பெண்­ணின் கழுத்­தில் கத்­தியை வைத்து அச்சுறுத்தி நகை பறிப்பு!!

வீட்­டில் தனித்­தி­ருந்த பெண்­ணின் கழுத்­தில் கத்­தியை வைத்து அச்­சு­றுத்தி அவர் அணிந்­தி­ருந்த இரண்டு பவுண் தங்­கச் சங்­கிலி அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தச் சம்­ப­வம் மானிப்­பா­யில் நேற்­று­முன்­தி­னம் காலை நடந்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் இரு சந்­தே­க­ந­பர்­கள் நேற்று அதி­காலை கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

உந்­து­ரு­ளி­யில் வந்த இரு­வர் வீட்­டில் தனித்­தி­ருந்த பெண்­ணின் கழுத் தில் கத்­தியை வைத்து அச்­சு­றுத்தி தங்­கச் சங்­கிலி, தோடு­களை அப­க­ரித்­துக் கொண்டு தப்­பிச் சென்­ற­னர். இது தொடர்­பா­கப் பெண் மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.

பெண் குறிப்­பிட்ட அங்க அடை­யா­ளங்­க­ளுக்கு ஏற்ப பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர். விசா­ர­ணை­களை அடுத்து கைத­டி­யில் வைத்து மானிப்­பாய் பொலி­ஸா­ரால் இரு­வர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் 21 மற்­றும் 24 வய­து­டை­ய­வர்­கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மல்­லா­கம் நீதி­மன்­றில் நேற்று முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் ஒரு மாதத்­துக்கு முன்­னரே சிறை­யில் இருந்து வெளி­வந்­த­வர்­கள் என்று மானிப்­பாய் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Related Posts