- Tuesday
- May 12th, 2026
பாராளுமன்றத்தை நவம்பர் 5 ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைகழக பேராசிரியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சாதாரணமாக 5 ஆம் திகதி கூடப்படும் பாராளுமன்றத்தை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையான 11 நாட்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும்...
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு மீதான சிறப்புச் சந்தைத் தீர்வை கிலோ ஒன்றுக்கு 40 வீத்த்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு இன்று (1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது. உள்ளூர் விவசாயிகளின் நன்மை கருதியே இந்த தீர்வை அதிகரிப்பு செய்யப்பட்டதாக நிதி அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளர்களான லலித் மண்சிங் மற்றும் பேராசிரியர் சுக் டியோ முனி ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். குறித்த சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில் இச்சந்திப்பு...
நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க சபாநாயகர் கரு ஜயசூரிய உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது பிரதமருக்கு உரிய ஆசனத்தை புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இடையூறாக விளங்கமாட்டார் என்றும் சபாநாயகர் அலுவலக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் வர்த்தமானியில்...
“நான் இந்தக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கை இணைக்கவிடமாட்டேன். சமஷ்டியை ஒருபோதும் வழங்கமாட்டேன். இவற்றைச் செய்யவேண்டுமாயின் என்னைக் கொல்லவேண்டும்” இவ்வாறு கடும்தொனியில் தெரிவித்தார் மைத்திரிபால சிறிசேன. சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுடான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தத் தகவலை லங்கா தீப இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்த...
தெல்லிப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற தொடருந்து விபத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவனான ஊரெழு வடக்கு சுன்னாகத்தை சேர்ந்த அழகராசா புவனநிதர்சன் (வயது 22) என்பவரே உயிரிழந்தார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மூன்று சூறாவளிகள் இலங்கையைத் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர். இலங்கைக்குக்கு தென்கிழக்கு, தெற்கு மற்றும் தென்மேற்கு திசைகளில் உருவாகியுள்ள இந்த சூறாவளிகள் வரும் இரண்டு வாரங்களுக்குள் இலங்கையைத் தாக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில்100 மில்லிமீற்றர்...
எந்தவொரு வேளையிலும் பிரச்சினைகளை முன்வைக்க தன்னிடம் வரலாம் என்றும் அவற்றைத் தீர்த்து வைக்கத் தயார் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சில் நேற்று (புதன்கிழமை) கடமைகளை ஆரம்பித்தார். தனது கடமைகளைப் பெறுப்பேற்ற பின்னர் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ்...
நாட்டின் பிரதமரை தெரிவு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் முன்வைத்துள்ள இரு நிபந்தனைகளும் தமிழ் மக்களின் நலன்களை அழிக்கும் நிபந்தனைகள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில்...
ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால் ஒரு மணிநேரம் கூட தான் அதிகாரத்தில் இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ஜனாதிபதியின் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற சுதந்திர கட்சியின் அமைப்பாளர்களின் கூட்டத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குரிய காரணத்தையும் அவை தொடர்பாக ஜனாதிபதி என்ற வகையில் முன்னெடுத்த...
பிரதமர் விவகாரத்தில் வல்லரசு நாடுகளின் வழிநடத்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். அலுவலகத்தில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர்...
யாழ். காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அருகில் துப்பாக்கி சூட்டு காயத்துடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடற்படை முகாமின் ஆயுத களஞ்சிய நுழைவாசலுக்கு அருகில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த 19 வயதுடைய அபயரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சிப்பாய் தனது துப்பாக்கியால் தன்னை தானே...
நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சராக பொறுப்பேற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சரவை நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) பதவியேற்றது. அதன்படி, நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
யாழ். பல்கலையில் நடைபெற்ற தமிழமுதம் நிகழ்வுக்கு நிதியுதவி வழங்கியவர்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் யாழ். பல்கலைகழக மாணவர்களால் தமிழமுதம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. குறித்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் என பலரும் நிதியுதவி செய்ததாகவும் அதன்...
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மாத்தறை முதல் திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரையிலான கடற்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 70 -80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடும் என வளிமண்டல...
“தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை உருவாக்கும் பணியில் தமிழ் மக்கள் கவனம் செலுத்தவேண்டும். அதற்கு ஈபிஆர்எல்எப் மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளையும் பேரவையிலிருந்து அகற்றவேண்டும்” என்று வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி, பேரவையின் வடக்கு இணைத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது. இந்த தகவலை முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளியிட்டார். யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்” என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக தமது கீச்சகப் பக்கத்தில் சமந்தா பவர் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகளால், ஜனநாயகம் வீழ்த்தப்பட்டுள்ளது. அவர், பொறுப்புக்கூறலுக்கு...
யாழ்.குடத்தனை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை இரண்டு வீடுகளுக்குள் புகுந்த தாக்குதலாளி ஒருவர் வீட்டில் உறக்கத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு இருந்தார். குறித்த தாக்குதல் சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட...
மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளராக வீ.சிவஞானசோதி நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட 12 அமைச்சரவை அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தமது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டனர். அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு ஹேமசிறி பெர்ணான்டோ – பாதுகாப்பு அமைச்சு...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றமானது தமிழர்களுக்கு எந்தவொரு நன்மையையும் ஏற்படுத்தாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பெரும்பான்மைக் கட்சிகள் வாக்குகளைப் பெறுவதற்கு எவ்வாறான வாக்குறுதிகளையும் அவர்கள் வழங்குவார்கள்....
Loading posts...
All posts loaded
No more posts
