- Wednesday
- May 13th, 2026
போலிக்கடவுச் சீட்டின் மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் வட மாகாணத்தினைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவிற்கு பயணிக்க முயற்சித்த நிலையிலேயே நேற்று(செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது யாழ்.பருத்தித்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை துவாரகன் (வயது...
கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில்...
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் உன்றுக்கு தமிழ்மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பில் பேரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிபில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை...
அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் ஐ.நா சபைஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வலியுறுத்தி அழுத்தத்தினை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் மகஜர் கையளிக்கப்பட்டது கடந்த சனிக்கிழமை நடைபயணம் முடிவுற்ற அன்று அலுவலக நாள் இல்லாத காரணத்தால் அனுராதபுரத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜரை கையளிக்க முடியவில்லை இதன் காரணமாக ...
தமிழ் அரசியல் கைதிகளின் விடயம் மிக மிக முக்கியமாக அமையும் அதேநேரம் முடிந்தவரையில் மகிந்தவிற்கு தீனிபோடாமலும் நாம் செயல்பட வேண்டியதும் இன்றைய தேவையாகவுள்ளது. என வடக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும் 107 தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்கப்பட வேண்டியது கட்டாயம். அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொலை செய்த கொடூரச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது. வீட்டுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று...
யாழ்ப்பாணத்தில் 4 பொலிஸ் பிரிவுகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நடவடிக்கையில் 40 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களளுள் 151 பேருக்கு எதிராக வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்காக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய யாழ்ப்பாணம், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை தொடக்கம் இந்த பொலிஸ் தேடுதல் நடவடிக்கை...
`இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. எனவே அங்கு மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என்று பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ”இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும்...
அரசாங்கத்தை குறை கூறுவதனால் எந்ததொரு பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகையால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்ததென முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்துகொண்டு, உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ள...
யாழ்ப்பாணம்,ஏழாலை பகுதியிலுள்ள சகோதர்கள் இருவர் மீது வலி.தெற்கு பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலைமையிலான குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏழாலை மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஏழாலை வடக்கை சேர்ந்த செல்வராசா அரவிந்தன் (வயது 25) மற்றும்...
தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித நீதிக்கு எதிரானதென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள நடைபவணி இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்தது. குறித்த...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடை பவணி, இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்துள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்...
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என்ற அழுத்தத்தினை தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, உண்ணாவிரதத்தினை கைவிடுமாறும் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ்...
கத்தி, கொட்டன்களுடன் அதிகாலையில் வீடுகளுக் குள் புகுந்த கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டது. ஐந்து வீடுகளில் இருந்த பொருள்கள், வேலிகள், மின்குமிழ் கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சம்பம் நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் ஏழாலையில் நடந்துள்ளது. கொக்குவில், சுன்னாகம், இணுவில், மானிப்பாய் பகுதிகளில் கடந்த வாரம் இடம்பெற்ற தொடர்வன்முறைச் சம்பவங்களையடுத்து அந்தப் பகுதிகளில் 24 மணிநேரம் சுற்றுக்காவல்...
தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து அளவெட்டிப் பக்கம் செல்லும் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலமை ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த முறுகல்நீடித்த முறுகல் நிலமை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உறுதிமொழியை அடுத்து முடிவுக்கு வந்தது. வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து அளவெட்டிப் பக்கமாக செல்லுத்...
வீட்டில் தனித்திருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மானிப்பாயில் நேற்றுமுன்தினம் காலை நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். உந்துருளியில் வந்த இருவர் வீட்டில் தனித்திருந்த பெண்ணின் கழுத் தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி...
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்பட வில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தநிலையில் குறித்த இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் பேச்சாளர்...
யாழ்ப்பாண சிவில் சமூகமhனது நேற்று காலை 11 மணிக்கு வடமாகாண முதைலமச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கூடி பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் பேசியது. முக்கியமாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் 29 நாட்களாக உணவு தவிர்த்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களுடைய நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை வாழவைப்பதற்கு...
பாரத லக்ஷ்மன் படுகொலை வழக்கில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய தீர்ப்பாயம் வழங்கிய தூக்குத் தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவருக்கு...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இலங்கைக்கு விஐயம் செய்துள்ள இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். கலாசார ரீதியான பயணமாக விஜயம் வெய்த அவர்கள் அங்கு பலவேறு...
Loading posts...
All posts loaded
No more posts
