- Thursday
- May 21st, 2026
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கிராமத்தில் முப்பது வருடங்களாக இருந்து வரும் பிள்ளையார் கோவிலின் காணியை கடந்த எட்டு வருடங்களாக புத்தர் ஆக்கிரமித்து இருப்பதாக கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம் கிராமத்தில் காணப்பட்ட ஒரு அரச மரத்தில் கடந்த முப்பது வருடங்களாக பிள்ளையார் கோவில்...
நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னோக்கிக் கொண்டுசெல்லும் முனைப்பிலேயே அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்தியில், இந்த அமைச்சரவை மாற்றமானது புதிய உத்வேகத்தை கொடுக்கும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுமாறு இந்திய உளவுப் பிரிவான ‘றோ’விற்கு இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பணித்திருந்தார் என விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரும் சர்வதேச ஆயுதக் கொள்வனவாளருமாக கருதப்படும் கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே கே.பி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்...
அரச வைத்தியர்கள் சங்கம், இன்று திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் 24 மணிநேரம், வேலைநிறுத்த போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. மாலபேயில் அமைந்துள்ள தெற்காசிய தொழில்நுட்ப மற்றும் மருத்துவ நிறுவனமான (சைட்டம்) தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அந்தச் சங்கம் அறிவித்துள்ளது. தலைவரான, வைத்தியர் அனுருத்த பாதெனியவை, இன்று(22) நீதிமன்றத்தில்...
கிளிநொச்சி - கல்லாறு காட்டுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்ட 12 பேரை தருமபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நீண்ட காலமாக சட்ட விரோதமாக நடைபெற்று வரும் இம் மணல் அகழ்வு மற்றும் வியாபாரம் பற்றி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரியான மகேஸ் வெலிகண்னவுக்கு தகவலளிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...
“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரனின் விருப்பத்திற்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கு ஒரு போதும் முடியாது” என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அண்மையில் முகமாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே நேற்றையதினம் (ஞாயிற்றுக்கிழமை) அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “விக்னேஷ்வரனின் தாளத்துக்கு ஆடுவதற்கு...
”வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் வடக்கு மாகாணத்தை மாற்றியமைக்க முன்வர வேண்டும்” என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மூன்று தசாப்தகாலமாக அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் பேராசிரியர் கலாநிதி குணசிங்கத்தின் உதவியில் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட இறந்தோரை நினைவுகூரும் நினைவு கட்டிமொன்றை திறந்து வைத்து, முதியோர் இல்லத்திற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்து உரையாற்றிய முதலமைச்சர்...
மக்கள் போராட்டத்தினால் தமது உரிமைகளை பெற்று வருகின்றார்களே தவிர, வேறு எவரும் பெற்றுக்கொடுக்கத் தயாராக இல்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி-இரணைதீவு பூர்விக மண்ணில் மீள்குடியேற்றம் செய்யுமாறு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர்...
முகமாலைப் பகுதியில் பொலிஸ் வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்சம்பவத்துடன் தொடர்பான பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மூலமாக தாக்குதல் நடத்திய நபர்களின் தடயப் பொருட்கள் சில கிடைத்துள்ளதுடன்...
சாவகச்சேரி மந்துவில் பிரதேசத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். குறித்த இளைஞரை இன்று காலை 8.30 மணியளவில் வெள்ளை நிற காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாக அவ்வூர் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அஜித் என அழைக்கப்படும் 23 வயதுடைய இளைஞனே கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவின் முகமாலைப் பிரதேசத்தில், இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (19) அதிகாலை 12.30 மணிக்கு ஏ-9 பிரதான வீதியின் முகமாலை கச்சார்வெளி பிரதேசத்துக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தத் தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏ-9 பிரதான வீதியில்...
நாடளாவிய ரீதியில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி இன்று (19) பதிவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக, வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், மணித்தியாளத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. எனவே, நாடளாவிய ரீதியிலுள்ள கடற்கரை பகுதிகளில் குடியிருக்கும் மக்களும் மீன்பிடிக்கச் செல்வோரும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு...
இராணுவத்தினர் உயிரைப் பணையம் வைத்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுத்தந்ததை இன்று பலர் மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உயிரைப் பணையம் வைத்துப் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஷ, தற்போது உருவாகியுள்ள நிலைமை கவலைக்கிடமானது எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணத்தில் கால்பதிக்க அனுமதியற்ற ஒரு நிலையம் உருவாகியுள்ளதாகவும்...
யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகிறது. பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர்...
ஐதராபாத்தில் கிரிக்கட் விளையாடும் போது காயமடைந்த இளம் வீரர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிர் ஆலம் இத்கா என்ற உள்ளூர் மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கட் விளையாடினர். ஒரே மைதானத்தில் பல குழுக்களாக இளைஞர்கள் விளையாடியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு குழுவில் இடம்பெற்றிருந்த வாஜித் என்ற இளைஞர், எதிரணி வீரர் அடித்த...
தென்ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளருமான ஜான்டி ரோட்ஸ் இந்தியா மீதுள்ள நேசத்தின் காரணமாக தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்தார். அவரது செல்லமகள் இந்தியா இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் தீவிர ரசிகையாகி இருக்கிறாள். விராட் கோலி போஸ்டரின் பின்னணியில் தனது மகள்...
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தற்போது மகேஷ்பாபுவை வைத்து ஸ்பைடர் தெலுங்குப்படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஸ்பைடர் பட பணிகளை முடித்துவிட்டு, 2017 தீபாவளிக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக...
அஜித் தற்போது `சிறுத்தை' சிவா இயக்கத்தில் `விவேகம்' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள `விவேகம்' படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான `விவேகம்' படத்தின் டீசர்,...
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்க உள்ள படம் `சங்கமித்ரா'. ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படத்தின் தொடக்க விழா பிரான்சில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில், அதாவது ரூ. 300 கோடி செலவில் உருவாக உள்ள...
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சைட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்து எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை அரைநாள் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, திங்கட்கிழமை காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரையில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Loading posts...
All posts loaded
No more posts
