- Friday
- April 10th, 2026
இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாவாக காணப்பட்ட ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் ரக...
தேமுதிக தலைவரும், நடிகருமான ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த்‘ கொரோனாத் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில்நேற்றைய தினம் (28) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணமானது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் தமது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியிலும்...
“யாழில் தற்போது பரவி வரும் டெங்கு நுளம்புகள் வீரியம் மிக்கவை” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரும், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் டெங்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” தற்போது பரவிவரும் டெங்கு...
அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷாவுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர். இந்திய தொலைக்காட்சி ஜீ...
புலி சீருடை விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன்...
சமகாலத்தில் சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் தொற்றுகள் அதிகளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சிறுவர்கள் நோய் பரவாமல் தடுக்க முகக் கவசம் அணிவது அவசியம் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். இரண்டு சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதேவேளை கம்பஹா மாவட்ட...
இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு வடகிழக்கில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தெற்கு கடற்கரையில் இருந்து சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் சஞ்சய் பெரேரா இதனை உறுதி செய்துள்ளார். எனினும் பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழமான கடலில் ஏற்பட்டுள்ள இந்த...
வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று (27) புதன்கிழமை கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது எவ்வாறு வந்தது, இது உண்மையிலேயே என்ன என்ற விடயங்கள் இதுவரை வெளியாகவில்லை.
யாழில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டினை காலத்தில் வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையிலேயே குறித்த நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் மாத்திரமன்றி வீதிஒழுங்குகளை மீறுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 24 மணிநேரமும் குறித்த சோதனை நடவடிக்கை...
யாழில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை போட்ட நபரொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மல்லாகம் பகுதியை 75 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடந்த 19ஆம் திகதி நுளம்புக்கு புகைப்போட, புகை சட்டிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ பற்ற வைக்க முற்பட்டுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக தீக்காயங்களுக்கு உள்ளான...
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை (28) காலை காலமாகியுள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும்,...
மாவீரர் தினம் அன்று, கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய படம் பொறித்த ஆடையுடன் வந்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்தது. சாவகச்சேரி நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று புதன்கிழமை (27) எடுக்கப்பட்ட போது, கடந்த ஒரு மாதகாலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த இளைஞன்...
தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என கோரிவருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த தேர்தலை பகிஸ்கரிப்பது தான் தமிழ் மக்களுக்கு...
தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் கட்டப்பட்ட திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, குறித்த விகாரைக்கு அருகே போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையில், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது ”வடக்கில் தமிழர்களின் காணியை அபகரித்து இராணுவத்தினரால் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக...
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையானது தமது சபையினால் ஏற்பட்ட தவறு என இலங்கை மின்சார சபை ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 5 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்பட்ட நிலையில் அதனை மீளப்பெற முடியாத நிலை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. இதுபோன்ற திடீர் மின்தடை ஏற்படும் பட்சத்தில், கூடுதல் மின்...
இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் எனவும், அதற்காக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதற்கான நிவாரணத்தினை பெற்றுதரக்கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால் இலங்கை அதிபர் சேவை...
டெங்குக் காய்ச்சலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்புப் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் ஆரம்பத்தில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூளைச் சாவடைந்து உயிரிழந்துள்ளார்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌத்த விகாரையில் மலேசிய வைத்தியர்களின் ஆலோசனையில் மருத்துவ முகாம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள “சரசவி பௌத்த” விகாரையில் குறித்த முகாம் நேற்றையதினம் இடம்பெற்றது. மலேசியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர் குழுவினரின் வைத்திய ஆலோசனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதுடன், இதில் அக்குபஞ்சர் சிகிச்சையும் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பௌத்த விகாரை மற்றும்...
யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி வரும் வேளை காணி விடுவிப்புக்கள் தொடர்பில் பச்சைக்கொடி காட்டப்படும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். யாழில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வனவள பாதுகாப்பு, வன ஜீவராசி திணைக்களம் என்வற்றின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் 11 கட்டம் இருந்தது....
யாழ். பல்கலைக்கழக மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான...
Loading posts...
All posts loaded
No more posts
