- Thursday
- April 9th, 2026
யாழ். சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு...
முல்லைத்தீவு - ஆரோக்கியபுரம் தமிழ் வித்தியாலயத்தில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் மாணவனொருவனை ஆசிரியர் ஒருவர் கடுமையாக தாக்கியமையினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (01.04.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது குறித்த பாடசலையைச் சேர்ந்த நாகராசா ஜோன்சன் என்ற மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டுள்ளார். முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம்...
தாய்வானின் கிழக்கு கடற்கரையில் இன்று 7.4 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்வானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக தாய்வானில் உள்ள கட்டடங்கள் பல தரைமட்டம் ஆகியுள்ளதுடன் இடிந்து விழுந்துள்ள கட்டிடங்கள் உள்ளே மக்கள்...
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக மீண்டும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி செயற்பட்டுவரும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பி.கே.விக்கிரமசிங்கவும் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள்...
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்கள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் புதிய விலை 440 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய...
மேல், வடமேல், வடமத்திய, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் இரத்தினபுரி, மொனராகலை,மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப்...
தெல்லிப்பழையில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்காக பொலிஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். விசாரணைக்காக மூன்று மாணவர்கள் சென்றதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் விசாரணையில்...
நாட்டில் நிலவும் கடினமான பொருளாதார நிலைமை காரணமாக ரஷ்ய குடியுரிமை பெறும் நம்பிக்கையில் நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர் ஒருவர் மாதம் 3000 அமெரிக்க டொலர் (சுமார் 9 இலட்சம் இலங்கை ரூபா) சம்பளமாக பெறுவதாக இலங்கையர்கள் தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது....
வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது. சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும்...
வவுனியா ஓமந்தையில் நேற்று மாலை (27.03.24) இடம்பெற்ற பாரிய விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அகிலேந்திரன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் டிப்பர் வாகனமும், கப் ரக வாகனமும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின்...
பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தரவுகள் பெறப்படுவதாக அதன்...
உக்ரேனில் நடந்து வரும் மோதல்களில் இலங்கையர்களும் பங்கேற்றுள்ள சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரேனில் ரஷ்யாவுக்காக போரிட்ட குறைந்தது இரண்டு இலங்கையர்களும், உக்ரைன் தரப்பில் மூன்று பேரும் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்ய பதுங்கு குழியின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரஷ்யப் படைகளுடன்...
கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் நேற்றையதின்ம (26) காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு காணி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டதுடன் நில அளவைத்திணைக்களத்தின் வாகனத்தினையும் இடைமறித்தனர். பின்னர் நீண்ட நேர காணி...
முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற 64 வயதானவரே நேற்று உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் முகநூல் விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் வைத்தியர் எனக் கூறப்படுவரால் நடத்தப்படும் சிகிச்சை நிலையத்தில் தனது...
தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதான தேவாலயங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு...
அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்ட வகையில் நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெறும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் நியமிக்கப்பட்ட தனது அரசியல் அமைச்சரவைக்கும் ஜனாதிபதி...
இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் வானூர்தி நிலையத்திலிருந்து வெளியில் வரும்போதே சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். அதன்படி ஒரு மாதத்துக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு 25 டொலர்களும், மூன்று மாதங்களுக்கான சாரதி அனுமதி பத்திரங்களுக்கு...
இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் மீனவர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்கின்ற நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற் தொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19 ஆம்...
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பிரதான பூசகர் தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் விடுதலையான பூசகர் சுகவீனமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை...
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடாவிற்கு அனுப்புவதாக கூறி , இளைஞனிடம் 60 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஹிங்குராங்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக , கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கூறி 60 இலட்ச ரூபாய் பணத்தினை...
Loading posts...
All posts loaded
No more posts
