காவல்துறை தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி!!

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற வாகனத்தை காவலர் ஒருவர் தாக்கியதில் அந்த வாகனத்தில் சென்ற கர்ப்பிணிப் பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீது காவல்துறை தடியடி நடத்திக் கலைத்தது. திருவெறும்பூர் பகுதியில் கணேச ரவுண்டானா என்ற இடத்தில் நேற்று மாலை...

கிளிநொச்சி பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் குவிப்பு!!!

நாட்டில் நிலவியுள்ள அசம்பாவித சூழ்நிலைகளை தொடர்ந்து கிளிநொச்சியில் உள்ள பள்ளிவாசல்களில் ஆயுதம் தரித்த இரானுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகர்ப்பகுதியில் உள்ள நான்கு பள்ளிவாசல்களுக்கும் மற்றும் வட்டக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றுக்குமாக ஐந்து பள்ளிவாசல்களுக்கு 57 ஆவது படைப்பிரிவின் இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிவாசல்களின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டும் ஏதாவது அசம்பாவிதங்கள்...
Ad Widget

இலங்கையின் அசாதாரண சூழ்நிலை கவலையளிக்கிறது : அஸ்வின்

இலங்கையில் தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலை கவலையளிப்பதாகவும் விரைவில் இந்நிலை மாற்றமடைய வேண்டுமெனவும் இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது மிகவும் கவலையளிக்கிறது. பல்லின மக்கள் வாழ்கின்ற இந்த அழகிய நாட்டில்...

புலிகளின் நகர்வுகளை முஸ்லிம்களே அரசாங்கத்திற்கு அறிவித்தனர்! : பாதுகாப்புப் படைகளின் பிரதானி

யுத்த காலத்தில் புலிகளின் பிரதேங்களுக்குச் சென்று அவர்களது நகர்வுகள் தொடர்பாக முஸ்லிம்களே அரசுக்கு தகவல்களை வழங்கியதாக பாதுகாப்புப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய (புதன்கிழமை) செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”முஸ்லிம் சமூகத்தைப் பற்றி மிகமுக்கியமான ஒரு விடயத்தை தெரிவிக்க வேண்டும்....

அம்பாறை கொத்து ரொட்டியில் காணப்பட்ட பொருள் குறித்து தகவல்!

அம்பாறையிலுள்ள உணவகமொன்றில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஒருவகை மருந்து கலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென இரசாயண பகுப்பாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கொத்து ரொட்டி தயாரிக்க பயன்படுத்தப்படும் மா திரண்டு கட்டியாக காணப்பட்டமையே, தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அம்பாறையில் உள்ள உணவகமொன்றில் தயாரிக்கப்பட்ட கொத்துரொட்டியில், மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்து கலக்கப்பட்டிருந்ததாக தெரிவித்து அண்மைய நாட்களாக...

விபத்தில் வைத்தியர் ஒருவர் பலி

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ32 யாழ் - மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதியதன் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில்...

சங்கா, சனத், மஹல வன்முறைச் சம்பவங்களுக்கு கண்டனம்

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை வன்மையாகக் கண்டிப்பதாக பிரபல கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் சனத் ஜயசூரிய மஹல ஜயவர்தன ஆகியோர் அறிவித்துள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வலுவாக இருக்க வேண்டிய தருணம் இதுவெனத் தெரிவித்துள்ளனர். டுவிட்டர் மூலம் இருவரும் இவ்வாறு கருத்துரைத்துள்ளனர். இன அல்லது மதத்தின் அடிப்படையில் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட இடமளிக்கப்பட...

கிளிநொச்சியில் அமெரிக்கா பிரஜை ஒருவர் கொலை

அமெரிக்க பிரஜாவுரிமை பெற்ற இலங்கையர் ஒருவர் கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்டுள்ளார் என கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இனந்தெரியாத நபர்களால் நேற்று முன்தினம்(06) இரவு தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று(07) உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி செல்வாநகரை சேர்ந்த 71 வயது இரத்தினம் துரைசிங்கம் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி கொலை செய்யப்பட்ட நபர் அமெரிக்க...

கர்ப்பிணி பெண் கொலை வழக்கினை குற்றபுலனாய்வு துறையினர் பொறுப்பெடுக்க வில்லை

யாழ்.ஊர்காவற்துறை பிரதேசத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரை படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கினை இதுவரையில் குற்றபுலனாய்வு துறையினர் பொறுப்பெடுக்க வில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டது. ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்றய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விளக்கமறியலில் தடுத்து வைக்கபட்டு உள்ள இரு சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். குறித்த...

பாதுகாப்பை கருத்திற்கொண்டே சமூக வலைத்தளங்கள் முடக்கம்: ஒஸ்டின் பெர்னாண்டோ

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார். அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில் நேற்ற (புதன்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் முதலான சமூக...

கண்டி சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் தொடர்பான தகவல் வெளியானது!

கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்ட நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார். குறித்த நான்கு பேரில் ஒருவர் பௌத்த பிக்கு என்றும் ராஜித குறிப்பிட்டார். மேலும்,...

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வெளிப்படுத்தலைக் கோரியும் அவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் நடத்திவரும் தொடர் போராட்டம் ஓராண்டு நிறைவடையும் நிலையில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம்...

கண்டியில் மீண்டும் வெடித்தது வன்முறை : பற்றியயெரிந்த வாணிப நிலையங்கள்

கண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்றுபிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்குரண, 8 ஆவது மைல் கல், கட்டுகஸ்தோட்ட பகுதிகளில் முஸ்லிம்களின் 25 இற்கு மேற்பட்ட கடைகள், தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. இதனால் வானில் கரும்புகை...

மட்டக்களப்பு காத்தான்குடியில் வெடிகுண்டுகள் மீட்பு!! “ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸ்ரீ லங்கா” காரணமா?

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் இரண்டு வெடிகுண்டுகள், இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளிலேயே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர். இதையடுத்து,...

மூடங்கியது பேஸ்புக், வட்ஸ்ஆப்

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு கண்டி மாவட்டம் உட்பட நாட்டின் சில முக்கிய இடங்களில் தொலைபேசிகளினூடான இணைய பாவனைகளும் வலையமைப்பு சேவைகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலதிக அறிவிப்பு வரும் வரை குறித்த இணைய சேவைகள் இடைநிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் பல பாகங்களில் பேஸ்புக் மற்றும் வட்ஸ்ஆப் போன்ற வலையமைப்பு...

சாவகச்சேரியில் சிசுவின் சடலம் கண்டெடுப்பு!

சாவகச்சேரி நகரத்தில் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் இன்று (புதன்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரசபை சுத்திகரிப்பாளர்கள் பொது மலசல கூடத்திலிருந்து குறித்த சிசுவின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

திகனவில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு : கைது செய்யப்பட்ட 24 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

திகன நகரிலிருந்து இரு ஆண்களின் சடலங்களை, பொலிஸார் நேற்று காலை மீட்டுள்ளனர். 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உட்பட இருவரின் சடலங்களே, இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை திகன சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 24 பேரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக,பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தியாவை வென்றது இலங்கை!

சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பங்குபற்றும் சுதந்திரக்கிண்ண முத்தரப்பு இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் நேற்று கொழும்பில் ஆரம்பமானது. ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை...

சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை!

அரச சொத்திற்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு முன் பிணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த முன்பிணை வழங்கப்பட்டுள்ளது. வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி சுவீகரிப்பிற்கு எதிராக நடைபெற்ற...

மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவி துறப்பார்களா? : வியாழேந்திரன்

இனவாத, மதவாத வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய திட்டத்தை முன்வைக்காவிட்டால் முஸ்லிம் மக்களுக்காக முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை துறப்பார்களா? என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சவால் விடுத்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த சவாலை விடுத்தார். ஒரு இனம் அழிக்கப்படும்போது ஒரு இனம் சந்தோசப்படும் நிலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என தெரிவித்த அவர்...
Loading posts...

All posts loaded

No more posts