யாழில் தேர்தல் கடமையில் 6,500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தபடவுள்ளனர்: அரசாங்க அதிபர்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் வாக்களிப்பு நிலைய ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு...

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பான குற்றசாட்டின் சந்தேகநபர்களான சகோதரர்கள் இருவரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே...
Ad Widget

புங்குடுதீவு விபத்து: கடற்படை சாரதிக்கு பிணை- நீதவானால் கண்டிக்கப்பட்ட பொலிஸார்

புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் கவசவாகனம் மோதி, பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கடற்படையின் வாகனச் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த வழக்கு நேற்று (புதன்கிழமை) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போது, மாணவியை பாடசாலைக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்ற மாணவியின் மாமனாரையும் பொலிஸார்...

தூய அரசியலுக்கான சபதம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது: அங்கஜன்

தூய அரசியலுக்கான ஆரோக்கியமான சந்ததியினரின் சபதம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான சுதந்திர கட்சியின் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி மாபெரும் பரப்புரை பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டார். கரவெட்டி பிரதேச சபைக்கான இறுதி மாபெரும் பரப்புரை பிரசார கூட்டம் மக்களின்...

மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகு பயணம்: கர்ப்பிணி உட்பட நால்வர் கைது

மன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு படகு மூலம் பயணித்த கர்ப்பிணிப் பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை தனுஷ்கோடி பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நால்வரும் இன்று (வியாழக்கிழமை) தகுஷ்கோடியை சென்றடைந்த நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அவர்களை ராமேஸ்வரம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மன்னார் பகுதியை சேர்ந்த...

வடகிழக்கில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கு பேசாமடந்தைகளான தமிழ்த்தலைமைகளே பொறுப்பு :ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

ஐக்கியதேசியக் கட்சி தனது உள்ளுராட்சித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்குக் கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைக்கப்போவாதகத் தெரிவித்திருக்கிறது. தமிழ் இன அழிப்புப் போரை நடாத்திய அரசாங்கம் இப்போது தமிழ்ப் பண்பாட்டுப்போரில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகவே பௌத்த விகாரைகளைப் பெரும் எண்ணிக்கையில் அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. வடகிழக்கில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கான பொறுப்பைப் பாராளுமன்றத்தில்...

வெள்ளியன்று அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுப்பு!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளநிலையில் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதனுடன் வாக்கு சீட்டுகளுக்கான பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும், 2 கல்வியல் கல்லூரிகளும் இன்று முதல் வெள்ளிக்கிழமைவரை மூடப்படவுள்ளன....

கூட்டமைப்பு துரோகமிழைத்துவிட்டது: முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் நாட்டின் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்க பூர்வமான எந்த முன்மொழிவும் எமது கூட்டமைப்பால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை. வட மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை ஆகியன முன்வைத்தன. ஆனால் வடமாகாணசபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவைக் கூட வலியுறுத்த எமது தலைவர்களுக்குத் திராணி இருக்கவில்லை போன்றே தோன்றுகின்றது அல்லது...

சுமந்திரன்போல் எனக்கு காக்கா பிடிக்கத் தெரியாது !! என் மீதான குற்றச்சாட்டை ஒருமாதத்துக்குள் நிரூபிப்பாரா ? மணிவண்ணன் சவால் !!

நான் ரவி கருணாநாயக்கவிற்கு காக்கா பிடித்து எனது வாகனத்தை வரியின்றி இறக்குமாதி செய்ததாக சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நான் சுமந்திரனுக்கு சவால் விடுகின்றேன் எனது வாகன இறக்குமதி தொடர்பில் நான் ரவி கருணாநாயக்கவிடமோ அல்லது யாரேனும் அமைச்சரிடமோ தொடர்புகொண்டிருந்ததாக ஒரு மாத காலத்துக்குள் சுமந்திரனால் நிரூபிக்க முடியுமா? அவ்வாறு அவர் நிரூபித்தால் நான் இந்த அரசியலில் இருந்து...

துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும் : சட்டத்தரணி சுகாஸ்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் துரோக கூட்டமைப்பை மக்கள் தூக்கியெறிய வேண்டும் என தெரிவித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஸ், தமிழ்தேசம் பாதுகாக்கப்பட தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சைக்கிள் சின்னத்தில் போட்டயிடுகின்ற தமிழ்த்தேசிய பேரவையின் தேர்தல் பிரச்சார கூட்டம் நாச்சிமார் கோவிலடியில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே...

தேசியத்திற்கு வாக்களிப்போம் : யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் அறிக்கை

தமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல் தொடர்பினில் அனைத்து பீட மாணவர் ஒன்றியங்களதும் சந்திப்பு அதன் தொடர்ச்சியாக மேற்கொண்ட பேச்சுக்களின் அடிப்படையில் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் எமது எமது இனம் ,கலாச்சாரம்,பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுவதன் மூலம் எமது இருப்பு அழிக்கப்பட்டுவருவதாகவும் மாணவர்...

“எம்முடன் இணைந்தால் மட்டுமே உறுதியான தீர்வு” : இரா. சம்பந்தன்

“தமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் எம்மிடமே உள்ளது. தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுவதால் மட்டுமே உறுதியான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்....

தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்துகின்றார் ஜனாதிபதி :எம்.ஏ.சுமந்திரன்

தேர்தல் நெருங்கிவரும் சந்தர்ப்பத்தில் தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவை பதவியில் தொடர அனுமதித்திருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சால் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரை மீண்டும் பணியில் இணைந்துக்கொள்ள...

தேர்தலை புறக்கணிக்க வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் திட்டம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆளுநரின் அலுவலகம் முன்பாக நேற்று (புதன்கிழமை) காலை கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்திய போதே இவ்வாறு தெரிவித்தார்கள். இது தொடர்பில் அவர்கள் கூறுகையில், “கடந்த பல வருடங்களாக நியமனம் பெற்றுத் தருமாறு மத்திய மாகாண...

கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் முதலமைச்சரின் செயற்பாடுகள் : மாவை

தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடித்து தலைமையை மாற்ற வேண்டும் என்பவர்களுக்கு பலம் சேர்ப்பதாக வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் அமைந்துள்ளது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் அவ்வறிக்கையில், “மாற்றுத் தலைமை எது? அவர்கள் கொள்கை மற்றும் இலக்கை அடைந்திட...

திறந்த ஒரே நாளில் பொன்னாலை வீதியை இழுத்து மூடியது ராணுவம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் திறந்துவிடப்பட்ட பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியை, ராணுவம் மீண்டும் மூடியுள்ளது. நேற்று முன்தினம் காலை இவ்வீதி மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்ட நிலையில், நேற்றய தினம் (புதன்கிழமை) அங்கு மக்களை ராணுவம் அனுமதிக்கவில்லையென அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 28 வருட காலமாக குறித்த வீதி ராணுவத்த்தின்...

யாழ் பொலிஸ் நிலையத்தில் கைதியொருவர் தற்கொலை முயற்சி?

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குடும்பத்தலைவர் ஒருவர் கழுத்தில் பிளேட்டால் கீறி தற்கொலைக்கு முயற்சித்தார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பிர் பொலிஸார் தெரிவிக்கையில்... இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. “மதுபோதையில் வந்து தன்னை தாக்குவதாக குடும்பத்தலைவரின் மனைவி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனடிப்படையில்...

மைத்திரியை கொலை செய்ய முயன்ற மஹிந்த!: அம்பலமாகும் இரகசியங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தீட்டிய சதித்திட்டங்களை அம்பலப்படுத்த முயன்றதற்காக பல தடவைகள் என்னைக் கொலை செய்து விட முயற்சி செய்தார்கள் என ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ மேஜர் ஹசித சிரிவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்...

ஜனாதிபதியின் கருத்தால் வெகுண்டெழுந்த உறவுகள்: சர்வதேச தலையீட்டிற்கு கோரிக்கை

காணாமற்போனோர் எங்குமே இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்திற்கு, காணாமல் போனோரின் உறவுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உறவுகளுக்காக ஏங்கித் தவிக்கும் தமக்கு இவ்வார்த்தைகள் மேலும் வேதனையை ஏற்படுத்துகின்றதென குறிப்பிட்டுள்ள உறவினர்கள், தமது வேதனையை கண்ணீராக வெளிப்படுத்தியுள்ளனர். இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை நிலையை...

ஈழத்தமிழர் அரசியல் யதார்த்தம் எது? கூட்டமைப்பின் தலைவர்களுக்கு ஓர் வேண்டுகோள்

தற்போதய சூழலில் யதார்த்தம் என்ற பெயரில் இலங்கை அரசின் ஆக்கிரமிப்புக்குள் தமிழர் தாயகத்தை சிக்கவைக்கும் முயற்சிக்கு தமிழர் தலைமைகள் துணைபோவதை நாம் வேதனையுடன் அவதானிப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்களை அடிமைப்படுத்தும் முயற்சிக்குத் துணைபோக வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் அவர் விடுத்துள்ளார். இது...
Loading posts...

All posts loaded

No more posts