இந்திய நாடாளுமன்றில் புகை குண்டு வீச்சு! இருவர் கைது!

இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு வளையத்தை தாண்டி மக்களவைக்குள் அத்துமீறி இருவர் நுழைந்ததால் அவைக்குள் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இன்று (டிசம்பர் 13) நாடாளுமன்றம் தாக்குதல் தினமாகும். 2001ஆம் ஆண்டு டிசம்பர்...

விண்கல் மழையை பார்வையிட வாய்ப்பு!!

வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை (Geminid meteor shower), பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கையக்கு கிடைத்துள்ளது. [caption id="attachment_120941" align="aligncenter" width="760"] The Geminid meteor shower on December 13, 2020 was photographed in the Kubuqi Desert of Inner Mongolia, China. On...
Ad Widget

ஆலய விக்கிரகங்களின் கீழுள்ள ஐம்பொன் தகடு மற்றும் பொற்காசுகளை திருடிய பூசகர் கைது!!

ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள இயந்திர தகடு மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறையில் உள்ள இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த இயந்திரத் தகடு மற்றும் பொற்காசு என்பற்றை அவர் திருடியுள்ளார் என பொலிஸார் கூறினர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து 5 பவுண்...

யாழில் சீனியை பதுக்கும் வர்த்தகர்கள்: விரைவில் நடவடிக்கை என்கிறார் மாவட்ட செயலாளர்!!

யாழ். மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுவதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழில் நேற்று(12.12.2023) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனி கூட்டுறவு சமாசம் ஊடாக கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உத்தியோகபூர்வமாக இதனை உறுதிப்படுத்த முடியவில்லை....

யாழ்.பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கைது!!

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவணொருவனைப் கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே நேற்றைய தினம் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வீதியில் சென்ற பெண்ணைத் தாக்கி, தங்க நகைகள் கொள்ளை!!

அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இவ்வாறு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி நாவற்காடு வீதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒரு பவுண் காப்பும் அரைப் பவுண் மோதிரமும் கொள்ளையடித்துச்...

யாழில். ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொலை அச்சுறுத்தல்!!

யாழில் கும்பலொன்று ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து அவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வியங்காட்டுப் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவருக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ தினமான நேற்று(11) மாலை, முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த 06 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய கும்பல்...

யாழில் DJ-NIGHT நடைபெறக்கூடாது!

`DJ-NIGHT` என்ற பெயரில் யாழில் இடம்பெற்றுவரும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” டிஜே நைற் என்ற பெயரில் களியாட்ட நிகழ்வொன்று,...

வெற்றியிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது – உலகத் தமிழர் பேரவையிடம் சம்பந்தன் தெரிவிப்பு

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வினைக் காண்பதில் பௌத்த தேரர்கள், அனைத்து அரசியல் தரப்பினர், பொதுமக்களை மையப்படுத்திய உலகத் தமிழர் பேரவையினரின் முயற்சியானது தாமதமாக முக்கெடுக்கப்படடுவதாக இருந்தாலும் அது வெற்றிபெறுவதிலேயே தமிழர்களினதும் ஒட்டுமொத்த நாட்டினதும் எதிர்காலம் தங்கிள்ளது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற...

கிளிநொச்சியில் பாடசாலையின் பெயர் திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது: சுகாஷ்

கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையானது தற்போது நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ்ப் பாடசாலை என்ற அடையாளம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவரது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...

நாடு முழுவதும் மீண்டும் மின் தடை ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சனிக்கிழமை மின்னல் தாக்கம் காரணமாக திடீர் மின் தடை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை !

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ,...

வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது!!

வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன், வீட்டில் தனிமையில் இருந்த யுவதியை மிரட்டி, அவரிடம் இருந்த வங்கி ஏ.டி.எம் அட்டையை பறித்துச் சென்றுள்ளார். அது தொடர்பில் யுவதியினால்...

தமிழர் நிலத்தை அபகரிப்பது இன அழிப்பின் ஒரு பகுதியே: சுகாஷ்

தமிழர் நிலத்தை சுவீகரிப்பதற்கான கட்டமைக்கப்பட்ட இன அழிப்பினுடைய ஒரு பகுதியே அராலி முதல் பொன்னாலை வரையான கடற்கரையோர பிரதேசங்கள் ஆக்கிரமிப்பு என சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் குற்றம் சுமத்தியுள்ளார். அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் எடுத்துள்ள முயற்சியை கைவிட வலியுறுத்தி பொன்னாலை சந்தியில் நேற்று(10.12.2023)...

வழுக்கையாறு இந்து மயானத்தில் திருட்டு!!

வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்தில் எரிமேடையில் சடலங்களை எரியூட்டுவதற்கு விறகுகளை அடுக்குவதற்கான இரும்பு தூண்கள் நான்குகே கொள்ளையிடப்பட்டுள்ளன. அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்!

யாழ். சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனிதஉரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த முறைப்பாட்டில், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கைதியை நேற்றைய தினம் பார்வையிட சென்ற போது, அவர் ”தன்னை சிறைக்காவலர்கள் துன்புறுத்துவதாகக் கூறி அழுதார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது....

வடக்கிற்கு அனுப்பப்பட்ட சீனியில் 30,000 Kg திருப்பி அனுப்பப்பட்டது!

வட மாகாணத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 80,000 கிலோகிராம் சீனி அனுப்பப்பட்டிருந்த அதில் தரமற்றதாகக் கருதப்படும் 30,000 கிலோகிராம் சீனி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 320 ரூபாவிற்கு சீனி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வட மாகாணத்திற்கு 100 மெற்றிக் தொன் சீனியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடற்தொழில் அமைச்சரிடம் உறுதியளித்திருந்தார்....

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் ; அடையாள அணிவகுப்பு இன்று!!

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அடையாள அணிவகுப்பு நடத்தப்படவுள்ளதுடன், பொலிஸ் பொறுப்பதிகாரியின் சாட்சியங்களும் பதிவு செய்யப்படவுள்ளன. வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் சித்திரவதைகளுக்கு உள்ளன நிலையில் கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.நீதவான்...

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு!!

முல்லைத்தீவு - கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில்...

தமிழகத்தில் நிலநடுக்கம்!!

தமிழகத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே 3.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.39 மணியளவில் பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதேவேளை, கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்திலும், இன்று...
Loading posts...

All posts loaded

No more posts