட்சிப் பதிவுகள் முன்னெடுக்கப்பட்டன. மல்லாகம் நீதவான் நீதீமன்றத்தில் நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது,... Read more »

பலாலியை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை – அமைச்சர்

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை இந்தியாவிடம் ஒப்படைக்கப் போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு, விமல் வீரவன்சவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர்... Read more »

வடக்கின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் தமிழகத்திடம் விண்ணப்பம்: மாவை

இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் உலகின் வளர்ச்சியடைந்த பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கையில், குறிப்பாக வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கும் அந்த சந்தர்ப்பம் கிடைக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசின் அனுசரணையில் யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம்... Read more »

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: அரசாங்கத்திடம் அவசர முடிவை கோரும் கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நல்லாட்சி அரசாங்கம் அவசர தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற நிலையில், இது தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை)... Read more »

இராணுவத்திடம் சரணடைந்த புலிகள் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை நிராகரிக்கிறது இராணுவம்!

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுவிட்டதாக, அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அணி தெரிவித்துள்ள கருத்தை இராணுவம் முற்றாக மறுத்துள்ளது. கடந்தவாரம் இடம்பெற்ற முன்னாள்... Read more »

வடக்கு முதலமைச்சரின் ஆட்சேபனைகள் நிராகரிப்பு!!

வடக்கு முதலமைச்சர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேவேளை முலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. Read more »

பலாலி விமான நிலையம் இந்திய விமான நிலைய அதிகார சபையினால் அபிவிருத்தி!

இலங்கையின் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கையை இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான விமான நிலைய அதிகார சபை தயார்ப்படுத்தவுள்ளது. இந்தியாவின் பெரிய செய்தி முகமையான பிரஸ் ட்ரஸ்ட் ஒஃப் இந்தியா நிறுவனம் இந்த செய்தியை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது. இந்திய... Read more »

தமிழ்நாடு அரசாங்கத்தினால் யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்கள் வழங்கிவைப்பு

யாழ். நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை தமிழ்நாடு அரசாங்கம் வழங்கிவைத்துள்ளது. புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வு, யாழ். நூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. தமிழகத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் பங்குபற்றுதலுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது,... Read more »

வடமராட்சியில் மீனவர்கள் போராட்டத்தில் குதிப்பு!!!

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு மீனவர்களை, அப்பகுதி மீனவர்கள் மடக்கிக் பிடித்து தடுத்து வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து அங்கு பொலிஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட தென்னிலங்கை... Read more »

தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது!

அநுராதபுரம் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி கடந்த 14ஆம் திகதி 8 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்... Read more »